நீங்க "உடல் எடையை" குறையணுமா? கொலஸ்ட்ராலை அடியோடு நீக்கும் அற்புத உணவு இதுதான்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: உடல் எடையை குறைக்க வேண்டுமானால், அரிசியை முதலில் குறைக்க சொல்வார்கள்.. ஆனால், உடல்எடை குறைப்புக்கு பெரிதும் துணைபுரிவது சிலவகை அரிசிகள் என்பது ஆச்சரியமான உண்மை.
அப்படிப்பட்ட சில அரிசிகளில் முக்கியமானதுதான் கருப்பு கவுனி.. இது வட அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது. இந்தியாவில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அதிகமாக விளைவிக்கப்படுகிறது. ஏகப்பட்ட நார்ச்சத்தும், ஊட்டச்சத்தும், இயற்கையாகவே ஆக்ஸிஜனேற்ற பண்பும் இதில் அடங்கி உள்ளன.

சத்துக்கள்: இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், தாமிரம் போன்ற சத்துக்கள் உள்ளதால்தான், உடல் எடையை குறைப்பவர்களின் கவனம், இந்த கருப்பு அரிசி பக்கம் திரும்பி உள்ளது.
கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகமாக உள்ளவர்கள், இந்த கருப்பு கவுனி அரிசியை உணவில் சேர்த்துக்கொண்டால், எளிதில் கட்டுப்படுத்தலாம்... செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்னை, வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனை, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை என அனைத்தையுமே இந்த அரிசி தீர்ப்பதால் கல்லீரல் ஆரோக்கியம் பெறுகிறது.
நார்ச்சத்துக்கள்: இந்த வகை அரிசியில் நார்ச்சத்து மட்டுமே அதிகம் உள்ளதால், கொஞ்சம் சாப்பிட்டாலும், வயிறு நிரம்ப சாப்பிட்ட உணர்வைத் தந்துவிடுகிறது.. வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது இந்த அரிசியை எடுத்து கொள்ளலாம்.. வழக்கமான இட்லி, தோசை, பாயசம், சர்க்கரை பொங்கல் என இப்படி நிறைய உணவுகள் இந்த அரிசியில் செய்தாலும், உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், கஞ்சி வைத்து சாப்பிடலாம்.
சூப்பர் கஞ்சி: அந்த கஞ்சியை எப்படி தயார் செய்வது தெரியுமா? கஞ்சி செய்முறை: ஒரு டம்ளர் அரிசியை, 3 முறை நன்றாக கழுவி, 12 டம்ளர் தண்ணீரை சேர்த்து, 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
குக்கரில், 1 ஸ்பூன் எண்ணெய், சீரகம், 5 மிளகு, 5 பல் பூண்டு, 10 - 15 நறுக்கிய சின்ன வெங்காயம், 100 கி பாசிப்பருப்பு, மஞ்சள் தூள், ஊற வைத்த அரிசி, பிறகு, அரிசியின் அளவில் 5 மடங்கு தண்ணீர் கூடுதலாக சேர்த்து வேகவிட வேண்டும். 10 அல்லது 12 விசில் வரை விட்டு குக்கரை இறக்கி, உப்பு சேர்த்து கொள்ளலாம். அதிக நேரம் கருப்பு கவனி அரிசியை வேக வைத்தாலும் ருசி அதிகமாகவே கிடைக்கும்.. அதேபோல, இந்த பொருட்கள் எதுவுமே இல்லாமல், வெறும் கருப்பு அரிசியை மட்டும் தனியாக வேக வைத்தும் கஞ்சி செய்யலாம்.
மூங்கில் அரிசி: அடுத்ததாக மூங்கில் அரிசியும் உடல் எடை குறைப்புக்கு உதவுகிறது.. மூங்கில் அரிசியை முலயாரி என்பார்கள்.. இதில், கார்போஹைட்ரேட் மட்டுமல்ல, நார்ச்சத்து, புரதம் என ஏகப்பட்டவை நிறைந்திருக்கிறது. கொழுப்பு சத்து அவ்வளவாக இல்லாத இந்த அரிசி, உடல் எடையை குறைக்க உபயோகமாகிறது.. உடலிலுள்ள நச்சுக்களை இந்த அரிசி நீக்குகிறது.
இதேபோல, சிவப்பு அரிசியும் வெயிட் லாஸுக்கு பயன்படுகிறது.. செறிவான நார்ச்சத்துக்களின் மூல ஆதாரமாக இந்த அரிசி திகழ்கிறது.. அதனால், செரிமானம் எளிதாகி, நச்சுக்களை எளிதில் வெளியேற்றி, குடல் இயக்கத்தையும் சீராக்குகிறது.. மாங்கனீசு அதிகம் உள்ள இந்த அரிசியில், கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், உடலுக்கு தேவையான கலோரி எடுத்து கொள்வது தடுக்கப்படுகிறது.
பழுப்பு அரிசி: பழுப்பு அரிசியும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.. கைக்குத்தல் அரிசியைதான் பழுப்பு அரிசி என்பார்கள். இந்த பழுப்பு அரிசியில் உள்ள காமா அமினோ பியட்ரிக் அமிலமானது, நம்முடைய உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை நீக்குகிறது. உடல் எடையை குறைக்கும் நார்ச்சத்து, ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் மிகுதியாக உள்ளதால், இந்த அரிசியையும் தவிர்க்க கூடாது.












Click it and Unblock the Notifications