முருங்கைக்காயை விடுங்க.. இப்படி சீரகத்தை சாப்பிட்டாலே போதும்.. வாயு தொல்லை ஓடிரும்.. மேஜிக்கல் டிப்ஸ்
சென்னை: வாயு கோளாறு என்பது பரவலாக ஏற்படக்கூடிய பிரச்சனை என்றாலும், முறையான உணவுப்பழக்கங்களை கடைப்பிடித்தாலே, இதை விரட்டிவிடலாம் என்கிறார்கள்.
வாயு கோளாறு, அல்லது உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவற்கு காரணம், காலையில் எழுந்ததுமே, வெறும் வயிற்றில் டீ குடிப்பதுதான் என்கிறார்கள்.. எதுவுமே சாப்பிடாமல், வெறும் டீயை மட்டும் குடிப்பதால், வயிற்றில் வாயு பிரச்சனை ஏற்படும்..

அமிலத்தன்மை: அத்துடன், அமிலத்தன்மையையும் இது உண்டுபண்ணிவிடுமாம். ஹார்மோன் சமமில்லாமல் இருந்தாலோ அல்லது குடல் அடைப்பு இருந்தாலோ, வாயு கோளாறுகள் உண்டாகலாம். ஆனால், முக்கிய காரணம், கொழுப்புச்சத்து மிகுந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதுதான்.. அதேபோல மொச்சை, காலிஃப்ளவர், முட்டைக்கோஸ், முளைப்பயிறு போன்ற உணவுகளையும் குறைவாக எடுத்து கொள்ளலாம்.
காரணம், இவையெல்லாம், செரிமானமாக நீண்டநேரம் பிடிக்கும்.. எனவே, இந்த உணவுகள் உடலுக்குள்ளேயே நீண்ட நேரம் தங்கியிருக்க நேரிடும்.. அப்பொழுது நொதித்து நுரைக்கும்.
பாக்டீரியாக்கள்: கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளில், கந்தகம் உள்ள அமினோ அமிலமான மெத்தியோனைன் (methionine) இருக்கிறது.. குடலில் உள்ள பாக்டீரியாக்கள் கந்தகத்தை, ஹைட்ரஜன் சல்பைடு-ஆக மாற்றிவிடும். இப்படித்தான் காற்று வெளியேறி, துர்நாற்றம் வீச காரணமாகிவிடுகிறது., இவைகளை கிச்சனில் உள்ள பொருட்களை கொண்டே, எளிதாக தவிர்க்கலாம்,
- ஒரு டம்ளர் நீரில், 1 டீ ஸ்பூன் எலுமிச்சை சாறு + 2 சிட்டிகை பேக்கிங் சோடா கலந்து, சாப்பாடு சாப்பிட்டதுமே குடித்தால் போதும்.. வாயுத்தொல்லைக்கு தீர்வு கிடைக்கும்
- அரை ஸ்பூன் திரிபலா பொடியை, தண்ணீரில் போட்டு 10 நிமிடம் கொதிக்க வைத்து குடித்லும் தீர்வு கிடைக்கும்.. அல்லது ஒரு டீ ஸ்பூன் பெருங்காயத்தூளையும் இப்படி வெந்நீரில் கலந்து குடித்தால், குடலிலுள்ள பாக்டீரியாக்களுடன் சேர்த்து வாயு வெளியேறிவிடும்.. இதுபோலவே, சீரகத்தையும் வெந்நீரில் கொதிக்க வைத்து, பிறகு ஆறவைத்து குடிக்கலாம்..
- - தினமும் 3 வறுத்த பூண்டு சாப்பிடலாம். பூண்டு அதிகமாக சேர்த்து துவையல் அல்லது ரசம் போல வைத்து குடிக்கலாம்..
- வாரத்திற்கு 3 அல்லது 4 முறை உணவில் முருங்கைக்காயை சேர்த்துக்கொண்டாலே வாயுக்கோளாறு எளிதாக நீங்கிவிடும்.
- முருங்கைக்காய் விதை: அதாவது, முருங்கைக்காயை சுத்தம் செய்து, நன்றாக வைத்து, அதிலிருக்கும் விதைகளை தனியாக எடுத்து சாப்பிட வேண்டும்.. இதன் விதைகளை குழந்தைகளுக்கும் சாப்பிட தரலாம்.. காரணம், இதை சாப்பிடும்போது, மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.. அதேபோல, மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முருங்கைக்காயை அடிக்கடி சாப்பிடலாம்.
என்ன செய்ய வேண்டும்: நாம் உண்ணும் உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்... ஆனால், இரவு சாப்பிட்டதுமே தூங்க செல்வதை தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பே டின்னரை முடித்திருக்க வேண்டும். அப்போதுதான் செரிமானம் சரியாகும்..
அத்துடன், பருப்பு, வாழைக்காய், உருளைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சக்கரவள்ளி, கிழங்கு, மசாலா உணவுகள், செயற்கை பானங்கள், பால், முளைகட்டிய தானியங்கள், கொழுப்பு நிறைந்த உணவுகள்., அதிக கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் இவைகளை தவிர்த்துவிட்டு, நிறைய தண்ணீர் குடித்தாலே போதும்.. வாயு தொல்லைக்கு நிரந்தரமாக தீர்வு காணலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications