தலைமைச் செயலாளர் சாய்குமார் விவகாரத்தில் பெரிய ட்விஸ்ட்.. மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் ஓய்வுபெறவுள்ள தலைமைச் செயலாளர் சாய் குமார் ஐஏஎஸ்-க்கு பணி நீட்டிப்பு வழங்குமாறு கோரி, முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி உள்ளது. தலைமைச் செயலாளர் பதவிக்கு வேறு பல மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் வரிசையில் உள்ள நிலையில், ஓய்வு பெறுவதற்கு ஏறக்குறைய இரண்டரை மாதங்களுக்கு முன்பாகவே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனைக்கு மிகப்பெரிய ட்விஸ்ட் என்னவென்றால், சாய்குமாரை தலைமை செயலாளராக நியமித்தது விஜய் அரசு அல்ல.. தேர்தல் ஆணையம். அவரே இன்றும் தலைமை செயலாளராக தொடருகிறார். அவருக்கு பதவி நீட்டிப்பு கேட்டு விஜய் தலைமையிலான தமிழக அரசு மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி இருப்பது ஐஏஎஸ் அதிகாரிகளிடையே விவாதத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Extension of Chief Secretary Saikumar s tenure Tamil Nadu government writes to the Centre

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ்., மதுரை மாவட்டம், தர்மபுரி மாவட்டம், விருதுநகர் மாவட்டம் உள்பட பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியவர். தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவர், நகராட்சி நிர்வாக ஆணையர், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை பல ஆண்டுகளாக வகித்துள்ளார். அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரின் முதன்மைச் செயலாளர் - 1 ஆகவும் பணியில் இருந்தவர் தான் சாய்குமார் ஐஏஎஸ்.

இவர் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக சாய்குமார் ஐ.ஏ.எஸ் ஏப்ரல் 8-ம் தேதி தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அப்போது அமலில் இருந்ததால், அப்போதைய தலைமைச் செயலாளர் முருகானந்தம் ஐ.ஏ.எஸ்ஸை மாற்றிவிட்டு சாய்குமாரை தேர்தல் ஆணையம் தலைமைச் செயலாளராக நியமித்து இருந்தது.

பொதுவாக தேர்தலுக்கு பின்னர் வரும் அரசுகள் தாங்கள் விரும்பும் அதிகாரியை தலைமை செயலாளராக நியமித்து கொள்ளும், மத்திய அரசிடம் பட்டியலை அனுப்பி அவர்களை தேர்வு செய்து கொள்ளும். அப்படித்தான் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஸ்டாலின், தலைமை செயலாளராக வெ. இறையன்புவை நியமித்தார்.

ஆனால் தேர்தலுக்குப் பின்பு முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு அமைந்த பின்பு கடந்தகால அரசில் பதவி வகித்த ஜூனியர் முதல் சீனியர்கள் வரையிலான பல ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்துவிட்டது. புதிய டி.ஜி.பி-யும் நியமிக்கப்பட்டார் ஆனால் தேர்தல் ஆணையத்தால் நியமிக்க தலைமைச் செயலாளரான சாய்குமார் ஐ.ஏ.எஸ்ஸை மட்டும் மாற்றம் செய்யவில். வழக்கமாக ஒரு புதிய அரசு அமையும்போது முதலில் தலைமைச் செயலாளர் மாற்றப்பட்ட பின்புதான், பிற அதிகாரிகளின் மாற்றங்களை தலைமைச் செயலாளரை வைத்து அரசு மேற்கொள்ளும். ஆனால் தவெக அரசு அமைந்த பின்பு இந்த நடைமுறை அடியோடு மாறி உள்ளது.

இந்நிலையில் தான் தலைமைச் செயலாளர் சாய்குமார் ஐ.ஏ.எஸ் ஆக்ஸ்ட் 31-ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். அவரை பணி நீட்டிக்க தவெக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசிற்கு தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியுள்ளது., இது குறித்த இறுதி முடிவை மத்திய அரசு எடுக்க போகிறது.

சாய்குமாரை பதவி நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டால். பணி ஓய்விற்கு பின் 3 மாதங்கள் முதலில் நீட்டிப்பு செய்யப்படுவார் அதன்பின் மேலும் பதவி நீட்டிப்பு வழங்கப்படும். எனினும் வழக்கமாக ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பணி நீட்டிப்பு வழங்கும் முடிவினை, மாநில அரசுக்கு அந்தக் குறிப்பிட்ட அதிகாரி ஓய்வு பெறும் நாளிலிருந்து ஒரு வாரத்திற்கு முன்பே எடுக்கும், ஆனால் சாய்குமார் ஐ.ஏ.எஸ் ஓய்வு பெற இன்னும் இரண்டரை மாதங்கள் உள்ள நிலையில், அதற்கான தேவை ஏன் எழுந்தது என்று கேள்விகள் எழுந்துள்ளது. அதேபோல தற்போது கூடுதல் தலைமைச் செயலாளர் பொறுப்பில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் உள்ளார்கள். ஆனால் அவர்களுக்கு பதில் ஏன் சாய்குமார் ஐ.ஏ.எஸ்ஸுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று தலைமை செயலகத்தில் கேள்விகள் எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+