பல்லெல்லாம் கறையா இருக்கா? இந்த "தோலை" மட்டும் கீழே போடாதீங்க.. மஞ்சள் மஞ்சள் கறையை நீக்கும் அதிசயம்
சென்னை: வெண்மை நிற பற்கள் என்பது நிறைய பேருக்கு கனவாகவே இருந்து வருகிறது.. எனினும், சில சமயம், கறைகள் பற்களில் தங்கிவிடும்.. இந்த கறைகளை நீக்க சில வீட்டு வைத்தியங்களை நாம் செய்து கொள்ளலாம்.. அத்துடன், இதற்காகவே சில பிரத்யேக உணவு முறைகளையும் நாம் கடைப்பிடிக்க வேண்டி உள்ளது.
பற்களில் கூச்சத்திற்கும், பற்களில் கறை படிவதற்கும் நிறைய காரணங்கள் இருக்கலாம்.. பல் கறைகளை எடுத்துக் கொண்டால், பல் சரியாக துலக்காவிட்டாலும், அல்லது சாப்பிட்ட பொருள்கள் பற்களில் தேங்குவதாலும், மஞ்சள் அல்லது பழுப்பு நிற கறைகள் ஏற்பட்டுவிடும்...

இந்த கறைகளை நீக்காவிட்டால், பாக்டீரியாக்கள் உற்பத்தி அதிகமாகி, பற்கள் மற்றும் ஈறுகள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகரித்து விடும் அபாயம் உண்டு. அதனால், கறை படிய துவங்கும்போதே, இதை வீட்டு மருத்துவத்திலேயே சரிசெய்யலாம்.
பேக்கிங் சோடா: இதற்கு பெரிதும் உதவுவது எலுமிச்சம் பழமும், பேக்கிங் சோடாவும்தான்.. இந்த இரண்டையும் ஒன்றாக சேர்த்தும் பயன்படுத்தலாம், அல்லது தனித்தனியாகவும் பயன்படுத்தி, கறைகளை நீக்கலாம்.
எலுமிச்சம் பழ ஜூஸ் + பேக்கிங் சோடா சிறிது கலந்து பேஸ்ட் பதத்துக்கு குழைத்து எடுத்து கொள்ள வேண்டும். சுத்தமான பஞ்சு எடுத்து, பாலை அந்த பேஸ்ட்டில் நனைத்து பற்களில் கறைபடிந்த இடங்களில் தடவி, சிறிது நேரம்கழித்து, பற்களை துலக்கிவிட வேண்டும்,. இப்படி தினமும் செய்து வரும்போது, கறைகள் நீங்கிவிடும்.
ஆரஞ்சு தோல்: அல்லது பேக்கிங் சோடாவுடன், சிறிது ஆலுவேரா ஜெல், சிறிது கிளிசரின், எலுமிச்சம் பழ சாறு கலந்து பற்களை பிரஷ்ஷால் தேய்த்து வந்தால் கறைகள் நீங்கும். ஸ்ட்ராபெர்ரி பழம் + எலுமிச்சை சாறு கலந்து பற்களில் தேய்க்கலாம்.. ஆரஞ்சு பழதோலை, எலுமிச்சம் சாறில் தொட்டு, பற்களை தேய்த்து வரலாம்.
பேக்கிங் சோடா + உப்பு இந்த இரண்டையும் தண்ணீர் கலந்து சேர்ந்து, அதை பிரஷ்ஷால் டூத் பேஸ்ட் போல எடுத்து பற்களை தேய்த்து வரலாம். பிறகு, தண்ணீரில் ஹைட்ரஜன் பெராக்ஸைடு சேர்த்து கலந்து அதை சிறிது சிறிதாக வாயில் ஊற்றி சில விநாடிகள் வைத்திருந்து வாயை கொப்பளிக்கலாம்.. அடுத்து சாதாரண நீரில் ஒருமுறை வாயை கொப்பளித்தால், கறைகள் மெல்ல குறைய ஆரம்பிக்கும்.
எலுமிச்சம்: ஆனால், அதிகமாக எலுமிச்சையை பயன்படுத்த கூடாது.. இதனால், இது பற்சிப்பிகளை அழித்து அதிக உணர்திறனாக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. முன்பெல்லாம், நம் முன்னோர்கள், அடுப்பிலிருந்து பெறப்படும் கரியால் பற்களை தேய்த்து வந்தனர்.. காரணம், பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் உள்ளதால், இவைகளை வைத்து பற்களை தேய்க்கும்போது கறைகள் நீங்கிவிடும். இந்த முறையை இப்போதும் கிராமங்களில் சிலர் பயன்படுத்தி வருகிறார்கள்.
அதேசமயம், பற்களின் கறைகளுக்கும், உணவு முறைகளுக்கும்கூட தொடர்பு உள்ளது.. ஒயின் குடித்தால் பற்களில் கறை வந்துவிடுமாம்.. சிவப்பு மற்றும் வெள்ளை கலர் ஒயின் எதுவானாலும், அதை தவிர்த்துவிட வேண்டும். அதுவும், ரெட் கலர் ஒயின் கண்டிப்பாக ஈறுகளை பாதிப்பதுடன், பற்களையும் கறை படிய வைத்துவிடுமாம்.
காய்கறிகள்: பற்களில் கறை படியாமல், வெள்ளை நிறத்துடன் உங்கள் பற்கள் நீடிக்க வேண்டுமானால், வெண்ணெய், தயிர், லேசான நிறம் கொண்ட பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் எடுத்து கொள்ள வேண்டுமாம்..
சாப்பிட வேண்டிய பழங்கள்: கேரட், பேரிக்காய், ஆப்பிள், அத்திப்பழம், கொய்யாப்பழம், ஸ்ட்ராபெரி போன்ற பழங்களை அதிகமாக சாப்பிட வேண்டும். இதில் கொய்யா சாப்பிடும்போது, அந்த இலையை நீரில் கொதிக்க வைத்து, வாய் கொப்பளித்து வந்தால் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்...
ஆரஞ்சு பழத்தின் மேல் தோலையும் கீழே போட்டுவிடாமல், பற்களை தேய்த்து வந்தால் கறைகள் நீங்கும். இது எல்லாவற்றையும் முக்கியமாக, அதிகமாக தண்ணீர் குடிப்பது, வாயை சுத்தமாக வைத்திருப்பதுடன், பற்களின் வெண்மைக்கும் பாதுகாப்பாக அமையும்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications