வெறும் பழம் போதும்.. மூட்டு வலிக்கு "முடிவு" கட்டும் வெண்ணெய்ப்பழம்.. மகிமை தரும் மஞ்சளை விடாதீங்க
சென்னை: பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை வாட்டியெடுக்கும் பிரச்சனையில் மூட்டுவலியும் ஒன்று.. அதுவும் தற்போது மழைக்காலம் துவங்கிவிட்ட நிலையில், இந்த மூட்டுவலியை குறைக்க என்ன உணவுகளை சாப்பிடலாம்?
மூட்டு விறைப்பு, மூட்டு வீக்கம், மூட்டு வலி போன்ற பிரச்சனைகளில் பெரும்பாலும் வயதானவர்கள் அவதிக்கு உள்ளாகிறார்கள்.. இதற்கு சில காரணங்களும் உள்ளன.. காலநிலை மாற்றம் இதில் பிரதான காரணமாக இருக்கிறது..

காரணங்கள்: அதேபோல வயது மூப்பு காரணமாக, மூட்டுகளில் மசகு எண்ணெய், கால்சியம் குறைபாடு போன்றவைகளாலும் மூட்டுவலி ஏற்படுகிறது. உணவுப்பழக்கம், சுகாதார முறை போன்றவையும் மூட்டு வலிக்கு மற்றொரு காரணமாகிறது. உணவு முறைகளை சரியாக கடைப்பிடித்தாலே, மூட்டு வலி பிரச்சனையை விரட்டிவிடலாம்.
எலும்புகளுக்கு பலமாக இருக்கவும், சிறப்பாக செயல்படவும், கால்சியம் மிகவும் முக்கியம்.. அந்த வகையில் எலும்பு சூப் வைத்து குடிக்கலாம்.. குளுக்கோசமைன், காண்ட்ராய்டின், அமினோ அமிலங்கள் போன்றவை நிறைந்திருப்பதால், மூட்டு வலியை மெல்ல குறைக்கும்.. அதேபோல, ஆட்டுக்கால் சூப் குடிக்கலாம்.. கலோரி கட்டுப்பாட்டை இந்த ஆட்டுக்கால் சூப் ஊக்குவிக்கிறது.
மூட்டுவலி: பொதுவாக மூட்டுவலி முதுகுவலி மூட்டு தேய்மானம் போன்ற எலும்பு சம்பந்தமான பிரச்சினைகளினால் அவதிப்படுபவர்களுக்கு இந்த ஆட்டுக்கால் சூப் மிகவும் நல்லது. இருதய தசைகளையும் பலப்படுத்தும்..
இந்த சூப், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற கனிமங்களின் ஆதாரமாக விளங்குகிறது.. அத்துடன், கொலாஜன், ப்ரோளின், ஜெலட்டின், ஹியலுரோனிக் அமிலம் போன்றவையும் அதிகமாக உள்ளது.. கொலஸ்ட்ரால் அளவு மேம்படுகிறது . இதய ஆரோக்கியம் அதிகரிக்கிறது. உடம்பில் உள்ள நச்சுகள் நீங்குகிறது.. ரத்த சர்க்கரை அளவு சீராகிறது. நீரிழிவு அபாயம் குறைக்கப்படுகிறது.
மீன்கள்: அதேபோல மீன்களை வாரம் 2 முறை அதாவது 3 முதல் 4 அவுன்ஸ் சாப்பிட்டு வரலாம்.. குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் D அதிகமுள்ள சாலமன், கானாங்கெளுத்தி உள்ளிட்ட கொழுப்பு மீன்களை சாப்பிட்டால், மூட்டுகளுக்கு பலம் கிடைக்கும்.. மூட்டு வலியும் குறையும்.. நோயெதிர்ப்பு உயிரணு உற்பத்தியையும் அதிகரிக்கும்..
குறிப்பாக சால்மன் மீனில், வைட்டமின், தாதுக்கள், ஒமேகா 3 போன்றவற்றுடன் கால்சியம் சத்தும் உள்ளது. அதாவது சால்மீனில் மட்டும் 340 மிகி கால்சியம் இருக்கிறது என்கிறார்கள்.
கெண்டை மீன்கள்: இதற்கு அடுத்தபடியாக கெண்டை மீன்கள் எனப்படும் ஜிலேபி மீன்களை சொல்லலாம். சால்மன் மீன்களுக்கு அடுத்தபடியாக, இதில், மீனிலும் கால்சியம்அதிகமுள்ளதால், எலும்புகள் ஆரோக்கியத்துக்கும், உறுதித்தன்மைக்கும் உதவியாக இருக்கிறது.
சைவ உணவு சாப்பிடுபவர்களாக இருந்தால். சோயா பீன்ஸ் இதற்கு பெரிதும் உதவுகிறது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், புரோட்டீன், நார்ச்சத்து என பல்வேறு சத்துக்கள் இந்த சோயாவில் உள்ளன. அதேபோல சமையலில், அழற்சி மற்றும் எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இஞ்சி, பூண்டு அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். இவை இரண்டுமே மூட்டுவலியை குறைக்கிறது.
வெந்தயம் உணவில் தாராளமாக சேர்க்கலாம்.. முழங்கால் வலிக்கு இந்த வெந்தய விதைகள் நிவாரணம் தருகிறது.. வெந்தயத்தை பொடி செய்து, அரை டீஸ்பூன் தினமும் 2 வேளை, உணவு சாப்பிட்டபிறகு வெதுவெதுப்பான நீரில் எடுத்து கொண்டால், நல்ல பலன் கிடைக்கும்.
மஞ்சள்: 2006 ல் நடந்த ஒரு ஆய்வில், ருமடாய்டு ஆர்த்ரிடிஸ் மற்றும் ஆஸ்டியோ போரோசிஸ் பிரச்சனைகளை தடுப்பதில் மஞ்சளுக்கு மிகப்பெரிய பங்கு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
ப்ரோக்கோலி, கீரை வகைகள், ஆப்பிள், பாதாம் பருப்பு, ஆளி விதை, சியா விதை போன்றவைகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். துளிசியில் டீ போட்டு குடிக்கலாம்.. அல்லது கிரீன் டீ குடிக்கலாம்.. கீல்வாதத்திற்கு இவை மிகவும் பயன் தரும்.. சர்க்கரை பதில் வெல்லம் சேர்த்து கொள்ளலாம்.. முழங்கால் வலிக்கு, வெல்லம் நிவாரணத்தை தரக்கூடியது.
வெண்ணெய்ப்பழம்: வெண்ணெய்ப்பழம் என்று சொல்லக்கூடிய அவகேடோ பழத்தில் நிறைய சத்துக்கள் உள்ளன.. மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K1, B6, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், தாது உப்புக்கள், நல்ல கொழுப்புக்கள், என பல சத்துக்கள் உள்ளதால், மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு, இந்த பழங்கள் மிகவும் பயன்படுகிறது..
காரணம், சமீபத்தில் ஆர்த்ரிடிஸ் ஆய்வுகளில் அவகேடோ பழத்தில் உள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்சனைகளை சரிசெய்வதாக தெரிய வந்துள்ளது.. அதனால், ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம், ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்,
இவைகளுடன் முறையான உடற்பயிற்சி முக்கியம்.. உடல் எடையை சரியாக நிர்வகிக வேண்டும்.. உடலை எப்போதுமே கதகதப்பாகவும், சூடாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க வேண்டும்..












Click it and Unblock the Notifications