கோழிக்கறி வாங்கறீங்களா? லிவர் செய்யும்போது "இந்த 2 அயிட்டமும்" சேர்த்து சமைங்க.. 10 பிரச்சனை தீரும்
சென்னை: கோழிக்கறியில் நிறைய புரோட்டீன்கள் இருக்கிறது என்றாலும், சிக்கனின் ஈரல் சாப்பிடலாமா? வேண்டாமா? என்பது குறித்த குழப்பங்களும், அலசல்களும் நடந்துகொண்டுதான் உள்ளன.
சிக்கனின் ஈரலில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளன.. இதற்கு காரணம், அனைத்து உயிர்ச்சத்துக்களும், ஊட்டச்சத்துகளும் இந்த ஈரலில் தான் உள்ளன.. இரும்பு, வைட்டமின் ஏ, காப்பர், பாஸ்பரஸ், இரும்பு, செலினியம், துத்தநாகம் இப்படி நிறைணுய சத்துக்கள் உள்ளதால், ஈரல் மிகவும் நல்லது..

ரத்த சோகை உள்ளவர்கள் இந்த ஈரலை தாராளமாக சாப்பிடலாம். இதனால், ஹீமோகுளோபின் அளவு உயரும்.. போலிக் அமிலமும், B12 உயிர்ச்சத்தும் அதிகமாக உள்ளதால் புதிய ரத்த அணுக்களை உருவாக்கவும் இந்த ஈரல் உதவுகிறது.
உடல் சோர்வு: உடல் சோர்வு நீங்கி, பலம் பெருகும். ஆனால், உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இதை குறைவாக சாப்பிட வேண்டுமாம். கொலஸ்ட்ரால் பிரச்சினை உள்ளவர்களும் இதை தவிர்க்கலாம்.. புரோட்டீன்களும், வைட்டமின் சி-யும் அதிகம் உள்ளது. ஈரலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண் சம்பந்தப்பட்டட கோளாறுகள் நீங்கும்.
இந்த ஈரலை பொறுத்தவரை, சிவப்பு இறைச்சியில் சேராது.. கோழிகளிலிருந்து வரும் உறுப்பு இறைச்சிகள் மட்டுமே. அதனால்தான் ஈரல் உடலுக்கு நன்மை தரக்கூடியது. ரத்த சோகை இருப்பவர்கள் இந்த ஈரலை அதிகமாக சாப்பிடலாம்.. எனவே, சிக்கனைவிட, ஈரல் மிகவும் நல்லது.. உறுப்பு இறைச்சிகளிலேயே மிகவும் வலிமையானது இந்த ஈரல்தான்..
எப்படி சமைக்கலாம்: கோழி ஈரலை பொறுத்தவரை, எப்படி சமைக்கிறோம் என்பதில்தான் ஆரோக்கியமே அடங்கி உள்ளது. நல்லெண்ணெய் சேர்த்துஇந்த ஈரலை சமைக்க வேண்டுமாம்.. எந்த இறைச்சியை செய்தாலும், இஞ்சி பூண்டு நிறைய சேர்த்து கொள்ள வேண்டும் என்றாலும், இந்த ஈரலை சமைக்கும்போது, இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே இஞ்சி பூண்டு சேர்க்க வேண்டும். மஞ்சள், மிளகு, கல் உப்பு சேர்த்து நன்றாக வேக வைத்து சாப்பிடுவது அவசியம். ஆனால், அதிக அளவு வேக வைத்துவிடக்கூடாது.
யார் யார் தவிர்க்கலாம்: வைட்டமின் A அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் கல்லீரலை தவிர்க்கலாம்.. பதப்படுத்தப்பட்ட சிக்கனில் சோடியம் அதிகமாக இருப்பதால், இதையும், கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டும். வைட்டமின் மாத்திரை எடுப்பவர்களும் ஈரல் சாப்பிடுவதை தவிர்க்கலாம். கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களும் ஈரலை தவிர்க்கலாம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஈரலை தவிர்க்கலாம்..
அதைவிட முக்கியமாக, வெளியில் சாப்பிடுவதை அனைவருமே தவிர்க்கலாம். முடிந்தவரை ஈரலை மட்டும் வீட்டிலேயே சமைத்து சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்.












Click it and Unblock the Notifications