Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செம்பருத்தி இலைகள்.. ஹார்ட் அட்டாக் முதல் கேன்சர் வரை விரட்டும் அட்டகாசமான செம்பருத்தி இலை டீ.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: செம்பருத்தி பூக்கள், செம்பருத்தி இலைகள் தலைமுடி வளர்ச்சிக்கு உதவக்கூடியது என அனைவரும் அறிந்ததுதான்.. ஆனால், உடல் உள்ளுறுப்புகள் செயல்பாட்டில் செம்பருத்தி தரும் பயன்கள் என்ன? மருத்துவ நன்மைகள் என்னென்ன தெரியுமா?

கடந்த 2008ல் USDA ஆய்வில் செம்பருத்தியில் டீ குடித்தால், ரத்த அழுத்தம் குறையும் என்று தெரியவந்துள்ளது... அதனால்தான், ஆயுர்வேதத்தில், சிவப்பு மற்றும் வெள்ளை செம்பருத்தியின் முக்கியத்துவம் இன்றுவரை குறையவில்லை. இருமல், முடி உதிர்தல் மற்றும் நரைத்தல் போன்றவற்றிற்கு அருமருந்தாகவும் இந்த செம்பருத்தி திகழ்ந்து வருகிறது.

hibiscus leaves hibiscus flowers tea sembaruthi poo

உடல் உறுப்புகள்: உடல் உறுப்புகள் பலம் பெறவும், சில நோய்களை அண்ட விடாமல் தடுக்கவும் செம்பருத்தியின் பலன்கள் அபரிமிதமானது.. சாதாரண காயங்கள் முதல் புற்றுநோயினால் உருவான காயங்கள் வரை, செம்பருத்தியிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்தான் மருந்தாகிறது.. புற்றுநோயின் ஆரம்ப காலங்களில் இந்த செம்பருத்தியின் பயன் அபாரமானது.. இந்த எண்ணெய்யை பூசுவதால் காயங்கள் விரைந்து ஆறுகின்றன.

செம்பருத்தி இலையில் டீ தயாரித்து குடிக்கும்போது, உடலிலுள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது.. இதனால் தமனிகளின் உள்ளே உள்ள அடைப்புகளும் நீங்கி, கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றது..

இலைகள்: செம்பருத்தி இலைகளில் வைட்டமின் C உள்ளதால், எந்த ரூபத்திலும் இந்த இலையை நாம எடுத்துக் கொள்ளலாம்.. சாதாரண டீ போல குடிக்கலாம் அல்லது சாறு போல பிழிந்து குடிக்கலாம். இப்படி சாறு போல குடிக்கும்போது, ஜலதோஷம், இருமலுக்கான எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. இதனால், சளி, ஜலதோஷம் விரைந்து நீங்குகிறது.

பெண்கள் தவிர்க்கக்கூடாத பூக்களாக இந்த செம்பருத்தி உள்ளது.. காரணம், குறைந்த அளவே ஈஸ்ட்ரோஜன் உள்ள பெண்கள் இதை குடித்து வரும்போது, பலன் கிடைக்கும்.. ஹார்மோன் அளவு சீராகும், மாதவிடாய் தொந்தரவு இருந்தாலும் சரியாகிவிடும்...

தொற்றுகள்: ஆக்ஸிஜன் எதிர்ப்பு பொருட்கள் இந்த செம்பருத்தி இலைகளில் நிறைய உள்ளதால், உடலில் தொற்றுகளையும், கிருமிகளையும் எதிர்த்து போராடுகிறது.. முக்கியமாக சருமத்துக்கு கவசம் போல திகழ்வதால், சருமம் பாதுகாக்கப்படுகிறது.. வயது மூப்பும் தள்ளிப்போடப்படுகிறது.

செம்பருத்தியில் ஆன்டிஆக்ஸிடன்ட்களான அந்தோசயினின்கள், ஃபிளாவனாய்டுகள் , பினாலிக் அமிலங்கள் போன்றவை நிறைந்திருக்கின்றன.. இந்த சக்திவாய்ந்த சேர்மங்கள் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குவதன் மூலம் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராடுகின்றன.. இதனால், இதய நோய், புற்றுநோய் போன்ற ஆபத்தான நோய்களிலிருந்தும் நம்மை காக்க செய்கிறது.

செம்பருத்தி டீ : செம்பருத்தியில் ஏராளமான இரும்புச்சத்து உள்ளது.. ரத்த அணுக்கள் உருவாவதற்கு இந்த சத்து அதிமுக்கியமாகும்.. இதிலுள்ள கால்சியம் எலும்பு ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது..

செம்பருத்தி பூக்களும் குளிர்ச்சி வாய்ந்தவை என்பதால், உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகளும் சீராகும்.. ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், செம்பருத்தி டீயை அடிக்கடி குடிக்கலாம். அல்லது வெறும் பூவின் இதழ்களை மட்டுமே தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கலாம்.. இரவில் சரியாக தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், இந்த செம்பருத்தி பூக்களின் டீயை குடிக்கலாம். இரவில் அதிக நேரம் கண்விழித்து வேலை பார்ப்பவர்களுக்கு இந்த செம்பருத்தி பூக்களின் டீ மிகச்சிறந்த நன்மையை தரும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+