முருங்கைக்காய்.. முருங்கையிலையில் சர்ருன்னு குறையும் வெயிட்.. முருங்கைக்கீரை டீ ட்ரை பண்ணி பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: முருங்கைக்கீரை பலவிதங்களில் நமக்கு உதவுகிறது என்றாலும், உடல் எடையை குறைப்பதில் எந்த வகையில் உதவுகிறது தெரியுமா? முருங்கையிலையை வைத்து, உடல் குறைய என்னென்ன சாப்பிடலாம்?

பசலைக்கீரை: முருங்கைக் கீரையில் பசலைக்கீரையை விட 25 முறை அதிகமாக இரும்புச்சத்தும், ஆரஞ்சு பழத்தை விட 7 மடங்கு அதிகமாக வைட்டமின் C சத்தும், வாழைப்பழத்தை விட 15 மடங்கு அதிகமாக பொட்டாசியமும், முட்டையை விட 4 மடங்கு அதிகமாக புரோட்டீனும், கேரட்டை விட 10 மடங்கு அதிகமாக வைட்டமின் A சத்தும், பாலை விட 17 மடங்கு அதிகமாக கால்சியம் சத்தும் உள்ளது.

Do you know the Amazing Benefits in Drumstick Leaves and Excellent Moranga Juice for Weight Loss

அதுமட்டுமல்ல, முருங்கைக்கீரையில், இரும்புச்சத்து, பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, பீட்டா கரோட்டீன், வைட்டமின் B காம்பளக்ஸ், டைட்டாஜீ பைபர், கார்போஹைட்ரேட்ஸ், புரோட்டீன், இப்படி ஏகப்பட்ட விஷயங்கள் ஒளிந்து கொண்டுள்ளன..

நன்மைகள்: அனைத்தையும்விட மேலாக, ஆண்டி - ஆக்சிடன்ட், ஆண்டி - டயாபடிக், ஆண்டி - அத்திரோஜெனிக், ஆண்டி - ஹைப்பர் டென்சிவ், ஆண்டி - மைக்ரோபியல், ஆண்டி - இன்பிள மேட்ரி, ஆண்டி - பையிரிடிக், ஹெப்படோ புரொடெக்டிவ் இப்படி நோய் எதிர்ப்பு சக்திகள் அனைத்துமே நிரம்பி கிடப்பதால்தான், கற்பக விருட்சம் என்று இந்த மரத்தை அழைக்கிறார்கள்.

முருங்கைக்கீரை: இப்படி பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்தாலும், உடல் எடை குறைப்பதில், முருங்கைக்கீரையை விட பெஸ்ட் மருந்து வேறில்லை.. முருங்கை இலையில் தினமும் சூப் போல வைத்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பு அளவை குறைத்து உடல்எடை குறையும்.

முருங்கையிலையில் டீ போட்டு குடிக்கலாம்.. முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி எடுத்து, ஒரு கப் தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ள வேண்டும்.. அதை வடிகட்டி, எலுமிச்சை பழச்சாறு, தேன் சேர்த்து கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அல்லது இரவு உணவு சாப்பிட்ட அரை மணிநேரம் கழித்துக் குடிக்கலாம்..

கவனம்: ஆனால், இந்த டீயை தொடர்ந்து 7 நாட்கள் குடித்தபிறகு, இடைவெளி விட வேண்டுமாம்.. முக்கியமாக நீங்கள் ஏதாவது, மருந்து மாத்திரைகளை அன்றாடம் சாப்பிட்டு வருபவராக இருந்தால், டாக்டரின் அனுமதி இல்லாமல் இந்த டீயை குடிக்க வேண்டாம். அதேபோல, 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும் தர வேண்டாம்.

ஊட்டச்சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைய உள்ளதால், இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

அதேபோல, முருங்கைக்கீரையை சுத்தம் செய்து, நான்கைந்து நாட்கள் நிழலில் காயவைத்து, அதை மிக்சியில் தூளாக்கி, அதை சலித்து எடுத்து கொள்ள வேண்டும். பிறகு, 2 துண்டு சுக்கு, 5 கிராம் பட்டை, 5 கிராம் மிளகுதூள் மூன்றையும் இடித்து, பொடியாக்கி, முருங்கைக்கீரை பொடியுடன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

சூப்பர் பவுடர்: இப்போது ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இந்த பொடியில் அரை ஸ்பூன், சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக கொதித்ததும், சிறிது எலுமிச்சம் சாறு கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தாலே எடை குறையும். அதுமட்டுமல்ல, இந்த பொடியை தயார் செய்து வைத்துக் கொண்டால், இட்லி, தோசை, சப்பாத்திகளிலும் இந்த பவுடரை பயன்படுத்தி கொள்ளலாம்.

அதேபோல, முருங்கை இலை பொடிகள் தனியாகவே கடைகளில் விற்கின்றன.. இந்த பொடியில் குளோரோஜெனிக் அமிலம், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், குளோரோஜெனிக் போன்ற அமிலங்கள் உள்ளதால், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க பெரிதும் துணைபுரிகிறது.. உடல் எடையை வேகமாக குறைய வேண்டும் என்று நினைப்பவர்கள், இந்த முருங்கை பவுடரை டாக்டரின் ஆலோசனையை பெற்று பயன்படுத்தலாம்.

முருங்கைக்காய்கள்: அதேபோல, உடல் எடை குறைய முருங்கைக்காயையும் உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.. இது கொலஸ்ட்ராலை குறைப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளை கிடைக்க செய்துகிறது. முருங்கைக்காயை வெட்டி துண்டாக்கி வேகவைத்து, அதிலுள்ள சதைப்பகுதியை மட்டுமே தனியே வழித்து எடுத்து சூப் செய்யலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+