தலைவலி உயிர் போகிறதா.. ஸ்டிராங்கா டீ குடித்தும் பயனில்லையா? இந்த யோகாவை செய்து பாருங்க! ஆனால் ஒன்று!
சென்னை: தலைவலி உயிர் போகிறதா, கவலையை விடுங்க. இந்த யோகாசனத்தை செய்தால் உடனடி தீர்வு கிடைக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.
எந்த வலியை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம். ஆனால் தலைவலி என்பதை மட்டும் தாங்கி கொள்ளவே முடியாது. இதைத்தான் தலைவலியும் வயிற்றுவலியும் தனக்கு வந்தாதான் தெரியும் என்பார்கள்.

தலைவலியில் நிறைய வகைகள் உள்ளன. ரத்த அழுத்தம் அதிகமாகிவிட்டால் ஏற்படும் தலைவலி, கண் பார்வை பிரச்சினை என்றால் அது ஒரு மாதிரியான தலைவலியை கொடுக்கும். அது போல் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி வேறு இருக்கிறது.
இதற்கெல்லாம் தீர்வு தேடி தேடி பலர் ஓய்ந்தே போயிருப்பார்கள். தலைவலி வந்தால் பலர் ஆங்கில மாத்திரைகளை சாப்பிடுவார்கள். டீ வைத்து குடித்து பார்ப்பார்கள். பிறகு தலைவலிக்கென தைலத்தையும் தடவி பார்ப்பார்கள். தலையில் ஒத்தடம் கொடுப்பது போன்ற விஷயத்தையும் செய்து பார்ப்பார்கள். ஆனாலும் அவர்களுக்கு தலைவலியே போகாது.
இதனால் அவர்கள் அவதிப்படுவதோடு உடன் இருப்போரையும் சிலர் பகீர் கிளப்பி வருவார்கள். தலைவலிக்கு முக்கிய காரணம் டென்ஷனாக கூட இருக்கும் என்கிறார்கள். தொடர்ந்து மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டே இருப்பது நல்லதல்ல. இதனால் யோகா செய்வது போன்ற செயல்களை செய்யலாம்.
அந்த நேரத்திற்கு தலைவலிக்கு மருத்துவம் பார்த்துவிட்டு பிறகு அடிக்கடி வந்தால் மருத்துவரிடம் போய் ஏன் இப்படி ஏற்படுகிறது என்பது குறித்து ஆய்வு செய்து அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். சில யோகாசனங்களை செய்தாலும் இந்த தலைவலி நீங்கும். இதற்கு சில யோகாசனங்களை பார்க்கலாம். ஆனால் இவற்றை ஒரு யோகா ஆசிரியர் அல்லது பயிற்றுநரின் உதவியுடன் செய்ய வேண்டுமே தவிர தானாக எதையும் செய்ய கூடாது.
முதல் யோகா பாலாசனம்- குழந்தை போஸ் என அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் கழுத்து மற்றும் தோள்பட்டை பகுதியில் இருக்கக் கூடிய பதற்றத்தைப் போக்கி உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்ய உதவுகிறது. தோள்பட்டையில் உள்ள முடிச்சுகளை அவிழ்ப்பதன் மூலம் உங்கள் மனதை அமைதியாக்கும். அடுத்தது உத்தனாசனம்- இந்த ஆசனம் தலை கீழாக கவிழ்வதால் தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதனால் எளிதாக தலைவலி சரியாகும்.
அடுத்தது சேதுபந்தாசனம்- பிரிட்ஜ் போஸ் என்பார்கள். இது மன அழுத்தத்தை குறைத்து பதற்றத்திலிருந்து நம்மை விடுவிக்கிறது. தலைவலிக்கு இந்த ஆசனம் நிவாரணத்தை கொடுக்கும் நிலையில் வயிற்று பகுதியில் உள்ள கொழுப்புகளை வெளியேற்றவும் உதவுகிறது. தொப்பை போடாமல் பாதுகாக்கிறது.
அது போல் பச்சிமோத்தாசனம் என்ற ஒரு யோகாசனம் உள்ளது. இந்த போஸ் மூலம் முதுகுத்தண்டை விரிவடைகிறது. இதனால் தலை மற்றும் கழுத்து பகுதியில் உள்ள தசைகளில் காணப்படும் பதற்றத்தை விடுவிக்கிறது. இதனால் மூலமும் தலைவலியிலிருந்து விடுபடலாம். அது போல் பூனை போஸ் செய்தாலும் தலைவலியிலிருந்து விடுபடலாம். நாய் போல் நிற்கும் போஸ் மூலமும் தலைக்கு ரத்தவோட்டம் அதிகரிப்பதால் தலைவலி குறையும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications