தொப்பை தொங்குதா.. வெறும் வயிற்றில் இதை ட்ரை பண்ணுங்க.. ஊளைச்சதை அசால்ட்டா குறையுதாமே.. அற்புத டிப்ஸ்
சென்னை: வீட்டிலுள்ள பொருட்களை வைத்தே, எளிமையான முறையில், இயற்கையான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.. அந்தவகையில், வெறும் வயிற்றில் குடிக்கும் ஒருசில பானங்கள் குறித்து பார்க்கலாம்.
காலையில் தூங்கி எழுந்ததுமே, காபி, டீ குடித்து பழகியவர்களுக்கு, இவை இரண்டுமே இல்லாவிட்டால் பொழுது விடிந்ததுபோலவே இருக்காது.. ஆனால், பால் டீ குடிப்பதற்கு பதில், வெந்தய டீ குடித்தால், உடல் எடையில் மாற்றம் தெரியும். தொப்பை குறையும்..

வெந்தய விதைகள்: அதாவது, ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, ஒரு டீஸ்பூன் வெந்தய விதைகள், ஒரு சிறிய துண்டு இலவங்கப்பட்டை, சிறிய துண்டு இஞ்சி போட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு, வடிகட்டி குடிக்கலாம். அல்லது வெந்தயத்திற்கு பதிலாக சீரகம் சேர்த்து குடிக்கலாம்.. சீரகம் வயிற்றை குளிர்வித்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
அதேபோல, மஞ்சள் சேர்த்து டீ போட்டு குடிக்கலாம்.. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, மஞ்சள், இஞ்சி, கருமிளகு சேர்த்து பாதியாக சுண்ட காய்ச்சி இறக்கி, பிறகு தேன் கலந்து குடிக்கலாம். கிரீன் டீ, பிளாக் டீயைவிட, இந்த மஞ்சள் டீ நல்லது.
வேப்பம்பூக்கள்: டீ குடித்து பழக்கம் இல்லாதவர்கள் வேப்பம்பூ சூப் குடிக்கலாம்.. வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து, நீரில் ஊற வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் தொப்பை கரைய துவங்கும்.. அதுபோவே, முருங்கைக்கீரையை சூப் வைத்து குடித்து வந்தாலும், தொப்பை குறையும்..
அல்லது எலுமிச்சம் பழம், புதினா சேர்த்து ஜூஸ் குடிக்கலாம்.. ஒரு வெள்ளரிக்காயை அரைத்து, அதில் புதினா, இஞ்சியை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து, எலுமிச்சம் பழம் பிழிந்து, தண்ணீர் கலந்து குடித்தாலே போதும்.. இதனால் கழிவுகள், நச்சுக்கள் வெளியேறி, உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.. 15 நாட்கள் இப்படி செய்து வந்தாலே, தொப்பை கரைய துவங்குமாம்.
எலுமிச்சம் சாறு: வழக்கமாக, உடல் எடை குறைய நினைப்பவர்கள், வெந்நீரில், எலுமிச்சம் சாறு + தேன் கலந்து குடிப்பார்கள். ஆனால், 3, 4 பூண்டு பற்களை தட்டி, இதனுடன் கலந்து குடித்தால் கூடுதல் பலன் கிடைக்கிறதாம். அல்லது பூண்டு பற்களை மென்று விழுங்கிவிட்டு, இந்த எலுமிச்சம், தேன் கலவையை வெதுவெதுப்பாக குடிக்கலாம்.
உடல் எடையை குறைப்பதற்கு கொய்யா மட்டுமல்லாமல், கொய்யா இலையும் உதவுகிறது. கொய்யா இலையில் டீ போட்டுக் குடிக்கலாம்.. இதில் சிறிது இஞ்சியையும் தட்டி சேர்த்து குடித்தால், உடல் எடை குறைய உறுதுணையாக இருக்கும்.. கெட்ட கொழுப்புகள் கரைந்துவந்துவிடும். அல்லது கொய்யா இலையின் சாறு எடுத்து, அதனுடன் சிறிது தேன் கலந்து சாப்பிட்டு வந்தாலும் உடல் எடை மெல்ல குறையும்..

நெய் பெஸ்ட்: அதேபோல, காலை நேரத்தில், குறைந்த அளவுகளில் நெய் சாப்பிட்டு வந்தாலும் தொப்பை குறையும் என்கிறார்கள். குறைந்த அளவு கொழுப்புள்ள நெய், குடலுக்கு நன்மைகளை தரக்கூடியது.. காபி அல்லது டீயில் ஒரு ஸ்பூன் வெதுவெதுப்பான நெய் கலந்து குடிக்கலாம். அல்லது காலை உணவில் நெய்யை சேர்த்து கொள்ளலாம். இதனால் செரிமானமும் சீராகும் என்கிறார்கள்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)












Click it and Unblock the Notifications