எலுமிச்சம் பழம் எனும் அதிசய கனி.. எலுமிச்சை இலை தரும் நன்மை.. எலுமிச்சம்பழத்தை நிறைய யூஸ் பண்ணலாமா?
சென்னை: எலுமிச்சம்பழங்கள் எப்போதுமே ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா? ஆயுசை கூட்டக்கூடிய அளவுக்கு இந்த பழத்துக்கு திறன் உள்ளது.
உடலில் சேரும் நச்சுக்களை, கழிவுகளை, அகற்றுவதில், எலுமிச்சம் பழத்தின் பங்கு அபாரம்.. ஆனால், அதைவிட எலுமிச்சை பழத்தோலில் இன்னும் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதாம்.

பாத்திரம்: ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து, அதில் எலுமிச்சம் தோலை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தாலே உடல் எடையில் மாற்றம் தென்பட துவங்குமாம்.. தொப்பையிலுள்ள கொழுப்பு கரைய துவங்கும். வயிறு சுத்தமாகும்.. குடல் ஆரோக்கியம் காக்கப்படும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்வதில் எலுமிச்சை தோலுக்கு நிறைய பங்குண்டு..!!
சிட்ரஸ் பழங்களில் அதிமுக்கியமானது எலுமிச்சை.. வைட்டமின் C, நார்ச்சத்து, ஆண்டி ஆக்ஸிடெண்ட், தாத்துக்கள் போன்றவை இந்த பழத்தில் நிறைந்துள்ளன.. எலுமிச்சையை எப்படி பயன்படுத்தினாலும் நமக்கு பலன் கிடைக்கும்,
கொலஸ்ட்ரால்: முக்கியமாக, கொலஸ்ட்லால், ரத்த அழுத்தத்தை குறைக்கிறது இந்த எலுமிச்சை பழம்.. இதனால், இதய ஆரோக்கியம் காக்கப்படுகிறது.. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் முதலில் கையிலெடுப்பது இந்த எலுமிச்சையைதான்.. மெடபாலிஸத்தை மேம்படுத்தும் பண்புகள் இதில் உள்ளன..
அதேபோல, தினமும் எலுமிச்சம் பழச்சாறு குடித்து வந்தால், சிறுநீரகத்தில் கற்கள் சேராது.. கற்கள் உருவாகும் வாய்ப்பு இந்த பழம் குறைத்துவிடுகிறது.. ஹீமோகுளோபின் பிரச்சனை இருப்பவர்கள் தாராளமாக எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம், காரணம், இப்பழத்திலிருக்கும் சிட்ரிக் ஆசிட், தாவர ஆதாரங்களில் உள்ள இரும்புச்சத்து கிடைப்பதற்கு தூண்டுகோலாகிறது..
அஜீரணம்: அஜீரணத்தை போக்குகிறது.. இதனால் மலச்சிக்கலும் தீர்கிறது.. பசியை தூண்டிவிடக்கூடியது பித்தத்தை நீக்கும் தன்மை இந்த பழத்துக்கு உண்டு.. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, தொற்று நோய்கள் வராமலும் தடுக்கப்படுகிறது. குமட்டல் வாந்தியை நிறுத்த எலுமிச்சை கை கொடுக்கிறது.. வாய் துர்நாற்றத்தையும, தலைவலியையும் நீக்குகிறது.. அதேபோல, வாதம், முடக்குவாதம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சை நல்ல மருந்தாகிறது.
அதேசமயம் எலுமிச்சையை அதிகம் பயன்படுத்தினாலும் சில பக்க விளைவுகளும் வந்துவிடும்.. நிறைய எலுமிச்சை சாறு குடிக்கும்போது, வயிறு உபாதைகள், செரிமான செயல்முறையை ஏற்படுத்திவிடும்.. இந்த பழத்தில் நிறைய அமிலத்தன்மை உள்ளதால், பற்களில் கூச்ச உணர்வையும், பல்சிதைவையும் தந்துவிடும்..
பளபளப்பு: அதேபோல, சிலர் முகம் பளபளப்புக்கு, எலுமிச்சையை தடவுவார்கள்.. ஆனால் எல்லாவகையான சருமத்துக்கும் இதை பயன்படுத்த கூடாது.. ஒருவேளை ட்ரை ஸ்கின் இருந்தால், கூடுதல் வறட்சியை தந்துவிடும்..
தலைமுடிக்கும் எலுமிச்சை பழச்சாற்றை தடவுவார்கள்.. பொடுகு தொல்லைக்கு இந்த பழம் பலன்தருகிறது என்றாலும் நேரடியாக பழத்தை தலைக்கு பயன்படுத்தக்கூடாது.. அப்படி பயன்படுத்தினால் தலைமுடி வறண்டுவிடும்.. விரைவிலேயே தலைமுடி நரைத்தும் போய்விடும்..
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications