இந்த ஒரு ரகசியம் தெரிஞ்சாலே போதும்..கடகடனு வெயிட் குறையும்..வெள்ளை பூக்களின் மருத்துவமும், அதிசயமும்
சென்னை: முருங்கை மரம் போலவே, வாழை மரம் போலவே, வேப்ப மரமும் இயற்கையின் வரப்பிரசாதம் எனலாம்.. இதன் பலன்களும், மருத்துவ குணங்களும் என்னென்ன தெரியுமா?
வேப்பமரம் ஒன்று இருந்தாலே, அந்த வீட்டில் தொற்றுநோய்கள் அண்டாது என்பார்கள்.. இந்த வேப்ப மரத்தில் இருந்து வரும் காற்று மட்டுமே பல நோய்களை தீர்க்கிறது.. ஆரோக்கியத்தை பெருக்குகிறது.
பட்டைகள்: வேப்ப மரத்தின் இலைகள் மட்டுமல்ல, அதன் விதைகள், வேர்கள், பட்டைகள், பூக்கள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. அவ்வளவு ஏன், வேப்ப மரத்தின் துளிர், குச்சிகள்கூட, மருத்துவ குணங்கள் வாய்ந்தவை. அதனால்தான், வேப்ப மரங்களை நம்முடைய முன்னோர்கள் போற்றி பாதுகாத்து வளர்த்து வந்தனர்.. சித்திரை மாதம் வேப்பம்பூக்கள் வசந்த காலங்கள் எனலாம்.. வேப்பம் பூக்கள் வேண்டுமென்றால், இந்த காலத்தில்தான் கிடைக்கும்..

இந்த பூக்களை எப்படியெல்லாம் நாம் பயன்படுத்தலாம் தெரியுமா? வேம்பு என்றாலே கசப்புத்தன்மை வாய்ந்தவை.. அதேபோல வேப்பம்பூக்களும் கசப்பு சுவை நிறைந்தவைதான்..
அஜீரணம்: வாந்தி, அஜீரணக் கோளாறுகள் இருந்தால், வேப்பம்பூவை வறுத்துப்பொடி செய்து வைத்து கொண்டால், மிளகு ரசம், பருப்பு ரசத்துடன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். இதனால், அஜீரண தொந்தரவு நீங்கும்.. குடல் கிருமிகள் அழிந்து, வயிறு சுத்தமாகும்.. அல்லது, வேப்பம் பூவில் துவையல், ரசம் போல செய்து சாப்பிட்டாலும், குமட்டல், வாந்தி பிரச்சனை தீரும்.
வெறுமனே, இந்த பூக்களை தண்ணீரில் போட்டு ஊறவைத்துவிட்டு, அந்த தண்ணீரை குடித்தாலே பல தொந்தரவுகள் நீங்கும்.. நன்றாக பசிக்கும்.. உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அழியும்.. ஆண்மையை அதிகரிக்கும் சக்தி இந்த வேப்பம்பூவுக்கு உள்ளது..
வேப்பம்பூக்கள்: உடல்சூடு உள்ளவர்கள், வேப்பம்பூக்களை மோரில் கலந்து மதிய நேரத்தில் குடிக்கலாம். ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே கிடைக்கும் வேப்பம் பூக்களை, மோர் மிளகாய் போல வத்தலாக பயன்படுத்தலாம்.. சர்க்கரை வியாதி உள்ளவர்கள், வேப்பம் பூவை அடிக்கடி சேர்த்து கொள்ள வேண்டும்.. வேப்பம் பூவை பயன்படுத்தி ஆவி பிடித்தால், தலைவலி, காது வலி பறந்துவிடும்..
இந்த பூக்களை, வெறுமனே தின்றாலும் வயிற்றுக்கோளாறுகள் நீங்கு.. அல்லது வேப்பம் பூவை வெயிலில் காயவைத்து, பொடியாக செய்து, பருப்பு பொடி, இட்லி பொடிகளுடன் கலந்து சாப்பிடலாம்.. இதனால் பித்தம் நீங்கும். அல்லது பச்சடிகளில் சேர்த்து கொள்ளலாம்.
மூலக்கூறுகள்: புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் C போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன.. உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ் இந்த வேப்பம்பூக்கள். காரணம், இதில், நிறைய நார்ச்சத்துக்கள் உள்ளன.. இதனால், பசி கட்டுப்படுத்தப்பட்டு குறைவாக சாப்பிட உதவும்... அதுமட்டுமல்லாமல், இதிலுள்ள மூலக்கூறுகள், அதிக கலோரிகளை எரிக்கவும் தூண்டுகோலாகிறது.

வேப்பம்பூவை தேனுடன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடல் எடை குறையும் என்கிறார்கள். அல்லது வேப்பம் பூக்களை ஒரு கைப்பிடி எடுத்து, நீரில் ஊற வைத்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தாலும் உடல் பருமன் குறையுமாம்.
பச்சடி: வேப்பம் பூவை நெய்யில் வறுத்து தனியே வைத்து கொள்ள வேண்டும். பிறகு, வாணலில், எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து, அதில் சிறிது புளிக்கரைசலை ஊற்றி கொதிக்க விட வேண்டும். பிறகு, வேப்பம் பூ, நாட்டுச்சர்க்கரை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு கெட்டித்தன்மை வாய்ந்ததும் இறக்கினால், பச்சடி ரெடி. இதிலேயே, தேங்காய் துருவலையும் சேர்த்து அரைத்து பயன்படுத்தலாம்.
(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications