முருங்கைக்காய் வாங்கறீங்களா? முருங்கையில் "இது" தெரியாம போச்சே.. கற்பக விருட்சமாகும் முருங்கை மரம்
சென்னை: முருங்கையில் பட்டை, வேர், காய்கள், இலைகள், பிசின், விதை, பூ, என ஒவ்வொரு பாகமும் மருத்துவ குணங்கள் நிறைந்தது.. அதனால்தான், இந்த முருங்கையை கற்பக விருட்சம் என்பார்கள்.
முருங்கைக்காயை எடுத்துக் கொண்டால், இதிலுள்ள பொட்டாசியச் சத்து, வாழைப்பழத்தை விடவும் அதிகமாம்.. இதிலுள்ள புரோட்டின், முட்டைக்கு இணையானதாம். இதிலுள்ள கால்சியம், பசும்பாலைவிட, 4 மடங்கு அதிகமாம்.. இதிலுள்ள வைட்டமின் சி, ஆரஞ்சுப் பழத்தைவிட அதிகமாம்.. மற்ற அனைத்து கீரைகளில் இருப்பதைவிட, இந்த முருங்கைக்கீரையில் ஏகப்பட்ட இரும்புச் சத்துக்கள் உள்ளன.
இதில், முருங்கைக்காயை மட்டும் எடுத்துக் கொண்டால், அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் போன்றவை உள்ளன.. இது எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.. மூலநோய் உள்ளவர்கள், சளி பிரச்சனை பாதிப்பு உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்களுக்கு முருங்கைக்காய் அருமருந்தாகும்.

நோயாளிகள்: பிஞ்சுக்காய், முற்றிய காய், நடுத்தர காய் என்று 3 வகையான முருங்கைக்காய் உள்ளன.. இந்த மூன்றுமே ஒவ்வொரு மருத்துவ பயன்பாட்டை தன்னுள் வைத்திருக்கின்றன.. இருந்தாலும், நடுத்தரமான முருங்கைகாயில் கொஞ்சம் அதிகமான சத்துக்கள் இருக்கிறதாம். அதேசமயம், முற்றிய முருங்கைக்காயை அதிகமாக சாப்பிட்டால் வாயுத்தொல்லை அதிகரிக்கும். சளியும் அதிகரிக்கும் என்பதை மறந்துவிடக்கூடாது.
ரத்த சர்க்கரை அளவை சீராக்கி அதை கட்டுக்குள் வைப்பதுதான் முருங்கைக்காயின் பிரதான பயனாகும்.. அதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் பித்தப்பையின் வேலையை மேம்படுத்துவதால் நீரிழிவு நோயாளிக்குக்கும் நன்மைகளை வாரிதருகிறது.
அற்புதக்காய்: முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் ரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. தொண்டை கரகரப்பு, சளி, தொண்டை புண் ஆகியவற்றை சரிசெய்வதில் முருங்கை சிறந்தது.. கீல்வாதம் மற்றும் மூட்டு வலியால் அவதிப்படும் நபர்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. முக்கியமாக, இந்தியாவில் நிலவும் அதிக காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலுக்கு, சிறந்த தீர்வு முருங்கைக்காய்தான் என்கிறார்கள்..
முருங்கைக்காய் விதை: வாரத்தில் 2 முறையாவது முருங்கைக்காய் சாப்பிட்டால், ரத்தமும், சிறுநீரும் சுத்தமாகும்.. முருங்கைக்காயை சமைக்கும்போது, இதன் விதைகளை குழந்தைகளுக்கு சாப்பிட தரலாம்.. காரணம், இந்த விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.. அதேபோல, மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முருங்கைக்காயை அடிக்கடி சாப்பிடலாம்.
கண் பார்வை கோளாறுகள் குறிப்பாக, தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்றவை சரிசெய்யக்கூடியது இந்த முருங்கைக்காய்.. கல்லீரல், மண்ணீரல் பிரச்சனை உள்ளவர்களும் இந்த காய் தீர்வு தருகிறது.
மலட்டுத்தன்மை: முருங்கைக்காயை அடிக்கடி ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை குறைபாடு போன்ற பிரச்சனைகள் எளிதில் தீர்கின்றன.. ஆண்களுக்கு உயிரணுக்களை கூட்டுவதுடன், பெண்களுக்கு கருமுட்டை வலுப்பெற இந்த காய் பேருதவி புரிகிறது. ஆக மொத்தம், குறைந்த விலையில், அதிக சத்துக்கள் நிறைந்த அற்புதம்தான் இந்த முருங்கைக்காய்..!!!












Click it and Unblock the Notifications