இரவில் 10 மணிக்குள் தூங்கினால் ஏற்படும் நன்மை.. உங்க உடம்பில் நடக்கும் மாற்றங்களை பாருங்க.. சூப்பர்
சென்னை: இரவு 10 மணிக்குள் தூங்கிவிடுவது, நம்முடைய உடலில் என்னென்ன நன்மைகளை தருகின்றன என்பது குறித்து ஆய்வு ஒன்று விரிவாக வெளியிட்டுள்ளது. 8 மணி நேரம் தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கு அவசியம் என்றும் அந்த ஆய்வு வலியுறுத்துகிறது.
இரவு சீக்கிரமாக தூங்க செல்வது இதய ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் பல்வேறு நன்மைகளை அளிக்கும். ஓய்வெடுக்க அனுமதிக்கும் இரவு சீக்கிரம் படுக்கைக்கு செல்வது இடையூறின்றி உடலை ஓய்வெடுப்பதற்கு வழி வகை செய்யும். ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிப்பதற்கான சூழலையும் உருவாக்கிக் கொடுக்கும்.

ஆரோக்கியம்: நல்ல தூக்கம் இருந்தால் மட்டுமே முழுமையான ஆரோக்கியமாக கருதப்படும்.. குறைந்தது 6 முதல் 8 மணி நேரம் தூக்கம் இருந்தால்தான், அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாக நம்மால் வேலைகளை சிறப்பாக செய்ய முடியும்.
சரியான தூக்கம் இல்லாவிட்டால், மன அழுத்தம், சோர்வு ஏற்படும்... கண்களை சுற்றி கருவளையமும், முடி உதிர்வு பிரச்சனையும் உண்டாகும்.. ஜீரண கோளாறுகள் நடக்கும். எனவே, வயிறு முட்ட சாப்பிடாமல், இரவு ஏழரை மணிக்குள் 4 இட்லி அல்லது 2 தோசை அல்லது 2 சப்பாத்தி என அரை வயிற்றுக்கு சாப்பாட்டை முடித்துவிடலாம். தூங்கும்போது சூடான பால் குடித்துவிட்டு தூங்கலாம்.
எண்ணெய் குளியல்: நிம்மதியான தூக்கம் வேண்டுமானால் அமைதியான மனநிலை வேண்டும்.. வயதுக்கு தகுந்தாற்போல் எளிய உடற்பயிற்சிகளை செய்யலாம். வாரம் ஒரு முறை உடல் சூடு குறைய எண்ணெய் குளியல் செய்யலாம்.. மனதுக்கு இதம் தரும் வகையில் நல்ல இசையை கேட்டாலும் நல்ல தூக்கம் வரும்.
லேட்டாக தூங்குவதோ, தூக்கமின்மை பிரச்சினையால் அவதிப்படுவதோ மனச்சோர்வு, இதய நோய் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும் என்று பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
இதய நோய்கள்: அதுமட்டுமல்ல, இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்குவது இதயம் மற்றும் ரத்த ஓட்டம் சார்ந்த நோய் அபாயத்தை குறைப்பதாகவும், இந்த நேரத்தை கடந்தும் காலதாமதமாக தூங்கும் வழக்கத்தை பின்பற்றுவது இதய நோய் அபாயத்தை அதிகரிக்க செய்துவிடும் என்றும் Journal Current Cardiology Reviews என்ற ஐரோப்பிய இதய இதழின் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த ஆய்வில், இரவு 10 மணி அல்லது அதற்கு முன்பு தூங்குவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து லிஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, "சீக்கிரம் தூங்கபோகும்போது, குறைவான தொந்தரவுடன் ஆழ்ந்த உறக்கத்தை அனுபவிக்கலாம்.. சிறந்த ஆரோக்கியத்திற்கு பரிந்துரைக்கப்படும் 8-9 மணிநேர உறக்கத்தை பெறுவதற்கும் போதுமான நேரம் இருக்கும். உங்களது சர்க்காடியன் தாளத்துடன் நன்றாக தூங்குவது உயர் அழுத்தம் மற்றும் இதய நோய்க்கான பிற ஆபத்து காரணிகளின் அபாயத்தைக் குறைக்கும்.
உயர் ரத்த அழுத்தம்: அறிக்கையின்படி தூக்கமின்மை உயர் ரத்த அழுத்தம் (HT), கரோனரி இதய நோய் (CHD) மற்றும் நீரிழிவு நோய் (DM) ஆகியவற்றுடன் தொடர்பைக் கொண்டுள்ளது.
இதய நோயை தடுக்கும் உடலில் 24 மணி நேரத்துக்கு ஒருமுறை நிகழும் உயிரியக்க மாற்றமான சர்க்கார்டியன் ரிதம் எனப்படும் சுழற்சி முறை சீர்குலைந்தால் விழிப்பு-தூக்க முறையில் பாதிப்பு உண்டாகும். இது முறையாக நடப்பதற்கு தூக்கம் அவசியமானதாகும். அந்த சுழற்சி அடிப்படையில் நன்றாக தூங்குவது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், நீரிழிவு நோய்க்கும் தொடர்பு இருக்கிறது. அதனால் ஆழ்ந்த தூக்கம் அவசியம்.
அதிகாலை: ஹார்மோன்கள் சமநிலை இரவு 10 மணிக்குள் தூங்குவது சர்க்கார்டியன் ரிதத்துக்கும் சிறந்தது.. இது மூளையில் உள்ள பினியல் சுரப்பி மற்றும் சுற்றுப்புற சூழலில் இரவு, அதிகாலையில் தென்படும் ஒளியின் அளவுகளுக்கு இடையிலான தொடர்புகளால் கட்டுப்படுத்தப்படுகிறது. அதில் மாற்றம் ஏதாவது ஏற்பட்டால், ஹார்மோன்களின் செயல்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இரவில் சரியான நேரத்தில் தூங்குவதன் மூலம் ஹார்மோன்களை சீராக நிர்வகிக்கலாம்.
இரவில் சீக்கிரமாக தூங்கிவிடுவது, உடலுக்கு போதுமான ஓய்வை கொடுப்பதோடு நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்வாய்ப்படும் அபாயத்தை தடுப்பதுடன் தொடர்புடையது... பல்வேறு நோய்களிலிருந்து உடலையும் பாதுகாக்கும். இரவில் ஆழ்ந்த தூக்கத்தை மேற்கொள்வது உடலில் சேரும் தேவையற்ற கொழுப்பை எரிக்கவும் உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தி: சீக்கிரம் தூங்குவதும் போதுமான ஓய்வு பெறுவது, நோய்த்தொற்றுகள் மற்றும் பொதுவாக நோய்வாய்ப்படும் அபாயத்துடன் தொடர்புடையது. தூக்கம் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அத்தியாவசிய ஆதரவை வழங்குகிறது.. மேலும், போதுமான மணிநேரம் உயர்தர தூக்கத்தை பெறுவது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது,.. பல்வேறு நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது" என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இரவு 10, 11 மணிதான் தூங்குவதற்கு சிறந்த நேரம் என்பது அனைவருக்கும் பொருந்தாது என்கிறார்கள்.. தூங்குவதற்கு சரியான நேரம் என்று எதுவும் இல்லை. சரியாக 8 மணி நேரம் இடைவிடாத தூக்கம் ஆரோக்கியமான இதயத்துக்கும், உடல் ஆரோக்கிய செயல்பாட்டுக்கும் தேவையானது..
முறையான ஆலோசனை: அதேசமயம், நன்றாக தூங்க வேண்டும் என்பதற்காக, மது அல்லது மாத்திரைகளை பயன்படுத்தக்கூடாது. ஒருவருக்கு தூக்கமின்மை அல்லது அடிக்கடி தூக்கத்திலிருந்து எழுந்தால் அல்லது இரவில் சுவாச சிக்கல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற வேண்டும்.
மொத்தத்தில், 10 மணிக்கு பிறகு அல்லது நள்ளிரவுக்கு பிறகு தூங்குவது மிகவும் ஆபத்தானது. இரவு 10 மணி முதல் 11 மணிக்குள் தூங்கி விட்டால் இதய பாதிப்புகளை குறைக்கலாம் என்பதே ஆய்வின் மூலம் தெரிய வந்திருக்கும் உண்மையாகும்.












Click it and Unblock the Notifications