குள்ளநரிகள் கெடுத்து விட்டனர்.. நீங்க பேசுனது ரொம்ப தவறு.. அமைச்சருக்கு விழுந்த டோஸ்.. நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அமைச்சர் விஸ்வநாதனுக்கு எதிராக கோபமாக வெடித்திருக்கிறார் காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரம். புதுச்சேரியில் நடந்த கட்சி நிகழ்சியில் கலந்துகொண்ட காங்கிரஸை சேர்ந்த தமிழக உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன், ''தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தி ருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு நமக்கு 70 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்திருக்கும். அதை வைத்து 1 துணை முதல்வர் பதவியும், 10 அமைச்சர் பதவிகளும் நமக்கு கிடைத்திருக்கும் . ஆனால், காங்கிரசில் இருக்கும் சில குள்ளநரிகள் அதை கெடுத்து விட்டனர். குழிபறித்து விட்டனர்'' என்று ஆவேசமாக பேசியிருந்தார்.

விஸ்வநாதனின் குள்ளநரிகள் பேச்சு காங்கிரசில் ப.சிதம்பரம் ஆதரவாளர் களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி வைக்க தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளில் 90 சதவீதம் பேர் விரும்பியிருந்தனர். இதனை விரும்பாத திமுக தலைமை, அப்போதைய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையிடம் விவாதித்து கூட்டணியிலிருந்து விலகாமல் பார்த்துக்கொண்டது.

Karthi Chidambaram

அதே சமயம், ''நான் மட்டுமே மல்லிகார்ஜுனகார்கேவிடம் பேசுவது வொர்க் அவுட் ஆகாது. நீங்கள் ப.சி.யிடம் பேசுங்கள். அவர் கார்கே மற்றும் சோனியாவிடம் பேசினால் காங்கிரசை கூட்டணியில் தக்க வைத்துக்கொள்ள முடியும்'' என யோசனை தெரிவித்திருந்தார்.

இது சரியாக இருக்கும் என யோசித்த திமுக தலைவர் ஸ்டாலின், ப.சிதம்பரத்தை தனது இல்லத்துக்கு அழைத்தார். ஸ்டாலின் - ப.சி. சந்திப்பு நடந்தது. கிட்டத்தட்ட 1 மணி நேரத்துக்கும் அதிகமாக விவாதித்தனர். இதனை அடுத்து ப.சிதம்பரம் அவரது ரோலில் பல முயற்சிகளை எடுத்தார்; செல்வப்பெருந் தகை அவரது ரோலில் சில முயற்சிகளை எடுத்தார். இருவரின் முயற்சிகள் ஒரு கட்டத்தில் ஒரு நேர்க்கோட்டில் வந்து, காங்கிரஸை திமுக கூட்டணியிலேயே இருக்க வைத்தது. இதில் நிம்மதி பெருமூச்சு விட்டார் ஸ்டாலின்.

நீண்ட இழுபறிக்குப் பிறகு காங்கிரசை திமுக தக்க வைத்துக் கொண்டா லும், இரு தரப்புக்கும் ஏற்பட்ட மனக்கசப்புகள், தேர்தல் களத்தில் வாக்குகளாக ட்ரான்ஸ்ஃபர் ஆக வில்லை என்பது தேர்தல் முடிவுகள் காட்டின. அதாவது, திமுகவும் காங்கிரசும் களத்தில் இணைந்து மனப்பூர்வமாக உழைக்க வில்லை. குறிப்பாக, திமுகவுக்கு ஓட்டுப்போடாமல் ஏமாற்றி, தவெகவை ஆதரித்தனர் கதர் சட்டைகள். இதுதான் தேர்தல் முடிவுகள் தெரிவித்தன.

தேர்தலுக்கு பிறகு தவெக கூட்டணியில் இணைந்து கூட்டணி ஆட்சியில் 2 அமைச்சர் பதவிகளும் வாங்கியது காங்கிரஸ். தேர்தலுக்கு முன்பே தவெக கூட்டணியில் சேர்ந்திருக்க வேண்டும் என்று கடந்த 2 மாதங்களாவே காங்கிர சில் எதிரொலித்தபடிதான் இருந்தது. இந்த நிலையில் தான் அமைச்சர் விஸ்வ நாதன், குள்ளநரிகள் என கடுமையாக விமர்சித்திருக்கிறார். அவரது விமர்சனம், ப.சிதம்பரத்தையும் செல்வப்பெருந்தகையையும் குறிப்பிடு வதாக சிதம்பரம் ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.

கார்த்தி சிதம்பரத்தை தொடர்புகொண்டு, ''தலைவர் சிதம்பரத்தின் தயவால் தான் விஸ்வநாதனுக்கு காங்கிரஸில் இந்தளவுக்கு அரசியல் முக்கிய த்துவம் கிடைத்தது. அவரது அரசியல் வளர்ச்சி என்பது நம் தலைவராலும் உங்களின் ஆதரவாலும் கிடைத்தவை. ஆனால் அந்த நன்றியை மறந்து விட்டு , இன்றைக்கு நம் தலைவரை குள்ளநரி ; குழிபறித்து விட்டனர் என்றெல்லாம் பொது வெளியில் பேசுகிறார் விஸ்வநாதன். நம் தலைவர் தானே, திமுக கூட்டணியில் காங்கிரசை இருக்க வைத்தது. அதனால் விஸ்வநாதனின் மோசமான பேச்சு நம் தலைவரைத்தான் குறிக்கிறது. நீங்கள் இதற்கு எதிர் வினையாற்ற வேண்டும், இல்லையெனில் விஸ்வநாதனுக்கு எதிராக நாங்கள் பேசுவோம் '' என்று கொந்தளித்திருக்கிறார்கள்.

அவர்களை சமாதானப்படுத்திய கார்த்தி சிதம்பரம், நீங்கள் எதையும் செய்யாதீர்கள் என அட்வைஸ் செய்து விட்டு, விஸ்வநாதனிடம் இது குறித்து விளக்கம் கேட்டுள்ளார். விஸ்வநாதனால் பதில் சொல்ல முடியவில்லை. இதனால் அவரிடம் கோபமாக கடிந்து கொண்டதுடன் எச்சரிக்கையும் செய்திருக்கிறார் கார்த்தி என்கிறார்கள் சிதம்பரம் ஆதரவாளர்கள்.

- சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+