விஜய்யை போல எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் சைகை காட்ட அனுமதி உண்டா? சபாநாயகர் புது விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டசபை கூட்டத்தொடரின் போது முதல்வர் விஜய் சைகை காட்டியது குறித்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த ஜேசிடி பிரபாகர், சட்டசபையில் விஜய் என்னிடம் அனுமதி பெற்றே இந்த சைகையை காட்டினார் என்றும், எதிர்க்கட்சியினரும் என்னிடம் அனுமதி பெற்ற பிறகு தான் சைகை காட்ட அனுமதிக்கப்படுவர் என்றும் கூறினார்.

சட்டப்பேரவை தலைவர் ஜேசிடி பிரபாகர் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் சைகை காட்டியது விதிமீறலா? மற்ற உறுப்பினர்களுக்கு அதுபோல அனுமதி அளிக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதலளித்த சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் கூறியதாவது:-

Vijay gesture in the TN Assembly violate the rules Speaker JCD Pr

நான் தான் முடிவு எடுப்பேன்

முதல்வர் விஜய் சைகை காட்டியதில் எந்த தவறும் இல்லை. அது விதிகளுக்கு உட்பட்டுத்தான் நடந்து இருக்கிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இதே மாதிரி சைகை காட்ட அனுமதி அளிக்கப்படுமா? என்று கேட்கிறீர்கள். அவர்கள் என்ன சைகை காட்டப் போகிறார்கள் என்று எனக்கு தெரிந்து இருந்தால் அதை அனுமதிப்பதா வேண்டாமா என்று நான் முடிவு எடுப்பேன்" என்றார்.

முதல்வர் விஜய் உங்களிடம் முன்கூட்டியே என்ன சைகை காட்ட போகிறேன் என்று கூறினாரா? என்று செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சபாநாயகர், "முதல்வர் கை அசைவை பார்த்து.. என்ன செய்ய போகிறார் என்று புரிந்து கொண்டு அனுமதி அளித்தேன்" என்றார். கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சட்டசபை கதவை மூடிக்கொண்டுதான் பேச வேண்டும் என்று கூறியது பற்றி கேள்வி எழுப்பினர்.

உட்காந்து பதிலை கேளுங்கள் என்று அர்த்தம்

இதற்கு பதிலளித்த சபநாயகர் கூறியதாவது:- ஒருவரின் பேச்சுக்கு ஒவ்வொரு வார்த்தை வரியில் இருந்து விளக்கம் கேட்கக்கூடாது. ஒரு கருத்தை கூறி விட்டு அதற்கு பதில் கிடைக்கும் வரை காத்திராமல் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறுவது என்பது யாரும் ஏற்றுக்கொள்ள முடியாத செயல். அந்த வகையில் உறுப்பினர்கள் இருந்து பதில் சொல்வதை கேட்க வேண்டும் என்று அதைத்தான் வலியுறுத்துகிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர..

கதவை பூட்ட சொல்கிறார் என்று அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. உறுப்பினர்கள் பதில் சொல்லும் போது, குற்றச்சாட்டு சொன்னவர்கள் குறை கூறியவர்கள் அந்த பதிலையும் கேட்க வேண்டும் என்ற ஆர்வத்தில்தான் பேசியிருக்கிறார் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். கதவை பூட்டிவிடுங்கள் என்று சொல்வதற்கு அர்த்தம் என்னவென்றால், இருந்து உட்காந்து பதிலை கேளுங்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்." என்றார்.

ஒரு ஆக்‌ஷன் பன்னணும்

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை ஆற்றி முதல்வர் விஜய் கடந்த மாதம் 23 ஆம் தேதி பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளின் கேள்விகளுகளுக்கு பதிலளித்த விஜய், தனது பேச்சின் நிறைவாக சபாநாயகரிடம் ஒரு ஆக்‌ஷன் பன்னணும் என தோன்றியது. எல்லோரும் போய்விட்டார்கள்.. உங்க அனுமதியுடன் பண்ணலாமா? என்று கேட்டார். இதற்கு இப்பவும் பண்ணலாம் தப்பில்லை என்று சபாநாயகர் கூறினார்.

உடனே பினிஷ்டு என்று சொல்வது போல சைகையில் முதல்வர் விஜய் செய்து காட்டினார். தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிவு செய்த பிறகு அப்போதைய முதல்வர் ஸ்டாலின், இதே பினிஷ்டு சைகையை காட்டியிருந்தார். இந்த சைகை வைரல் ஆகியிருந்தது. அதே மாதிரியான சைகையை சட்டமன்றத்தில் விஜய் செய்து இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+