முருங்கையிலை பெஸ்ட்.. இந்த முருங்கைக்கீரை சூப் ஒன்னு போதுமே.. 300 நோயும் நொறுங்கிடுமே.. சூப்பர் கீரை

Subscribe to Oneindia Tamil

சென்னை: அளவுக்கு அதிகமான ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் போன்ற பல்வேறு நோய் எதிர்ப்பு சக்திகளை கொண்டிருக்கும் முருங்கையிலையில் சட்னி செய்யலாம் தெரியுமா?

பிற கீரைகளில் உள்ள இரும்புச்சத்தினை விட 75 சதவீத அதிக சத்தும், ஆரஞ்சைவிட 7 மடங்கு விட்டமின் C, பாலில் இருப்பதை விட 4 மடங்கு அதிகம் கால்சியம், கேரட்டில் இருப்பதுப்போல 4 மடங்கு விட்டமின் A, வாழைப்பழத்தில் உள்ளதுபோல 3 மடங்கு பொட்டாசியம் கொண்டதுதான் முருங்கைக்கீரை.

Do you know the Abundant Medicinal Uses of Drumstick Leaf and Super Drumstick Leaves cures nearly 300 diseases

கீரைகள்: மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில், மொத்தம் 18 அமினோ அமிலங்கள் இந்த கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே உணவு இந்த முருங்கைக்கீரைதான். 90 வகையான சத்துக்களும், 46 வகையான மருத்துவ குணமும் கொண்ட ஒரே கீரை இந்த முருங்கைக்கீரைதான்.

ஊட்டச்சத்துக்கள்: காய்ந்து போனாலும் ஊட்டச்சத்துக்கள் உயிர்ப்புடன் வைத்திருப்பது இந்த முருங்கைக்கீரைதான்.. 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களை குணப்படுத்துவதாகவும் ஆயுர்வேத மருத்துவம் சொல்கிறது என்றால் முருங்கைக்கீரையின் மகத்துவத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.
இதய பாதுகாப்பு செயல்பாடு, கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்துதல், செரிமானத்தை மேம்படுத்துதல், ஆர்சனிக் நச்சுத்தன்மையின் விளைவுகளை எதிர்த்து போராடுதல் ரத்த குறைபாட்டினை நீக்குதலுக்கு இந்த கீரை உபயோகமாகிறது.

ரத்த சர்க்கரை: முருங்கையில் குர்செடின் மற்றும் குளோரோஜெனிக் அமிலம் நிறைந்துள்ளதால், அவை ஆக்ஸிஜனேற்ற, ரத்த அழுத்த எதிர்ப்பு மற்றும் ரத்த சர்க்கரையைக் குறைக்கும் பண்புகளையும் கொண்டிருக்கின்றன.

மற்ற தாவர உணவுகளில் உள்ளதைவிட 25 மடங்கு இரும்பு சத்து அதிகமாகவே உள்ளது.. செயற்கையாக நாம் சாப்பிடும் மருந்து மாத்திரைகளில் கிடைக்கும் இரும்புச்சத்தைவிட, இயற்கையாக முருங்கை கீரையில் கிடைக்கும் இரும்பு சத்தை நம்முடைய உடல் எளிதில் கிரகித்து கொள்கிறது. முருங்கைக்கீரையை பொரியல் செய்வதற்கு பதிலாக சூப் அல்லது பொரியல் வடிவில் உணவில் சேர்த்துக் கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும்..

பொரியல்: முருங்கைக்கீரை பொரியல் செய்ய வேண்டுமானால், கீரையை முதலில் சுத்தம் செய்து கழுவி வைத்து கொள்ள வேண்டும். ஒரு வாணலில், நல்லெண்ணெய், சீரகம், உளுத்தம் பருப்பு, கா.மிளகாய், வெந்தயம், மல்லி, எள் சேர்த்து வறுக்க வேண்டும். இதனுடன் சுத்தம் செய்யப்பட்ட கீரை, சிறிது நசுக்கிய பூண்டு, சிறிது புளி, உப்பு, பெருங்காயம் சேர்த்து வேக வைக்க வேண்டும்.

இதனுடன் தேங்காய் துருவல் விருப்பப்பட்டால் சேர்க்கலாம்.. அல்லது வேர்க்கடலை கொரகொரப்பாக அரைத்து தூவலாம்.. அல்லது 2 முட்டையை உடைத்து ஊற்றி சாப்பிடலாம். அல்லது பருப்புகளை வேகவைத்து, இந்த கீரைகளுடன் கலந்து சாப்பிடலாம்.

முருங்கை சூப்: முருங்கை சூப் செய்ய வேண்டுமானால், ஒரு கைப்பிடி முருங்கை கீரையை சுத்தம் செய்து, 4 பல் பூண்டு, சிறிதளவு இஞ்சி, 4 சின்ன வெங்காயம், சிறிய தக்காளி, மஞ்சள் தூள் என அனைத்தையும், தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதில், நீரை மட்டும் வடிகட்டி தனியாக வைத்து விட்டு, மற்றவைகளை மிக்சியில் அரைத்து, வடிகட்டிய தண்ணீருடன் கலந்துவிட வேண்டும்.

இப்போது ஒரு வாணலில் நல்லெண்ணெய் விட்டு சீரகம், கருவேப்பிலை தாளித்து கொட்டி, மிளகு தூள் சேர்த்து குடித்தால், நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகச்சிறந்த சூப்பாக இது அமையும். வைட்டமின் A, C, E என இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது இந்த முருங்கைக்கீரை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+