நீர்முள்ளி விதை.. அத்தனை கோளாறையும் விரட்டும் ஒரே பவுடர்.. குழந்தை பேறு தரும் நீர்முள்ளிச்செடி.. செம

Subscribe to Oneindia Tamil

சென்னை: நரம்பு கோளாறுகளையும், சிறுநீரக கோளாறுகளையும் தீர்க்கக்கூடிய வரப்பிரசாதமாக நமக்கு கிடைத்துள்ள மூலிகைதான் நீர்முள்ளி.. இந்த செடியின் நன்மைகள் என்னென்ன தெரியுமா? இந்த மூலிகையை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

நீர்வளம் நிறைந்த பகுதியில், தானாகவே வளரக்கூடியது இந்த நீர்முள்ளி செடிகள்.. வியர்வையை அதிகப்படுத்தி, சிறுநீரை பெருக்கும் தன்மை இந்த செடிக்கு உள்ளது.. சருமத்துக்கு கவசம் போல செயல்படுகிறது இந்த மூலிகை.. சொறி சிரங்கு பிரச்சனையை எளிதாக தீர்ப்பதுடன், தலைவலி, காய்ச்சல், மலச்சிக்கல் கோளாறுகளையும் இந்த செடி தீர்க்கிறது.

Do you know the Amazing Health Benefits of Neermulli Powder and Neer Mulli Seeds are the Best Medicine for Men

மாதவிலக்கு: பெரும்பாலும் நீர்முள்ளி மூலிகையில் கஷாயம் வைத்து குடிப்பார்கள்.. பெண்களுக்கு அருமருந்தாக திகழக்கூடியது இந்த நீர்முள்ளி கஷாயம்.. மாதவிலக்குக் கோளாறு, மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்சனை இருந்தால், நீர் முள்ளிக்கஷாயத்தை குடித்து வரலாம். மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள், இந்த நீர்முள்ளியுடன், திரிபலா சூரணத்தை கலந்து கஷாயம் வைத்து குடித்தால், வாயு, அஜீரண கோளாறுகள் நீங்கி, மலச்சிக்கலும் தீரும்..

சிறுநீரக கல் அடைப்பு பிரச்சனை இருப்பவர்கள், நீர்முள்ளியை, கஷாயம் போல தயாரித்து தினமும் 2 வேளை குடித்து வந்தாலே தீர்வு கிடைக்கும்.. குட்டி குட்டி கற்கள் சிறுநீரகத்திலேயே கரைந்து வெளியேறிவிடும். அத்துடன், உடலிலுள்ள களைப்பும் சோர்வும் நீங்கிவிடும்..

மூட்டுவலி: மூட்டு வலி, முழங்கால் வலியை நீக்கி, மூட்டுகளுக்கு உறுதியை கொடுக்கும் தன்மை இந்த நீர்முள்ளிக்கு உண்டு.. அதனால்தான், வெறுமனே இந்த நீர்முள்ளியை தண்ணீரில் காய்ச்சி குடிப்பார்கள். இந்த செடியின் இலைகள் குளிர்ச்சியை தரக்கூடியது. இந்த இலைகளை பறித்து, கஷாயம் வைத்து குடித்தால், வயிற்றிலுள்ள புண்கள் ஆறுவதுடன், குடல் பாதுகாப்பும் மேம்படும்.

இந்த செடியின் விதைகளில்தான், வைட்டமின் E, புரதச்சத்து, இரும்புச்சத்து, நீர்ச்சத்து நிறைந்துள்ளன.. உடலுக்கு சக்தி தரக்கூடிய மருந்துகளிலும், தாய்ப்பாலை அதிகரிக்க செய்யும் மருந்துகளிலும், இந்த நீர்முள்ளி விதை சேர்க்கப்படுகிறது. ரத்தசோகை பிரச்சனை இருப்பவர்கள், இந்த விதைகளை பாலில் ஊறவைத்து சாப்பிடலாம்..

நீர்முள்ளி இலை மற்றும் விதையின் பொடியை மருந்தாக உட்கொள்ளும்போது, இதிலுள்ள ஆன்டி இன்பிளமேட்டரி பண்புகள் Rheumatoid Arthritis முடக்குவாதத்தின் அறிகுறிகளை வெகுவாக குறைக்கின்றன...

நீர்முள்ளி விதைகள்: உடலிலுள்ள தேவையற்ற நீரை வெளியேற்றும் ஆற்றல் இந்த விதைகளுக்கு உள்ளது.. குளிர்ச்சியை தரக்கூடிய இந்த விதைகள், உடலில் ஏற்படும் உஷ்ண குறைபாடுகளை நிக்குகிறது.. சர்க்கரையின் அளவையும் கட்டுக்குள்கொண்டு வருகிறது..

பெரும்பாலும், ஆண்மை குறைகளை நீக்கி, விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்த விதைகள் பயன்படுத்தப்படுகின்றன.. நீர்முள்ளி விதையுடன், முருங்கை விதை, தாமரை விதை, வெங்காய விதை சம அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தாலே, ஆண்மை பெருகும் என்பார்கள்.. அல்லது நீர்முள்ளி விதையை மட்டும் தனியாக அரைத்து பசும்பாலுடன் கலந்து குடிக்கலாம். அல்லது இந்த விதைகளை ஊறவைத்து அல்வா போல செய்து சாப்பிடலாம்..

அல்லது நீர்முள்ளி விதையுடன், பாதாம் பருப்பு, கசகசா கலந்து தண்ணீரில் ஊற வைத்து, பாலுடன் காய்ச்சி குடித்தாலும் தாது பலப்படும் என்பார்கள்.. குழந்தை பேறு தரும் இந்த விதையை, மருத்துவர்களின் தகுந்த ஆலோசனையை பெற்று சாப்பிட்டால் பெருத்த பலன் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+