ஊளை சதை.. மளமளன்னு குறையணுமா? வெயிட் லாஸ் பண்ண இந்த "2 டிப்ஸ்" ட்ரை பண்ணுங்க.. அதென்ன மில்க் ஷேக்
சென்னை: நாம் உண்ணும் உணவில் சில மாற்றங்களை செய்து கொண்டாலே உடல் எடை மெல்ல குறையும் என்கிறார்கள்.. அந்தவகையில், இஞ்சி, பால் இவைகளை கொண்டும் உடல் எடையை குறைக்கலாம் என்கிறார்கள்.
வைட்டமின் A, C, B6, B12, கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து இப்படி அனைத்து சத்துக்களும் இஞ்சியில் உள்ளன.. ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்து, பசியுணர்வையும் தூண்டிவிடுவது இஞ்சியின் பிரதான பண்பாகும்..

கொழுப்பு: உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்றும் பண்பு இஞ்சிக்கு உள்ளது.. அதனால், உடல் எடையை குறைக்க விரும்புவோரும், உடலிலுள்ள கொழுப்பை கரைக்க விரும்புவோரும், ஊளைச்சதையை குறைக்க நினைப்போரும், இஞ்சியை தவறவிடக்கூடாது.. காரணம், இந்த இஞ்சியில் ஜிஞ்சரோல்ஸ், ஷோகோல்ஸ் என்ற சேர்மங்கள் நிறைய உள்ளன.. அந்தவகையில், உடல் எடை குறைக்க முயல்பவர்கள், இந்த இஞ்சியை பல வகைகளில் பயன்படுத்தி நன்மை பெறலாம்.
குறிப்பாக, ஒரு துண்டு இஞ்சியை விழுதாக அரைத்து, ஒரு டம்ளர் மோரில் கரைத்து குடித்து வரும்போது, இடுப்பு பகுதியில் கொழுப்புகள் கரைய துவங்கும்.. அதேபோல, புதிதாக கொழுப்பையும் நம்மை நெருங்க விடாது...
இஞ்சி சாறு: இஞ்சியில் சாறு எடுத்து, அதில் தேனுடன் சேர்த்து தினந்தோறும் காலை ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி கூடுவதுடன், ஊளைச்சதை கரைய ஆரம்பிக்கும். அதேசமயம், இந்த இஞ்சியுடன், சிறிது எலுமிச்சை சாறு சிறிது கலந்து குடித்தால், இன்னும் பலன் கிடைக்கும்.
அடுத்ததாக புரோட்டீன் டிரிங்க் கட்டாயமாக எடுக்க வேண்டும்.. காரணம், தசைகளை சரி செய்து மீண்டும் உருவாக்குவதில் புரோட்டீனுக்கு நிறைய பங்குள்ளது. உணவு மூலம் போதுமான அளவு புரதச்சத்தை பெறுவது, தசை முறிவை தடுப்பதுடன், தசை வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது.
புரோட்டீன் ஷேக்: புரோட்டீன் பவுடரை தண்ணீர் அல்லது பால் போன்ற திரவத்துடன் சேர்த்து தயாரிக்கப்படுவது புரோட்டீன் ஷேக் ஆகும். பொதுவாக ஒரு ஸ்கூப் புரோட்டீன் பவுடரில் 20-30 கிராம் புரோட்டீன் உடலுக்கு கிடைக்கிறது என்றாலும், புரோட்டீன் பவுடர்களுக்குப் பதிலாக இயற்கையான பொருட்களை பயன்படுத்தியே, புரோட்டீன் ஷேக்குகளை நாம் தயாரித்து குடிக்கலாம்.
பாலில் டிரிப்டோபன் மற்றும் கால்சியம் நிறைய உள்ளதால், நல்ல தூக்கத்துக்கு உதவும்.. பாலில், கேசீன் போன்ற பால் புரதங்கள் இந்த பாலில் உள்ளன.. இவையெல்லாம் தசை வளர்ச்சியை ஊக்குவிக்கும்... நீங்கள் தயாரிக்கும் புரோட்டீன் ஷேக்கில், இனிப்பு இல்லாத பாதாம் அல்லது சோயா பாலை சேர்த்து, அதில் சிறிது கிரேக்க தயிர் (வடிகட்டப்பட்ட தயிர்) சேர்த்து குடித்தாலே உடல் எடை குறையுமாம்.












Click it and Unblock the Notifications