நாவல் கொட்டை.. சர்னு சர்க்கரை குறையணுமா? இந்த பவுடரை ட்ரை பண்ணுங்க.. ஆச்சரியம் தரும் நாவல்பழ கொட்டை
சென்னை: இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு நிறைந்த நாவல் பழத்தின் நன்மைகள் தெரியுமா? அதைவிட, நாவல் கொட்டைகள் செய்யும் ஆச்சரிய உண்மைகள் தெரியுமா?
வைட்டமின் C, இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், ஃபோலிக் அமிலம் என அத்தனை சத்துக்களும் இந்த நாவல் பழங்களில் உள்ளன.. அதனால்தான், சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் சீன மருத்துவ முறைகளில் நாவல் பழத்தின் கொட்டைகளுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் தரப்படுகிறது.

நாவல் பழம்: நாவல் பழங்கள், உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்கக்கூடியது... அனீமியா பிரச்சனை இருப்பவர்கள், உடல் எடை குறைய நினைப்பவர்கள், இந்த பழத்தை தேர்வு செய்யலாம்.. காரணம், மிகக்குறைந்த கலோரி பழம் என்பதுடன், உடலிலுள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மை இந்த நாவல் பழத்துக்கு உண்டு. அத்துடன் நல்ல கொழுப்பையும் உருவாக்குகிறது.
சருமத்துக்கு மிகப்பெரிய கவசமாக இந்த பழம் திகழ்கிறது.. சுருக்கங்களை தோலில் அண்டவிடாமல் செய்கிறது.. இந்த நாவல் இலைகளில்கூட, புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, சாம்பல் சத்து, பாஸ்பரஸ், சுண்ணாம்புச்சத்து நிறைந்துள்ளன.. நுண்கிருமிகளை அழிக்கும் திறன் கொண்ட இந்த இலைகள், இருமல், சளி மற்றும் தொண்டை பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருகிறது.
மரப்பட்டைகள்: வயிற்றுப்போக்கு, வயிற்று பொருமல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த இலைகளை சுத்தமாக கழுவி, அதை இடித்து சாறு எடுத்து, 3 நாட்கள் சாப்பிட்டு வந்தாலே போதும்.. இந்த மரத்தின் பட்டையை, நீரில் கொதிக்கவிட்டு, ஆறவைத்து குடித்து வந்தால், மாதவிடாய் காலத்தில் அதிக ரத்தப்போக்கு கட்டுப்படும்... இந்த இலைகளை கஷாயம் வைத்தும் சாப்பிடலாம். எனினும், மருத்துவர்களின் அறிவுரையை பெற்றே இவைகளை உட்கொள்ள வேண்டும்.
நாவல் கொட்டைகளை பொறுத்தவரை, நிறைய கால்சியம், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் C அடங்கியுள்ளது.. இது ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு துணை புரிகிறது இந்த கொட்டைகள்.. மூளையும் பலம் பெறும். நினைவாற்றலும் அதிகரிக்கும்.
சர்க்கரை நோயாளி: சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகிறது இந்த நாவல் கொட்டைகள்.. குறிப்பாக, கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க இந்த கொட்டைகள் உதவுகின்றன.. அந்தவகையில், நீரிழிவு நோயாளிகளுக்கு, நாவல் பழங்களைவிட, இந்த கொட்டைகள்தான் நிறைய பலன்களை தருகின்றன..
இதுகுறித்து ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.. அதாவது, நாவல் கொட்டை பவுடரை, சாப்பிட்டு வருபவர்களை பரிசோதனை செய்ததில் அவர்களது சர்க்கரை அளவும், சிறுநீரில் வெளியேறிய சர்க்கரை அளவும் குறைந்திருந்ததாம்.
நீரிழிவு நோயாளி: நீரிழிவு நோயாளிகள், இந்த கொட்டையை பதப்படுத்தி தூள் செய்து சாப்பிட்டு வரலாம்.. இந்த பழத்தின் கொட்டைகளை ஒரு வாரம் உலர்த்திவிட்டு, பிறகு, அதை இரண்டாக உடைத்து வெயிலில் காயவிட வேண்டும்.
இந்த கொட்டையினுள் காணப்படும் பச்சை நிறமும் காய்ந்தபிறகு, மிக்ஸியில் அரைத்து, சலித்து வைத்து கொண்டாலே போதும். தினமும் 2 வேளை, ஒரு டீஸ்பூன் அளவு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால், ஒரு மாதத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும் என்கிறார்கள்..
அதுமட்டுமல்ல, ரத்தத்தை சுத்தப்படுத்தவும், சிறுநீரில் நச்சுக்களை வெளியேற்றவும், கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சிறுநீர் வெளியேறும் பிரச்சனைக்கும், இந்த கொட்டையின் பொடி தீர்வை தருகிறது.
சுருக்கமாக சொல்லப்போனால், மாத்திரைகளால் சர்க்கரையை கட்டுப்படுத்த முடியாதவர்களுக்குகூட, இந்த நாவல் கொட்டை பொடி கைகொடுத்து உதவுகிறது.. அந்தவகையில், மருத்துவரின் முறையான ஆலோசனையை பெற்று நாவல் கொட்டை பவுடரை பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications