ஹார்ட் அட்டாக், மூச்சுத்திணறல்.. குறட்டையை குறையணுமா? 1 ஸ்பூன் நெய் போதுமே.. சூப்பர் ஹெல்த் டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: குறட்டை விடுவது ஆபத்தானதா? குறட்டை வருவதற்கு என்ன காரணம்? குறட்டை பிரச்சனையை தீர்க்க எளிய மருத்துவம் உள்ளதா?

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது. இந்த பாதையில் எங்காவது தடை ஏற்படும்போதுதான் குறட்டை ஏற்படுகிறது.

ghee health tips

மூச்சு பாதை: அதாவது நாம் தூங்கும்போதுதான் தொண்டையிலுள்ள தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கும்போது, மூச்சு பாதையின் அளவு இயல்பாகவே குறுகலாகிவிடும். இப்படி குறுகிய பாதையில் சுவாசக்காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவதையே குறட்டை என்கிறோம்.

யார் யாருக்கெல்லாம் குறட்டை வரும் தெரியுமா? தொப்பை அதிகமாக இருப்பவர்களுக்கு குறட்டை வரும். அதேபோல, ஆஸ்துமா நோயாளிகள், சைனஸ் தொந்தரவு உள்ளவர்களுக்கும் குறட்டை வரும்..

கொழுப்பு, சாப்பிட்டு தூங்குபவர்களுக்கும் குறட்டை வரும்.. தொண்டையில், மூக்கில் சதை வளர்ச்சி இருந்தால் குறட்டை வரும். மூக்கு இடைச்சுவர் வளைவு காரணங்களினால் குறட்டை வரும்..

அதேபோல, சளியுடன் கூடிய மூக்கடைப்பு, அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, மூக்கு இடைச்சுவர் வளைவு, தைராய்டு பிரச்சனை, உடல் பருமன், கழுத்தைச்சுற்றிலும் கொழுப்பு, போன்றவைகளும் குறட்டை ஏற்பட காரணமாகிவிடுகின்றன. நிறைய சிகரெட் பிடிப்பவர்களுக்கும், மது அருந்துபவர்களுக்கும், அதிகமான தூக்க மாத்திரை சாப்பிடுபவர்களுக்கும்கூட குறட்டை ஏற்படுவதுண்டு.

குறட்டையின் பாதிப்பு: குறட்டை தொந்தரவு இருந்தால், இதயதுடிப்பில் தள்ளாட்டம், இதயத்தசைகள் வலுக்குறைவது, ஹார்ட் அட்டாக் என உயிருக்கே அபாயத்தை தந்துவிடும். அதேபோல, சிலநேரங்களில் சத்தம் நின்றுவிடுவது போல, அல்லது மூச்சு திணறுவது போலிருந்தால் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனென்றால், இதயம், நுரையீரல், தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறியாக இவைகள் இருக்கலாம்.. அதனால், குறட்டை சத்தம் அதிகமாக இருப்பவர்கள், இதயநோய், நுரையீரல் நோய், தொண்டை நோய்கள் போன்றவற்றுக்கு ஆளாகி உள்ளார்களா என்பதை டெஸ்ட் செய்து கொள்வதுடன், உடனடியாக டாக்டர்களை சந்தித்து ஆலோசனையையும பெற்றுக் கொள்ள வேண்டும்.

எளிய தீர்வு: இந்த குறட்டை ஆரம்ப நிலையில் இருந்தால், சில எளிய தீர்வுகளை நாம் முயற்சிக்கலாம்.. உதாரணத்துக்கு மல்லாந்து படுக்காமல், ஒருபக்கமாக படுத்து பழக வேண்டும்.

சீரகம், கருஞ்சீரகம், பெருஞ்சீரகத்தை சமமாக எடுத்து, தூள் செய்து காலை, இரவு டீ போல போட்டு குடித்து வருவதால் குறட்டை கட்டுக்குள் வரும்.. லவங்கப்பட்டை, செம்பருத்தி பூ, கிராம்பு இந்த மூன்றையும் ஒன்றாக சேர்த்து டீ தயாரித்து குடித்தாலும் தொண்டை சதைகளுக்கு தற்காலிக நிவாரணம் கிடைக்கும். ஒரு கிளாஸ் தண்ணீரில் 1 ஸ்பூன் ஏலக்காய் தூளை கலந்து குடித்துவிட்டு தூங்கினால் குறட்டை மெல்ல குறையலாம்..

அழற்சி பண்புகள்: அதேபோல, தூங்குவதற்கு முன்பு, சுத்தமான நெய்யை லேசாக சூடுசெய்து, மூக்கில் ஓரிரு துளிகள் விட்டுக்கொண்டு படுத்தால் குறட்டை குறையும்.. ஆலிவ் எண்ணெய்யும் இதற்கு பயன்படுத்தலாம். காரணம், நெய் போலவே, ஆலிவ் எண்ணெயிலும் அழற்சி பண்புகள் உள்ளன. எனவே, இதில் தேன் கலந்து சாப்பிட்டு, தூங்க சென்றால், குறட்டை குறையும்.

நாட்டு மருந்து கடைகளில் குறட்டைபழம் என்றே தனியாக விற்கிறார்கள்.. இந்த பழத்திலிருந்து சாறு எடுத்து, நல்லெண்ணெய், மற்றும் மிளகு சேர்த்து காய்ச்சி வடிகட்டி தலைக்கு தேய்த்து குளிப்பார்கள். இதனால் நல்ல பலன் ஏற்படும்.

தொண்டையில் சதை: அதேபோல, குழந்தைகளுக்கு அடினாய்டு, டான்சிலைடிஸ் பிரச்சனைகள் இருந்தால், அதனால் ஏற்படும் தொண்டை சதையின் மூச்சு இறுக்கத்தாலும், நெஞ்சில் சளி கட்டியிருந்தாலும்கூட குறட்டை ஏற்படலாம். இதற்கு கற்பூரவல்லி இலையிலிருந்து சாறு எடுத்து, தேன் கலந்து தந்தால், டான்சில் வீக்கம் குறையும். மிளகு + தேன் இரண்டையும் குழைத்து தந்தாலும், சைனஸ், டான்சிலைடிஸ், நெஞ்சு சளி, இருமல் போன்றவையும் குறையும்..

பெரியவர்களுக்கு மூக்கடைப்பு, சைனஸ் தொந்தரவு இருந்தால் தூங்க செல்வதற்கு முன்பு, வெந்நீரில் மஞ்சள் தூள் சேர்த்து ஆவி பிடித்தால் நிவாரணம் கிடைக்கும். எனினும், குறட்டையை அலட்சியப்படுத்தக்கூடாது.. இதெல்லாம் தற்காலிக நிவாரணம்தானே தவிர, டாக்டர்களை சந்தித்து ஆலோசனை பெறுவதே முறையான பாதுகாப்பாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+