செல்வப்பெருந்தகை மகள் திருமண விழாவில் நெகிழ வைத்த ஸ்டாலின்.. சுவாரஸ்யமான சம்பவங்கள்
சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் அக்ஷய பிரியாவின் திருமணம் இன்று (ஜூன் 18) மாலை சென்னை பல்லாவரம் 200 அடி சாலையில் உள்ள புது வாழ்வு கொண்டாட்ட மையத்தில் நடந்தது. இந்த விழாவில் திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, டி ஆர் பாலு எம்பி, முன்னாள் அமைச்சர்கள் நேரு, எ. வ.வேலு, சேகர்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.
திமுக தலைவர் ஸ்டாலின் மணமக்களிடம் மாலைகள் கொடுத்து மாற்ற சொல்லி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து புகைப்படம் எடுத்த போது, செல்வப் பெருந்தகை உதயநிதி அருகில் சென்று நின்ற நிலையில், ஸ்டாலின் அவரை அழைத்து தன்னருகில் நிற்க வைத்தார். பின்னர் ஸ்டாிினை கையைப் பிடித்துக் கொண்டு உணவருந்த அழைத்துச் சென்றார் செல்வப் பெருந்தகை.

இந்த விழாவில் தேமுதிக பொதுச்செயலாளரும் எம்எல்ஏவும் பிரேமலதா விஜயகாந்த் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார். ஜோதிமணி எம் பி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் , அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதேபோல செல்வப்பெருந்தகை மகள் திருமண விழாவில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்ளர் சீமான், முன்னாள் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், செந்தில் பாலாஜி, மற்றும் அமைச்சர் ஸ்ரீநாத், பாமக தலைவர் ஜிகே மணி ,காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவர் கேஎஸ் அழகிரி, வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ், விஜடி பல்கலைக்கழக வேந்தர் விஸ்வநாதன், நடிகர் மன்சூர் அலிகான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன், திமுக எம்பி கலாநிதி வீராசாமி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவிற்கு வருகை தந்தவர்களை செல்வப்பெருந்தகை தனது மனைவியுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் வரவேற்றார். இந்த திருமண விழாவில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் பலர் திமுக தலைவர்களிடம் சிரித்து மகிழ்ச்சியுடன் பேசினார்கள். அரசியல் கலப்பு இல்லாமல் திருமண விழாவிற்கு அனைவரும் வருகை தந்தனர்.














Click it and Unblock the Notifications