வெறும் வயிற்றிலே "இது" மட்டும் போதுமாம்.. கொலஸ்ட்ரால் கரைந்து ஓடிருமாம்.. சூப்பர் டிஸ்ப் பாருங்க
சென்னை: உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கொலஸ்ட்ரால் அளவை அடிக்கடி கவனிக்க வேண்டும்.. உங்கள் உடம்பில் கொலஸ்ட்ரால் அதிகமாகிவிட்டால், அதற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? கொலஸ்ட்ராலை குறைக்க என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா?
கல்லீரலை உருவாக்கும் கொழுப்பு போன்ற பொருள்தான் இந்த கொலஸ்ட்ரால் ஆகும்.. இது நம்முடைய அவசியம் என்றாலும்கூட, சில நேரங்களில் உடலில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவும் அதிகரித்துவிடுகிறது.

அதிக கொலஸ்ட்ரால் என்றாலே அது மிகப்பெரிய பிரச்சனையாகும்.. குறிப்பாக, பக்கவாதம், மாரடைப்பு, இதய நோய், உயர் ரத்த அழுத்தம் என பெரிய பெரிய வியாதிகள் குடிகொள்ள அடிப்படை விஷயமாக, இந்த கொலஸ்ட்ரால் அமைந்துவிடுகிறது. அறிகுறிகள் கொலஸ்ட்ரால் நம்முடைய உடலில் அதிகமாகிவிட்டது என்பதை சில அறிகுறிகள் மூலம் நாமே அறிந்து கொள்ள முடியம்..
கொழுப்பு கட்டிகள்: கொழுப்புகள் ஆங்காங்கே நம்முடைய உடலில் சேர்ந்து கொள்ளும்.. இவைகள் சருமத்தில் வெளிப்படவும் செய்யும்.. சருமத்தில், மஞ்சள் கலரில் கொழுப்பு போன்று புடைப்பு காணப்படும்.. தோலில் இல்லாவிட்டாலும்கூட, சிலசமயம், கண்களின் ஓரத்தில் புடைப்புகள் தோலை ஒட்டி வளரும்.. அல்லது உள்ளங்கைகளில் கோடு போல தோன்றும்.. அல்லது கால்களிலும் தோன்றும்..
இந்த கட்டிகள் எல்லாம் கொழுப்பு சேர்ம கட்டிகள் என்பார்கள். இதனால் ரத்த ஓட்டம் கிடைக்காமல், கால் மற்றும் பாதங்களின் நிறம் மாறலாம்.. அல்லது மரத்துப்போகலாம்.. அல்லது பலவீனமாக உணரலாம்.. தொடைகள், கால்விரல்களில் திடீரென பிடிப்புகள், வலிகள், விறைப்பு தன்மைகள் ஏற்படும்.. அதேபோல, கொலஸ்ட்ரால் அதிகமாகும்போது உடல் எடை அதிகமாகும்.. நெஞ்சு வலியும் ஏற்படலாம்..
அறிகுறிகள்: இதில் எந்த அறிகுறிகள் தென்பட்டாலும், உடனடியாக டாக்டரை சந்திக்க வேண்டும்.. முறைப்படி பரிசோதனைகள் செய்துக்கொள்ள வேண்டும்.. மாரடைப்பின் பெரும்பாலான அறிகுறிகள் இவை என்பதால், டாக்டரிடம் உடனடியாக சென்றுவிட வேண்டும்.
கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பது உறுதியானால், அதனை ஆரோக்கியமான உணவுமுறைகளிலேயே கட்டுப்படுத்தலாம்.. கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த முழு தானியங்களை சாப்பிட பழகி கொள்ள வேண்டும்.. காரணம், இவைகளில் நிறைய நார்ச்சத்து உள்ளதால் கொழுப்புகள் குறைய தொடங்கும்.. சிறுதானியங்களில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது.
ஆளி விதை, சீயா விதை: கடுக்காய், வால்நட்ஸ், சூரியகாந்தி விதைகள், பாதாம் பருப்பு போன்றவைகளை உணவில் சேர்க்க வேண்டும்.. வெண்ணெய், பன்னீர் போன்றவற்றை குறைத்துக்கொண்டு, பால், பாலாடைக்கட்டி மற்றும் பால் பொருட்களை சாப்பிட வேண்டும்.. மீன்களில் இறால் மீன்களை குறைத்து கொண்டு, சால்மன், மத்தி மீன்களை சாப்பிட வேண்டும்.
நிறைய நார்ச்சத்து நிறைந்த ஆளி விதைகளையும், சியா விதைகளையும், ஓட்ஸ்ஸையும் சாப்பிட வேண்டும்.. சமையலில் இஞ்சி பூண்டு இரண்டையுமே அதிகம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்..
லவங்கப் பட்டையுடன் மிளகு, வேப்ப இலைக்கொழுந்து சேர்த்து விழுது போல அரைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் 2 கிராம் அளவிற்கு சாப்பிட்டு வந்தால், கொழுப்புகள் கரைய தொடங்கும். பூண்டு சிறு துண்டுகளாக நறுக்கி தேனில் ஊறவைத்து சாப்பிடலாம். சின்ன வெங்காயத்தையும் தேனில் ஊறவைத்து சாப்பிடலாம்.
தயிர் பெஸ்ட்: தயிரில் நல்ல பாக்டீரியாக்கள் நிறைய உள்ளதால், குடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.. அடிக்கடி எலுமிச்சம் சாறு, கிரீன் டீ, இஞ்சி டீ, ஆப்பிள் சிடர் வினிகர் பருக வேண்டும்.. இது எல்லாவற்றையும்விட, தினமும் உடற்பயிற்சியும், நிறைய சுடுதண்ணீரும் குடித்து வந்தால், கொலஸ்ட்ரால் குறைய தொடங்கும்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications