கறிவேப்பிலை காட்டும் ஆச்சரியம்.. ஹார்ட் அட்டாக்கை தடுக்கும் அருமையான உணவுகள்.. மிஸ் பண்ணிடாதீங்க
சென்னை: மாரடைப்புக்கும், நம்முடைய உணவு முறைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.. எனினும், மாரடைப்பை தடுக்கவும், இதே உணவுமுறைகள்தான் நமக்கு கைகொடுக்கின்றன.
ஒருவர் வாரத்துக்கு குறைந்தது 150 நிமிடங்களாவது உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்துகிறது. அந்த அளவுக்கு, உடலுழைப்பும், உடற்பயிற்சியின் அவசியமும் வலியுறுத்தப்படுகின்றன. உடலுழைப்பு இல்லாவிட்டால், உடல் பருமன் அதிகமாகி, கெட்ட கொழுப்புகள் பெருகி, இதயத்தை சேதப்படுத்திவிடக்கூடும்.

சர்க்கரை நோயாளிகள்: புகைப்பழக்கமும், மதுபானமும் மொத்த ஆரோக்கியத்தையும் பாழாக்கிவிடக்கூடியது என்பதுடன், மாரடைப்பையும் வரவழைத்து விடக்கூடும். சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய்கள் ஏற்பட நிறைய வாய்ப்புள்ளதால், நீரிழிவு பாதிப்பை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. அதேபோல, ரத்த கொதிப்பு மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்புகளும், இதயத்தின் ரத்தநாளங்களை சேதப்படுத்திவிடும். எனவே, ரத்த கொதிப்பையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியிருக்கிறது.
அதேபோல, சமையல் விவகாரத்தில் முதலில் தவிர்க்க வேண்டியதும், குறைக்க வேண்டியதும், சர்க்கரையும், உப்பும்தானாம்.. இவைகளை குறைத்தாலே, பாதி வியாதிகள் நம்மை நெருங்காது என்கிறார்கள்..
முட்டைக்கோஸ்: இதைத்தவிர, முட்டைகோஸ், பீன்ஸ், பூண்டு உள்ளிட்ட காய்கறிகளும், எல்லாவகையான கீரைகளும், தானியங்களும், சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி, டியூனா போன்ற ஒமேகா 3 அமிலம் நிறைந்த மீன்களும் கட்டாயம் உணவில் இடம்பெறும்படி பார்த்து கொள்ள வேண்டியிருக்கிறது.
இதய ஆரோக்கியத்தை காப்பாத்தில் பூண்டிற்கு முக்கிய பங்கு உள்ளது. வைட்டமின் C அதிகமுள்ள ஆரஞ்சு அதிகம் உணவில் சேர்த்து கொண்டால், கொலஸ்ட்ரால் கட்டுக்குள் போவதுடன், மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறையும்..
பழங்கள்: மாதுளை, திராட்சை போன்ற பழங்கள், மாரடைப்பு ஏற்படுவதை 20 சதவீதம் வரை தடுக்கிறதாம். பொட்டாசியம் நிறைந்த உருளைக்கிழங்கு, இதயத்தை காக்கும் என்றாலும் அதை வறுத்து சாப்பிடக்கூடாது வைட்டமின் E நிறைந்துள்ள பாதாம், பிஸ்தா, வால்நட், வேர்க்கடலை போன்றவையும் இதய ஆரோக்கியத்தை காக்கின்றன.
அதேபோல, சிவப்பு இறைச்சியில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் அதிகம் உள்ளது என்பதால், மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என்கிறார்கள் டாக்டர்கள். ஆனாலும், குறைந்த அளவு மட்டன் சாப்பிடுவதால், ஓரளவு இதை தடுக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆட்டுக்கறி: அதற்காக நிறைய எண்ணெய் நிறைய சேர்த்து மட்டனை சமைக்க கூடாது.. டீப் ஃப்ரை செய்தும் சாப்பிடக்கூடாது.. குறைவான எண்ணெய்யில் வேக வைத்தோ அல்லது கிரில் செய்தோ அல்லது கிரேவியாகவோ அல்லது சூப்பாகவே செய்து சாப்பிட்டால், சத்துக்கள் வீணாகாமல் கிடைக்கும். ஆனால், கேரட், பீன்ஸ், வாழைக்காய், முருங்கைக்காய், காலி பிளவர், தோல் இருக்கும் உருளைக்கிழங்கு போன்றவைகளுடன் சேர்த்து சமைக்கும்போது, மட்டனில் உள்ள கொழுப்புக்கள் உறிஞ்சப்பட்டுவிடும்.
அதைவிட முக்கியமாக கறிவேப்பிலை துவையல் அல்லது கறிவேப்பிலை பொடியை சாப்பிட்டு வந்தால், 75 சதவீதம் இதயம் பாதுகாக்கப்படுகிறதாம். அதேபோல, இரவு உணவுக்கு பிறகு, 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தாலும், மாரடைப்பு ஆபத்து குறைகிறதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications