வஞ்சரம் மீனை செய்றீங்களா.. டாப் ருசி வஞ்சிரம் ஆம்லெட்.. அசரடிக்கும் வஞ்சிர மீன் புட்டு.. ஆஹாஹா
சென்னை: அடிக்கடி விலை கொடுத்து வாங்கி சாப்பிட முடியாத மீனாக இந்த வஞ்சிரம் உள்ளது.. எனினும், ருசியில் தலைசிறந்து இருப்பதால்தான், எப்போதுமே இதற்கு ஒரு டிமாண்ட் இருந்துகொண்டே இருக்கிறது.
வஞ்சிரம் மீனில் புரோட்டீன், ஒமேகா 3, வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி12 உள்ளன.. ரத்த அழுத்தத்தை சீராக வைத்து கொள்ள உதவுவதுடன், கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளையும் தீர்க்கிறது..
குறிப்பாக, பார்வை குறைபாட்டை மேம்படுத்துகிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, இதயத் துடிப்பை சீராக்குகிறது.. உடல் எலும்புகளை வலுவாக்குகிறது. ஒரு நாளைக்கு 100 கிராம் மீன் உட்கொள்வது மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இதய செயலிழப்பு ஆகியவற்றின் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

இதயம் வலுப்பெறும்: வஞ்சிரம் மீனை தொடர்ந்து சாப்பிடுவதால் இதயம் பலம் பெறும்.. சைனஸ் தொந்தரவு இருப்பவர்களுக்கு இந்த மீன் ஒரு நல்ல மருந்து... தவிர நல்லவகை கொழுப்புகளும் அதிகமாக உள்ளன. வஞ்சிரத்தில் குழம்பு செய்யலாம், வறுவல் செய்யலாம், பொரித்து சாப்பிடலாம். ஆனால், ஊறுகாய் போடவும் இந்த மீன் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது.
கேரளாவில் இதனை நெய்மீன் என்பார்கள். இந்த மீனில் லேசாக மசால் தடவி, வாழையிலை பொழிச்சது செய்வார்கள்.. பிரியாணி செய்வார்கள்.. வஞ்சிரம் மீனின் தலையை மட்டுமே வைத்து, ருசியான குழம்பு வைப்பார்கள்.. அதேபோல, தேங்காய்பால் ஊற்றி வஞ்சிர மீன் குழம்பு செய்வார்கள்..
கேரளா ஸ்டைல்: ஒரு வாணலில், தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு, வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வதக்கி, அதனுடனேயே தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து, ஆகியவற்றை சேர்த்து அரைக்கப் நீருடன் கொதிக்க விடவேண்டும். குழம்பு நன்கு கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து வேகவைத்து, இறுதியில், தேங்காய் பால், கொத்தமல்லி தூவி இறக்கிவிடலாம்.
இந்த வஞ்சிரம் மீனில் ஆம்லெட்டும் செய்யலாம்.. கழுவி எடுக்கப்பட்ட வஞ்சிரம் மீனை தோசைக்கல்லில் போட்டு, லேசாக வேகவைத்து, ஆற வைத்து, உதிர்த்து வைத்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சோம்பு, சீரகம், வெங்காயம், இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, இதில், உதிர்த்த மீனையும் கொட்டி, சிறிது மிளகாய் தூள், மஞ்சள்தூள் உப்பு சேர்த்து கிளற வேண்டும். இதிலேயே முட்டையையும் கொட்டி கிளறி ஆம்லெட் ஊற்றலாம்.

கர்ப்பிணிகள்: இத்தனை நன்மைகள் இந்த மீனில் இருந்தாலும், மெர்குரி அளவு அதிகமாக இருப்பதால் கர்ப்பிணி பெண்கள் இந்த மீனை தவிர்க்க வேண்டும் என்பார்கள்..
அதேபோல இந்த வஞ்சிரம் வாங்கும்போது, இதே போல ஒரு மீனை விற்றுவிடுவார்கள்.. "அரைகோலா மீன்" என்று அதற்கு பெயர்.. இந்த அரைகோலாவை பார்ப்பதற்கு, அப்படியே வஞ்சிரத்தை போலவே இருக்குமாம்.. அடையாளமே கண்டுபிடிக்க முடியாதாம்.. ஆனால் சுவை வஞ்சிரத்துக்கு நேர் மாறானது. அதனால் கவனமாக பார்த்து ஒரிஜினல் வஞ்சிரம் வாங்க வேண்டும்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications