பொட்டு கடலை.. ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை போதுமே.. பட்டுன்னு ஓடும் நோய்.. கொட்டி கிடக்கும் ஆச்சரியம்
சென்னை: பொட்டுக்கடலையை போல பெஸ்ட் உணவு வேறு இருக்க முடியாது.. குறைந்த விலையில், நிறைந்த சத்துக்களை கொண்ட இந்த வறுத்த பொட்டுக்கடலை, பெண்களுக்கு எப்படியெல்லாம் மருத்துவ பலனை தருகிறது தெரியுமா?
பொட்டுக்கடலையை பொறுத்தவரை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடியதுதான்.. கர்ப்பிணிகளுக்கும் ஏற்ற உணவு.. சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்ற உணவு.. குழந்தைகளுக்கும் ஏற்ற உணவு.

சத்துக்கள்: வைட்டமின் A, B1, B2, B3, கால்சியம், பொட்டாசியம் நிறைந்த இந்த பொட்டுக்கடலை குறைந்த அளவு கலோரிகளை கொண்டது.. ஊட்டச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த கடலை என்பதால், உடல் எடை குறைப்பவர்கள் தாராளமாக வறுத்த பொட்டுக்கடலையை சாப்பிடலாம்.
சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடும்போது, குளுக்கோஸ் ஏற்ற இறக்கத்தை சீராக்குகிறது. வெறும் ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டாலே, பெண்களுக்கு கிடைக்கும் பிரத்யேக நன்மைகள் ஏராளம். வறுத்த பொட்டுக்கடலையில் நிறைய செலினியம் காணப்படுகிறது.. இது டிஎன்ஏ சேதத்தை குறைப்பதற்கும் தனிநபர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கும், புற்றுநோய்களின் அபாயத்தை குறைப்பதற்கும் பேருதவி புரிகிறது.
பெண்கள்: உடலிலுள்ளள்ள உயிரணுக்களுக்கு ஆற்றலை வழங்குவதல் முதல் பல்வேறு உடல் செயற்பாடுகளுக்கு புரோட்டீன் மிக முக்கியமான ஒன்றாகும்.. அந்தவகையில், பெண்களுக்கு, ஒரு நாளைக்கு குறைந்தது 50 கிராம் அளவிற்கு புரதம் தேவைப்படுகிறது..
பெண்களுக்கு எடை மேலாண்மை, எலும்பு ஆரோக்கியம், முடி வளர்ச்சி, சருமம், நகங்கள் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்துக்கு மிகவும் அடிப்படை தேவையானது புரோட்டீன்கள்தான். எனவே, பெண்கள் புரோட்டீனை உணவில் அதிக அளவில் எடுத்து கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட புரோட்டீன்கள் இந்த வறுத்த பொட்டுக்கடலையில் நிறைய உள்ளது. அதுவும், குறைந்த கலோரியில் நிறைந்த புரோட்டீன் என்பது பெண்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
மாதவிடாய்: அதேபோல, மாதவிடாய் நேரத்தில், அதிக ரத்தப்போக்கு இருந்தால், ஒரு கைப்பிடி பொட்டுக்கடலை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்தாலே போதும்.. ரத்தப்போக்கு உடனடியாக கட்டுக்குள் வரும் என்பார்கள்.
அதுமட்டுமல்ல கர்ப்பிணி பெண்கள், சத்தான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியிருக்கிறது.. எனவே, சிறிதளவு வறுத்த பொட்டுக்கடலை சாப்பிடுவதால், வயிற்றிலுள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்குமாம்.. வயிற்று பிரச்சனைகளும் நெருங்காது..
தலைமுடி, சருமம்: முகத்திற்கு அழகும், சருமத்துக்கு பளபளப்பும் தருகிறது இந்த பொட்டுக்கடலை.. படை, சொறி, அரிப்பு போன்ற பிரச்சனைகளையும் இந்த பொட்டுக்கடலையை வைத்து விரட்டலாம்.. வலுவான மற்றும் அடர்த்தியான தலைமுடியையும் இந்த பொட்டுக்கடலையை வைத்து எளிதாக பெறலாம்.. உடல் மெலிந்துள்ள பெண்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ள பெண்கள், கர்ப்பிணிகள் என அனைவருக்குமே சிறந்த உணவாக திகழ்கிறது இந்த பொட்டுக்கடலை.
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications