வாழைத்தண்டு.. குடல் நலனுக்கு 5 ஜூஸ்.. வெறும் எலுமிச்சையுடன் கற்றாழையை சேர்த்தால் என்னாகும் தெரியுமா?
சென்னை: குடலை சுத்தமாக வைத்து கொள்வதே, ஆரோக்கியத்தின் அடிப்படையாகும்.. அந்தவகையில், குடலை சுத்தப்படுத்தக்கூடிய ஒருசில உணவு வகைகளை பார்ப்போம்.
வாழைத்தண்டு நிறைய உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.. வாழைத்தண்டில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கம் மேம்பட உதவும். நம் உடலை அமிலத்தன்மை பிரச்சனையில் இருந்து காப்பாற்றும். குடலை சுத்தம் செய்வதற்கும் நார்ச்சத்து மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

வாழைத்தண்டு: இந்த வாழைத்தண்டில் சாறு எடுத்து, அதனை வடிகட்டாமல் குடித்தால், நார்சத்து அதிகமாகவே கிடைக்கும்,.. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்வது தடுக்கப்படும். இரும்புச்சத்து மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யும்.
இந்த வாழைத்தண்டு சாறு, கொழுப்பு மட்டுமல்லாமல், வயிறு சம்பந்தமான எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக அமையும். நெஞ்செரிச்சல் அதிகமாய் இருந்தால், காலையில் வெறும் வயிற்றில் இந்த ஜூஸ் குடித்தால் தீர்வு கிடைக்கும்.. வாழைத்தண்டை பொரியல் செய்து சாப்பிட்டால் குடலில் சிக்கியுள்ள முடி, நஞ்சு போன்றவை வெளியேறிவிடும். வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும்.
புளித்த உணவுகள்: அதேபோல, புளித்த உணவுகள் அல்லது புளிக்க வைக்கப்பட்ட உணவுகளை அடிக்கடி எடுத்து கொள்வது குடலை சுத்தப்படுத்த உதவுகிறதாம்.. இந்த உணவிலுள்ள புரோபயாடிக்குகள், முழுக்க முழுக்க பாக்டீரியாக்களால் நிரம்பியுள்ளதால், குடல் ஆரோக்கியத்தை காக்கிறது..
பழங்களில் வைட்டமின் C நிறைந்த உணவுகள் மிகவும் நன்மை தரக்கூடியது. ஆன்டி ஆக்சிடென்கள் அதிகம் உள்ளன.. எலுமிச்சம் சாறு அடிக்கடி குடிக்கலாம்.. அல்லது சூடான நீரில் எலுமிச்சம் சாறு பிழிந்து, உப்பு, தேன் கலந்து குடித்தால், குடல் சுத்தமாகும்.. அல்லது எலுமிச்சம் சாறுடன், கற்றாழை சதைப்பகுதியையும் சேர்த்து அரைத்து வெறும் வயிற்றில் குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கும்..
ஆப்பிள்: அதேபோல, தினமும் ஒரு ஆப்பிளை முழுமையாக சாப்பிட வேண்டும்.. அல்லது ஜூஸ் போட்டு, வடிகட்டாமல் குடிப்பதால், குடல் சுத்தமாகும். கேரட், பீட்ரூட் இரண்டையும் ஜூஸ் போட்டு குடிக்கலாம்.. அவகேடோ என்ற வெண்ணெய்ப்பழமும், குடலை சுத்தம் செய்வதில் உதவுகிறது.. இதிலுள்ள கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள், குடலியக்கத்தின் ஆரோக்கியம் மற்றும் குடல் சுத்தத்தை ஊக்குவிக்கிறது..
சமையலில், நிறைய இஞ்சி சேர்த்து சமைக்க வேண்டும்.. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்து கொள்ள வேண்டும்.. குறிப்பாக, முட்டைக்கோஸ், பீன்ஸ் வகைகள், தக்காளி, விதைகள், பட்டாணி, ப்ரோக்கோலி, கொட்டைகள், தானியங்கள், கீரைகள், போன்றவைகளை சமைத்து சாப்பிடும்போது, நச்சுக்கள், கழிவுகள் வெளியேறி, குடல் ஆரோக்கியம் காக்கப்படும்.

தண்ணீர்: இவைகளுடன் நமக்கு கைகொடுப்பது தண்ணீர் ஆகும்.. கழிவுகளை வெளியேற்றுவதில் நாம் குடிக்கும் தண்ணீருக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.. காரணம், குடலில் போதுமான அளவு நீர்ச்சத்து இருந்தாலே, பெரும்பாலும் கழிவுகள் தேங்காது.. நீர்ச்சத்து குறையும்போதுதான், அதனால் மலச்சிக்கல் ஏற்பட்டு, குடலில் டாக்ஸின்களின் அளவும் கூடிவிடும்..
தண்ணீருடன் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து குடித்தால், அதனால் குடலை சுத்தம் செய்யும் செயல்முறையானது வேகப்படுத்தப்படும். அதுவும், காலையில் சூடான தண்ணீர் குடிப்பது, கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவும்..
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications