கொழு கொழு கன்னம் வேணுமா? அப்ப "4" விஷயத்தை மட்டும் மறக்காம செய்யுங்க.. ஒடுங்கிய கன்னம் குண்டாயிரும்
சென்னை: அழகு கன்னங்கள் வேண்டும் என்று நினைப்போர் எத்தனையோ பேர் உள்ளனர்.. இதற்காக பலவிதமான வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறார்கள். இதோ மேலும் சில டிப்ஸ்களை பயன்படுத்தியும், பளபள மற்றும் புஸுபுஸு கன்னங்களை பெறலாம்.
இதற்கு முதலில் சருமத்தை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்து கொள்ள வேண்டும். நாம் உண்ணும் உணவு முறையாகவும், சரியாகவும் இருந்தாலே, சருமம் தானாகவே பளபளப்பாகிவிடும்..

பழவகைகள்: அதேபோல, நம்முடைய உணவுப்பழக்கத்தின் மூலமும் அழகான சருமத்தை பெறலாம்.. முக்கியமாக, அதிக அளவு எண்ணெய் பயன்படுத்தாமல் இருந்தாலே போதும்.. அத்துடன் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். நன்றாக தூங்க வேண்டும். இதுதான் அடிப்படையான விஷயம் என்கிறார்கள் டாக்டர்கள்.
முக்கியமாக பழவகைகள் அதிகம் சாப்பிட வேண்டும்.. நட்ஸ்களையும் தினசரி அளவோடு சாப்பிடவேண்டும். எவையெல்லாம் இப்படி சாப்பிடுகிறோமோ, அவைகளை வைத்தே கன்னங்களுக்கு பேக் போல போட்டு வரலாம்.
ஆப்பிள் கன்னம்: அதாவது, ஆப்பிள் போல கன்னங்கள் வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். உண்மையை சொல்லப்போனால், புஸ்புஸ் கன்னத்திற்கு பெரும் துணைபுரிவது இந்த ஆப்பிள்கள்தான். பழுத்த ஆப்பிளை மிக்சியில் அரைத்து, பேஸ்ட் போல தடவி பிறகு கால் மணி நேரம் கழித்து கழுவிவிட வேண்டும். வாரத்தில் 3 முறையாவது இப்படி செய்தால் ஆப்பிள் கன்னங்கள் வர ஆரம்பிக்குமாம்.
பப்பாளி கன்னம்: பப்பாளி போலவே மாம்பழத்தையும் பயன்படுத்தலாம்.. ஆனால், இது சீசன் பழம் என்பதால், சீசன் சமயத்தில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். சரும ஆரோக்கியத்துக்கு தேவையான எல்லா சக்தியும் இந்த மாம்பழத்தில் உள்ளது. குறிப்பாக, வைட்டமின் A, ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைய இருப்பதால், சரும செல்களை புதுப்பிக்க உதவும்.
மாம்பழம் கன்னம்: மாம்பழம் சாப்பிடுவதால், கன்னங்கள் அழகுபெறும்.. அதேபோல, மாம்பழத்தின் சதைப்பகுதியை சிறிது எடுத்து, கடலை மாவு, தேன் கலந்து தடவி, 20 நிமிடம் கழித்து மசாஜ் தந்து கழுவிவிடலாம். அல்லது மாம்பழ துண்டுகளுடன், தேன், பால், சர்க்கரை சேர்த்து மொத்த கலந்து கன்னத்தில் பூசினாலும் மாம்பழக்கன்னங்கள் கிடைத்துவிடும்.
வயிறு சுத்தமாக இல்லாவிட்டால், அது கன்னங்களில் பிரதிபலித்துவிடும். அதேபோல, வயிற்றில் புண்கள் இருந்தாலும் சிக்கல் வந்துவிடும். இதற்கு உப்பு சேர்க்காத சுத்தமான வெண்ணெயை சிறிது எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், சருமமும் பொலிவாகிவிடும்.. அத்துடன், வயிறு கழிவுகளும் நீங்கி, புண்களும் ஆறிவிடும்.
வெண்ணைய்: இதே வெண்ணையுடன், சிறிது சர்க்கரை சேர்த்து, ஸ்க்ரப் போல கன்னங்களில் தேய்த்து முகத்தை கழுவி வரலாம்.. ஆனால், வெறும் தண்ணீரில் கழுவினால் எண்ணெய் பசை இருக்கும் என்பதால், சோப்பை பயன்படுத்தாமல் சிறிது கடலை மாவு தேய்த்து கழுவலாம்.
பப்பாளி பழத்தை சாப்பிடும் அதேசமயம், முகத்திலும் சிறிது தேனுடன் தடவினால், கன்னம் பொலிவாகும்.. நிறமும் பளிச்சென மாற துவங்கும்.. பாதாம், முந்திரி, நான்கைந்து எடுத்து, பாலில் ஊறவைத்து, ஊறவைத்த பாலுடனே அதையும் சேர்த்து அரைத்து பேக் போல போட்டு வந்தால், கன்னம் புஷ்டியாக துவங்கும். அல்லது பூலான் கிழங்கு, மஞ்சள், பாசிப்பயிறு போன்றவற்றை அரைத்து வைத்து கொண்டால், தினமும் இந்த பவுடரை வைத்து முகம் தேய்த்து வரலாம்.
கன்னங்களின் தசையை சுருங்கி விரிய செய்யும் தன்மை பபிள்காம்களுக்கு நிறையவே உண்டு.. பபிள்காம் மெல்வது, கன்னங்களுக்கு சிறந்த பயிற்சியும்கூட. இதனால் ரத்த ஓட்டமும் அதிகரித்து, கன்னங்கள் புஷ்டியாக துவங்கும்

புஷ்டி கன்னம்: புஷ்டி கன்னம் வேண்டும் என்று ஒருபக்கம் ஏங்கிதவிக்க, மேலும் சிலருக்கோ, புஷ்டி கன்னம் வேண்டாம் என்று நினைப்பார்கள். அதாவது, கன்னத்திலுள்ள கொழுப்புகள் கரைய வேண்டும் என்று நினைப்பார்கள்.. சிலருக்கு இயற்கையாகவே கொழு கொழு கன்னங்கள் இருக்கும். பார்ப்பதற்கு அழகாகவே இருந்தாலும், தேவையில்லாமலும், அளவுக்கு அதிகமாகவும் கன்னச்சதை வீங்கி இருப்பது உடலுக்கு கெடுதி என்கிறார்கள். ஆனால், இதையும் எளிய பயிற்சிகள் மூலம் குறைக்கலாம்
அதாவது, உதட்டை கூப்பிக்கொண்டு, 2 கன்னங்களையும் சப்பையாக வைத்துக் கொள்ள வேண்டும்.. 30 வினாடிகள் வரை மூச்சை பிடித்துக்கொண்டு, உதடுகளை அப்படியே வைத்திருக்க வேண்டும். பிறகு, உதடுகளை விடுவிடுத்து, மூச்சையும் மெதுவாக விட வேண்டும். இப்படி காலையும், மாலையும் பத்து முறை செய்தால், மெல்ல மெல்ல கன்னச்சதை குறையும்.
மசாஜ்: அல்லது வாய்க்குள் காற்றை இழுத்து அடக்கிக்கொண்டு, ஒருபுறக்கன்னத்தில் இருந்து இன்னொரு புறத்துக்கு காற்றை இடம்மாற செய்ய வேண்டும். 2 கன்னங்களிலும் மாறி மாறி 5 நிமிடம் செய்யலாம். அல்லது மேல்நோக்கி பார்த்தவாறே தலையை நிமிர்த்தி, உதட்டையும் 5 நிமிடத்துக்கு குவித்தபடியே வைத்திருப்பதையும் தினமும் செய்யலாம்.
-
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்! -
வில்லிவாக்கத்தில் நானே வேட்பாளர் என நினைத்துக் கொள்ளுங்கள்.. நண்பனுக்காக களம் இறங்கிய சபரீசன் பேட்டி -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்












Click it and Unblock the Notifications