தொட்டி நிறைய ஐஸ் கட்டிகள்.. ஜில்லென்ற குளியல் போடும் நடிகை சமந்தா.. ஐஸ் பாத் தெரபி என்றால் என்ன?
சென்னை: மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா ஐஸ் பாத் தெரபி எடுத்து வருகிறார். அந்த சிகிச்சை எதற்காக எடுக்கப்படுகிறது தெரியுமா?
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருபவர் சமந்தா. இவர் கடந்த ஆண்டு கையில் டிரிப்ஸ் ஏற்றியபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதில் தான் மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் இந்த நோயால் உடல் நிலை மோசமானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சமந்தாவை பாதித்து இருக்கும் மயோசிடிஸ் நோய் என்றால் என்ன என இணையதளத்தில் பலரும் தேடி வந்தனர். இது தசை அழற்சி நோய் ஆகும். தசையில் உள்ள செல்களை மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தி சிதைக்கும்.
இந்த மயோசிடிஸ் நோய் 2 வகைப்படும். ஒன்று தோலில் பாதிப்பை ஏற்படுத்தும் தசை அழற்சி நோய் டெர்மடோ மயோசிடிஸ் என அழைக்கப்படுகிறது. மற்றொன்று தோலில் பாதிப்பை ஏற்படுத்தாத தசை அழற்சி நோய் பாலி மயோசிடிஸ் என அழைக்கப்படுகிறது. இந்த நோய் ஆண், பெண் இருவரும் வரும். ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
தசை அழற்சி நோயை கவனிக்காமல் விட்டுவிட்டால் தடை செல்கள் நிரந்தரமாக அழிந்துவிடும். இதனால் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கும். இது மழை மற்றும் குளிர் காலங்களில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நோய் எதற்காக வருகிறது என்பதற்கான காரணம் தெரியவில்லை. இந்த நோய் பாதித்தால் தசை பலவீனமாகி சாப்பிடும் போது சுவாசக் குழாய்க்குள் செல்லும் அபாயம் ஏற்படும்.
இதனால் உயிரிழப்பு ஏற்படும். இது புற்றுநோயாகவும் மாறும் வாய்ப்புள்ளது. ரத்தக் குழாயில் அழற்சி, நுரையீரல் பாதிப்பு, இதய நோய்களும் ஏற்படும். இந்த நோய் பாதித்ததால் படுக்கையில் இருந்தே எழுந்திருக்க சமந்தா சிரமப்பட்டதாக தெரிவித்திருந்தார். தசையில் அத்தனை வலி இருக்குமாம். இதற்கு ஆன்டிபயாடிக்குகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த நோய்க்காக சமந்தா பலதரப்பட்ட சிகிச்சைகளை எடுத்துள்ளார். அண்மையில் டார்ச்சர் டைம் என்றும் ஐஸ்கட்டிகளில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இந்த நோய்க்கு சிகிச்சை அளித்து கட்டுப்பாட்டில் மட்டுமே வைத்திருக்க முடியுமாம். இதற்கு நிரந்தர தீர்வு இல்லையாம். நோய்க்காக சிகிச்சை எடுத்து வந்தாலும் சமந்தா தினமும் உடற்பயிற்சி செய்து வருகிறார்.
இவர் ஒரு வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இதற்காக உடற்பயிற்சி மற்றும் சாகசங்களை செய்ததால் அதிக பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. எனவே அதிலிருந்து விரைவாக மீள ஐஸ் பாத் தெரபி எடுத்துள்ளார் சமந்தா. குளியல் தொட்டி முழுவதும் ஐஸ் கட்டிகள் நிரப்பி அதில் சமந்தா அமர்ந்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
தசை தொடர்பான நோய்கள் மற்றும் சில ஆட்டோ இம்யூன் குறைபாடுகளுக்கு கட்டிகள் பயன்படுத்தி உறைய வைக்கும் கிரையோதெரபி உள்ளிட்டவை மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதில் முழுக்க முழுக்க சில்லென்று தண்ணீர் குளித்தாலே உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் ஜில்லென்ற தண்ணீரில் மூழ்கி இருப்பதும் ஒரு வகையான தெரப்பியாகும். ஐஸ் பாத்தில் 15 நிமிடங்கள் வரை அமர்ந்திருக்க வேண்டும். இந்த தெரபி ரத்த ஓட்டத்தை பாதித்து உடலில் அழற்சி ஏற்படுத்தும் ஆபத்தையும் கொண்டிருக்கிறது. எனவே ரத்த அழுத்தம், இதய நோய் இருப்பவர்கள் மருத்துவரை கலந்து ஆலோசித்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications