அத்திக்காய் காய் காய் காய்..! குடிப்பழக்கத்தால் கல்லீரலில் பிரச்சினையா? அதான் அத்திக்காய் இருக்கே!
சென்னை: அத்திப்பழத்தின் நன்மைகள் என்னவென நமக்கு தெரிந்திருக்கும். ஆனால் அத்திக்காயின் ஆரோக்கிய குறிப்புகள் பெரும்பாலானோருக்கு தெரியாது. இந்த காயால் வயிற்றுக்கு ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன.
அத்திக்காயில் பலர் ஊறுகாய் போடுவார்கள். இந்த அத்திக்காயை வாங்கி வந்து அவற்றை 4 துண்டுகளாக போட்டு அதன் நடுவே இருக்கும் விதைகளை நீக்க வேண்டும்.

அத்திக்காயின் விதை பகுதியில் பூச்சி, புழுக்கள் இருக்கும். எனவே கவனமாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இந்த அத்திக்காய் துவர்ப்பு சுவையுடையது. அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து குழம்பு வைக்கலாம்.
இந்த அத்திக்காயில் பொரியல் செய்யலாம். இதில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து உள்ளிட்டவை நிறைந்திருக்கின்றன. இந்த காய் மலச்சிக்கலை நீக்கும். வெள்ளைப்படுதலை நிறுத்திவிடும். சீதபேதியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த அத்திக்காயை சாப்பிட்டால் அது குணமடையச் செய்யும்.
வாயுவை போக்கும், ரத்த மூலத்தை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. உடலில் உள்ள புண்களை ஆற்றும். இந்த காய் வயிற்றுப்புண்ணுக்கு அருமருந்தாக அமைகிறது. அத்திக்காய் குளிர்ச்சியை தரும். இது பத்தியத்திற்கு ஏற்ற மருந்தாலும். மாதந்தோறும் ஒரு நாளாவது அத்திக்காயை கொண்டு அவியல் செய்து சாப்பிட வேண்டும்.
குடிப்பழக்கத்தால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை இந்த அத்திக்காய் குணமாக்கும். மலை கிராமங்களில் வசிப்போரிடம் இந்த காயில் செய்யப்பட்ட ஊறுகாய் கிடைக்கும். சாப்பிடுவதற்கு ஆவக்காய் போல் இருக்கும். ஆனால் துவர்ப்பு சுவையுடையது.
உடல் எடை குறைய வேண்டும் என்றால் அத்திப்பழத்தை ஊற வைத்து சாப்பிட வேண்டும். இது பசி உணர்வை தூண்டாது. நீரிழிவு நோயாளிகளும் இந்த அத்திப்பழத்தை சாப்பிடலாம். இதனால் ரத்த சர்க்கரையின் அளவு ஏறாது. அத்திப்பழம் பல் ஈறு பிரச்சினைகளை குணமாக்கும். இது போல் பல் வலியும் குறையும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications