கோழிக்கறியை வாங்கறீங்களா.. கோழிக்கால்களை இனி தூக்கி போடாதீங்க.. சிக்கன் சாப்பிட்டால் உடல் எடை கூடுமா?
சென்னை: சிக்கன் நல்லதா? கெட்டதா? கோழிக்கறி சாப்பிட்டால் உடல் எடை கூடுமா? என்ற சந்தேகங்கள் தொடர்ந்து நிலவிகொண்டே வருகின்றன.
கோழிக்கறி நல்லது என்றாலும், மொத்த கோழிக்கறியுமே சாப்பிடுவது நல்லதில்லை.. சிக்கனில் ஒருசில பகுதிகளே உடலுக்கு நல்லது என்கிறார்கள்.. காரணம், சில பகுதிகளில் கொழுப்பு நிறைந்து இருக்கின்றன..

இதய நோய்கள்: நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள், மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு, சிக்கன் சிறந்த உணவாக உள்ளது.. சிக்கன் சாப்பிடுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காது என்று நம்பப்படுகிறது. இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் மற்றும் B, A, D போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், நீரிழிவு நோயாளிகளுக்கு சிக்கனே சிறந்த உணவாக இருக்கும் என்கிறார்கள்..
சிக்கனில் கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றாலும், நியாசின் என்ற சத்தும் உள்ளதால், கொலஸ்ட்ரைலை குறைக்கும் தன்மை கொண்டதாக உள்ளது.. சூடுத்தன்மை வாய்ந்த சிக்கனை வேக வைத்து சூப் வைத்து, மிளகுத்தூள் சேர்த்து குடித்தால், சளி, இருமல், மூக்கடைப்பு, தலைபாரம் போன்றவை நீங்குகின்றன.. அமினோ ஆசிட் நிறைந்துள்ளதால், குழந்தைகளுக்கு சிக்கன் அவசியமான உணவாக உள்ளது.
மன அழுத்தம்: சிக்கனில் செலீனியம் என்ற சத்து உள்ளதால், மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.. வைட்டமின் B5 உள்ளதால், மன அழுத்தத்தை சிக்கன் விடுவிக்கிறது.. சிக்கனில், வைட்டமின் B6 உள்ளதால், இதய நோய்கள் தடுத்து நிறுத்த உதவுகிறது.. சிக்கனில், பாஸ்பரஸ், கால்சியம் நிறைந்துள்ளதால், எலும்புகளுக்கும், பற்களுக்கும் பலத்தையும், பாதுகாப்பையும் தருகிறது.
சிக்கனில் மக்னீசியம் உள்ளதால், பெண்களுக்கு ஏற்படும் வயிறு வலி நீங்குகிறது.. சிக்கனில் ஜிங்க் உள்ளதால், ஆண்களின் டெஸ்ட்ரோஜன் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது.. சிக்கனில், புரதம் உள்ளதால், பெண்களுக்கு அவசியமான உணவாக கருதப்படுகிறது.
கோழிக்கு ஊசியா: அதேசமயம், எல்லா பிராய்லர் கோழிகளுக்குமே ஹார்மோன் ஊசிகள் போடுவதில்லையாம்.. பிராய்லர் கோழிக்கு ஊசி செலுத்துவது நோய் எதிர்ப்பு சக்திக்காக செலுத்தப்படும் தடுப்பூசி என்றும் சொல்கிறார்கள். ஒரு கோழிக்கு ஹார்மோன் ஊசி செலுத்த வேண்டுமானால், ரூ. 20,000 செலவு ஆகுமாம்.. அதனால், ஊட்டச்சத்து நிறைந்த தீவனங்கள் இந்த கோழிகளுக்கு வழங்குவதாகவும் சொல்கிறார்கள்.
கால்நடை மருத்துவர்களால் அங்கீகரிக்கப்பட்ட புரதம் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த தீவனம் மட்டுமே வழங்குவதாகவும் கூறுகிறார்கள். எனினும், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள், அல்லது சிகிச்சைக்கு மருந்து எடுத்து கொள்பவர்கள், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்று சாப்பிடலாம். அதேபோல, பிரியாணி, ஷவர்மா, ப்ரைட் ரைஸ், சிக்கன் 65 போன்று பொரித்த சிக்கனை சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமாம்..
கோழி கால்கள்: குறிப்பாக, கோழி கால்கள், இறக்கைகள், தொடைப்பகுதியில் கொழுப்பு அதிகமாம். அதேபோல, கோழியின் மார்பு பகுதியில் நிறைய புரோட்டீன்கள் உள்ளது. அதனால், எப்போது சிக்கனை வாங்கினாலும், மார்புப்பகுதி சதையை எடுத்துக்கொண்டால் நல்லது என்கிறார்கள்.
அதேபோல, கோழிக்கறியை, வறுத்து, எண்ணெய்யில் பொறித்து, நிறைய மசாலாக்கள் சேர்த்து சாப்பிடுவதைவிட, முருங்கைக்காய், கத்தரிக்காய், உருளைக்கிழங்கு போன்ற காய்கறிகளை சேர்த்து குழம்பாக சமைத்து சாப்பிடும்போது, கூடுதல் பலனும், முழு சத்தும் கிடைக்கிறது என்கிறார்கள்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications