தொள தொள சதை.. இதை விதைகள் சாப்பிட்டால் உடல் எடை குறையுதா.. ரத்தவிருத்திக்கு விதையாகும் "கருப்பு விதை"
சென்னை: விதைகள் எப்போதுமே நம்முடைய உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பவை. சம்பந்தப்பட்ட மரத்தின் மொத்த சத்துக்களை உள்ளடக்கியிருப்பதே அதன் விதைகள் என்பதை மறுக்க முடியாது. அதில் மிக முக்கியமானதுதான், எள் விதைகள்.
எள் விதைகளில், கருப்பு எள், வெள்ளை எள் என்று இரண்டு வகைகள் உள்ளன.. இதில் கருப்பு எள்ளை எடுத்து கொண்டால், கால்சியம், வைட்டமின் - பி, வைட்டமின் - ஈ, இரும்புச் சத்து, செஸமின், செஸமோலின், பைட்டோஸ்டீரால் போன்ற வேதிப்பொருள்களும், லினோலியிக், ஒலியிக் போன்ற அமிலங்களும் நிறைந்தள்ளன.

காயங்கள்: எள்விதைகள், பற்களுக்கும், எலும்புகளுக்கும் பலத்தை தருகிறது.. உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. அத்துடன், உடலில் ஏற்படும் காயங்களையும் விரைந்து குணமாக்க தூண்டுகிறது..
குளிர்ச்சித்தன்மை வாய்ந்தது இந்த எள்கள். இரும்புச்சத்து நிறைந்த இந்த எள்கள்.. ஹீமோகுளோபின் பிரச்சனை உள்ளவர்கள், பனைவெல்லத்துடன் கலந்து எள் சாப்பிடும்போது கூடுதல் பலனை தருகிறது.. இரும்புச்சத்தும் முழுமையாய் கிடைக்கிறது.. மாதவிடாய் பிரச்சனை உள்ள பெண்களும், கருப்பு எள் விதையை, தண்ணீரில் ஊற வைத்து குடித்துவந்தால், மாதவிடாய் சீராகும்..
நார்ச்சத்துக்கள்: ஏகப்பட்ட புரோட்டீன்கள் இந்த எள் விதைகளில உள்ளதால், கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு உள்ளன.. நார்ச்சத்துக்களும் அதிக அதிளவில் உள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கிறது.. குடல் பகுதியும் வலுவடைந்து, சீராக செயல்பட உதவுகிறது. கல்லீரல் ஆரோக்கியம் காக்கப்படுகிறது. சிறுநீரகங்களில் கற்கள் உருவாகுவதை இந்த விதைகள் தடுத்து நிறுத்தும்.
நினைவாற்றலை அதிகரிக்ககூடியது இந்த விதைகள்.. துவர்ப்பு ருசியை கொண்டிருக்கும் இந்த எள் விதைகள், நீரிழிவு நோயாளிகளுக்கும், ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கும், வரப்பிரசாதமாக உள்ளது.. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை இந்த விதைகள் குறைக்கின்றன.. மேலும், கணையத்தில் இன்சுலின் சுரப்பியின் செயலை அதிகரிக்க செய்கிறது..
சரும பாதுகாப்பு: சருமத்துக்கு பாதுகாவலனாக இந்த எள் விதைகள் திகழ்கின்றன.. தோலில் சொறி, சிரங்கு, படை, அரிப்பு போன்ற பாதிப்புகளை மட்டுமல்லாமல், தோலின் சுருக்கங்களையும் நீக்கும் தன்மைகொண்டது. தலைமுடி வளர்ச்சிக்கு எள் விதைகள் உதவுகின்றன. இளைத்தவர்களுக்கு எள்ளு என்று பழமொழியே உள்ளது.. அதனால், உடல் பலவீனமானவர்கள், உடல் இளைத்தவர்கள், எள்ளை உணவில் எடுத்து கொள்ளும்போது, உடல் எடை கிடைக்கும்.
வெள்ளை எள் விதைகளை பொறுத்தவரை நிறைய நார்ச்சத்தும், கால்சியமும் நிறைந்துள்ளன.. 15 சதவீதம் நிறைவுற்ற கொழுப்பு, 41 சதவீதம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் 39 சதவீதம் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளதாம்.. தினமும் 40 கிராம் எள்ளை 2 மாதங்களுக்கு சாப்பிட்டு வந்தால், கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறையுமாம். நுரையீரல் புற்றுநோய், வயிற்று புற்றுநோய், லுகேமியா போன்றவற்றில் உள்ள புற்றுநோய் செல்களை நீக்குவதில் எள் விதைகள் நன்மை பயக்கின்றன.
யாரெல்லாம் சாப்பிடக்கூடாது: சிலருக்கு, எள் சாப்பிட்டால் அலர்ஜி வரலாம்.. இவர்கள் மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் சாப்பிடக்கூடாது.. கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களும், எள் கலந்த உணவை தவிர்க்க வேண்டும். எவ்வளவுதான் நன்மைகள் இருந்தாலும், அளவோடு சாப்பிடுவதே சிறந்தது. வாரத்திற்கு, 40 முதல் 50 கிராம் எள் விதைகளை நாம் உணவாக எடுத்து கொண்டாலே போதும் என்கிறார்கள்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications