தொள தொள சதையை.. கடகடன்னு குறைக்கும் அருகுலா இலை.. ஆயுளை கூட்டும் ராக்கெட் கீரை.. ஆச்சரிய டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீரைகள் என்றாலே உடலுக்கு நன்மைதான்.. அதிலும் ஆயுளை நீட்டிக்கும் அருகுலா கீரையை பற்றி தெரியுமா? இதன் நன்மைகள் என்னென்ன?

அருகுலா கீரைகளை ராக்கெட் கீரைகள் என்பார்கள்.. பார்ப்பதற்கு கடுகு கீரையை போலவே இருக்கும். பார்ப்பதற்கு மட்டுமல்ல, இதன் ருசியும்கூட கடுகை போலவே லேசாக காரத்தன்மையுடன் இருக்கும்.. மிக சாதாரணமாக, சாலைகளிலும், வயல்களிலும் வளரக்கூடிய கீரை இது.. ஆனால் இதன் மருத்துவ பலன் பலருக்கும் தெரிவதில்லை.

Do you know Health benefits of Arugula Keerai and Rocket Leaves are the Best food for Weight Loss

இரும்பு சத்துக்கள்: ஆரோக்கியமான கொழுப்பு, கார்போபோஹைட்ரேட், வைட்டமின் A, K, C, M, பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மாங்கனீஸ், காப்பர், செலீனியம், ஜிங்க்,போன்றவை இந்த கீரையில் அடங்கியிருக்கின்றன.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இந்த கீரை பெஸ்ட் பலனை தரக்கூடியது.. காரணம், இந்த கீரையில் கலோரிகள் கிடையாது... வெறும் 100 கிராம் எடுத்துக்கொண்டாலே, கணிசமான கலோரிகளை வெளியேற்றிவிடுமாம்.. அத்துடன் கெட்ட கொழுப்புகளையும் கரைத்து வெளியேற்றுகிறது.. முக்கியமாக, ரத்தக்குழாய்களில் உள்ள கழிவுகளையும் வெளியேற்றுகிறது.. உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்களும், விளையாட்டு வீரர்களும் இந்த கீரையை தவறவிடக்கூடாது என்கிறார்கள்.

அனீமியா: இயல்பாகவே இரும்பு சத்து நிறைந்த கீரை என்பதால், ரத்தசோகை பிரச்சனை உள்ளவர்கள் இதை உணவில் அடிக்கடி சாப்பிட்டு வரலாம்.. இதயத்துக்கான ரத்தம் ஓட்டம் மட்டுமின்றி இதயம் தொடர்பான பிரச்சனைகளையும் இந்த கீரைகள் சீர்செய்யும்.. பீட்டா கரோட்டின், வைட்டமின் A நிறைந்துள்ளதால், கண்களுக்கு மிகவும் நன்மை பயக்கிறது. கண்புரை உருவாகாமல் தடுப்பதுடன், மற்ற பார்வை குறைபாடுகளையும் முன்கூட்டியே தடுத்து நிறுத்துகிறது..

தொற்று பாதிப்புகளும், வைரஸ் காய்ச்சல்களும், நம்மை நெருங்காமல் தடுக்கிறது.. இந்த கீரையையும், மற்ற கீரைகளை போலவே மசியல் செய்து சாப்பிடலாம்.. அல்லது சாலட் செய்யலாம் அல்லது சூப் செய்து சாப்பிடலாம்.. இதனால், அஜீரண பிரச்சனை தீரும்.. வாய்ப்புண்களும், வயிற்று புண்களும் ஆறிவிடும். மூட்டுவலி பிரச்சனை உள்ளவர்களுக்கு தலைசிறந்த மருந்து இந்த கீரைகள்.

தாய்மார்கள்: கர்ப்பிணி பெண்கள், கர்ப்ப காலத்திலும், தாய்ப்பால் புகட்டும் காலத்திலும், இந்த கீரையை சாப்பிட்டால் நன்மைபயக்கும் என்கிறார்கள்.. ஆனால், இந்த கீரையை யார் மருந்தாக எடுத்து கொள்வதானாலும், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்து கொள்வது மிகவும் பாதுகாப்பானது.

உள்ளுறுப்புகளுக்கு மட்டுமல்லாமல், தலைமுடி வளர்ச்சியிலும், சருமத்தின் பாதுகாப்பிலும் அருகுலா செய்யும் நன்மைகள் ஏராளம். இந்த கீரையுடன் சிறிது புதினாவையும் சேர்த்து அரைத்து, முகத்தில் பூசி வந்தாலே, பருக்கள் மறையும்.. சருமம் பாதுகாக்கப்படும். அதனால்தான், நிறைய அழகு சாதன பொருட்களில் மூலப்பொருட்களில் இந்த ராக்கெட் இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஷாம்ப்புகள்: அதேபோல, ஷாம்புகளிலும், கண்டிஷனர்களிலும் இந்த அருகுலா கீரை மூலப்பொருளாக சேர்க்கப்படுகின்றன.. அவ்வளவு ஏன்? ஆண்களுக்கு வழுக்கை விழாமல், முடி உதிர்வை தடுக்கவும் இந்த கீரைகள் உதவி செய்கிறதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+