Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கழற்சிக்காய்.. கருப்பை கோளாறை நீக்கும் "பெண்களின் மருந்து".. கழற்சிக்காயை ஆண்கள் சாப்பிடலாமா? அருமை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெண்களின் கர்ப்பப்பை கோளாறு முதல் ஆண்களின் விதைப்பை கோளாறுவரை சரிசெய்யக்கூடிய அற்புதமான மூலிகைதான் இந்த கழற்சிக்காய்.

இப்போதெல்லாம் இளம்பெண்களுக்கு, பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் என்ற சொல்லக்கூடிய பிசிஓடி பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.. ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஆகிய ஹார்மோன் சுரப்பு குறைவதால், பெண்களுக்கு உடலில் குறைவதாலும், ஆண்களுக்கு சுரக்கக்கூடிய ஆண்ட்ரோஜன் அளவு அதிகமாக சுரப்பதாலும், இளம்பெண்களுக்கு சினைப்பையில் சிறுசிறு நீர்க்கட்டிகள் உண்டாகின்றன.

Do you know the Amazing Health Benefits in Kalarchikkai and Kalarchikai is the Best protection for uterus

உடல் எடை: இதன்காரணமாக, பெண்களுக்கு முகத்திலும், உடல், வயிறு பகுதிகளிலும் தேவையற்ற முடிகள் வந்துவிடும்.. உடல் எடை அதிகரிப்பது, தலைமுடி கொட்டுவது, ஒழுங்கற்ற மாதவிடாய், உள்ளிட்ட பல உபாதைகள் வந்துவிடும். இதை கவனிக்காமல் விட்டுவிட்டால், கருத்தரிப்பதில் சிக்கலை உண்டுபண்ணிவிடும்.

எனினும், இயற்கையான முறையில், இந்த கர்ப்பப்பை நீர்க்கட்டிகளை அகற்றுவதற்கு உதவுவதான் கழற்சிக்காய். இளம்பெண்களின் வரப்பிரசாதம் என்றே இந்த காய்களை சொல்லலாம். சிலர் இதனை கச்சக்காய் என்றும் சொல்வார்கள். தென்மாவட்டங்களில் இதை தெலுக்காய் என்று சொல்வார்கள்..

பருப்புகள்: கழற்சிக்காய்கள் பார்ப்பதற்கு முட்டை போலவே இருக்கும்.. உள்ளே பருப்பு காணப்படும். அந்த பருப்பு மிகவும் கசப்புத்தன்மை வாய்ந்தது.

இந்த கழற்சிக்காயை உடைத்து, அதிலுள்ள பருப்புகளை காயவைத்து அரைத்து, பவுடராக்கி வைத்து கொள்ள வேண்டும். இதனுடன், கால் ஸ்பூன் மிளகு தூள், சிறிது தேன் கலந்து, குட்டி குட்டி உருண்டைகளாக உருட்டி கொள்ள வேண்டும். இந்த உருண்டையை தினமும் 2 வேளையும், 2 மாதங்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே, கர்ப்பப்பையில் உருவாகியிருக்கும் நீர்க்கட்டிகள் கரைந்துவிடும். தொற்றுகள் நீங்கிவிடும்.

கசப்பு மிகுந்த இந்த பருப்பை வெறுமனே மென்று சாப்பிட்டால், இன்னும் பலன் கிடைக்கும். நாட்டுமருந்து கடைகளில், கழற்சிக்காய் சூரணம் என்றே தனியாக விற்கிறார்கள். இந்த சூரணத்தை ஐந்து கிராம் எடுத்து ஒரு டம்ளர் மோரில் கலந்து காலை, மாலை என தொடர்ந்து 2 மாதம் குடித்தால், சினைப்பையில் காணப்படும் நீர்க்கட்டிகள் கரையும். மாதவிடாய் பிரச்சனை சீராகும். ஹார்மோன் பிரச்சனையும் சீராகும்.
காயங்கள்: அரைத்து தூளாக்கப்பட்ட கழற்சிக்காயை தூள் செய்து, நீருடன் குழைத்து ஆறாத புண்கள், காயங்கள் மீது போட்டுவந்தாலே, விரைவில் குணமாகிவிடும்.. அதேபோல, உடம்பில் வீக்கங்கள் இருந்தாலும், இந்த கழற்சிக்காய் இலைகள், விதைகளை விழுதுபோல அரைத்து பூசலாம்..

வாயு கோளாறுகள், வயிறு கோளாறுகள், இந்த கழற்சிப்பருப்புகளை, ஐந்து மிளகுடன் சேர்த்தி அரைத்து, மாலை, மாலை சாப்பிட்டு வந்தால், கர்ப்பப்பை வலி முதல் கடும்காய்ச்சல் வரை குணமாகும். இந்த கழற்சிக்காய் பருப்பை, சிறிது பெருங்காயம் சேர்த்து மோருடன் குடித்தால் வயிறுவலி பறந்தோடிரும்.

ஆண்கள் பிரச்சனை: சில ஆண்களுக்கு, அடிபட்டுவிட்டாலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களினாலோ, அவர்களின் விரைகள் வீங்கி விடும்... இப்படியான பாதிப்புகள் இருந்தால், விளக்கெண்ணெயில் கழற்சிசூரணத்தை போட்டு காய்ச்சி, அதை வடிகட்டி எடுத்து கொள்ள வேண்டும். இந்த தைலத்தை விரைவீக்கமுள்ள இடத்தில் மருந்தாக தடவி வந்தால், விரைவீக்கம் நீங்கும் என்கிறார்கள்.

அதேபோல விரைவாதம் குறைய வேண்டுமானால், ஒரு வாணலியில் கழற்சிக்காய் விதைகளை லேசாக வறுத்து தூள் செய்து கொள்ள வேண்டும். சிட்டிகை அளவு பொடியை, வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தாலே விரைவாதம் நீங்குமாம். இப்படி பல அற்புத பலன்களை தரும் இந்த கழற்சிக்காயை, மருத்துவரின் முறையான ஆலோசனையின் பேரில் மருந்தாக எடுத்துக் கொண்டால், ஆரோக்கியத்தில் கோடிபலன் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+