ரேஷன் கடை முதல் பள்ளிக் கூடம் வரை! ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஃப்ரீஹேண்ட் கொடுத்த விஜய்!
சென்னை: ரேஷன் கடைகள் உள்பட அனைத்து துறைகளிலும் தனி நபர் தலையீடுகள் இருக்கக் கூடாது என முதல்வர் விஜய், ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் ஒவ்வொரு மாதமும் சட்டம் ஒழுங்கு கூட்டத்தை கூட்டி சம்பந்தப்பட்ட துறைகளை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். ஒவ்வொரு முக்கியமான வழக்கிலும் சட்ட வல்லுனர்களோடு கலந்து ஆலோசித்து, தவறு செய்தவர்கள் தப்பாதபடி உடனடியாக தீர்வு காண்பதற்கு சட்ட நடவடிக்கைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையோடு ஆலோசித்து, ஒவ்வொரு சம்பவங்களும் நடப்பதற்கு முன்னதாகவே மூல காரணத்தை கண்டறிந்து குற்ற சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதாவது கலவரம் போன்ற சூழல் உருவாகக்கூடிய நிலை இருந்தால், அதனுடைய மூல காரணத்தை முன்பாகவே கண்டறிந்து விட்டால் அதை தடுத்து விட முடியும் என்று வலியுறுத்தியுள்ளார்.
சட்ட ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர்களுடைய நடத்தையில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும். இதற்காக வருவாய் துறை, காவல்துறை அனைத்து தகவல்களையும் சேகரித்து, அதை சரிபார்த்து முன்பாகவே என்ன நடக்கும் என்று கணித்து அதற்கு ஏற்றவாறு செயல்பட வேண்டும் என்றார்.
அதிலும் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பை 100% உறுதிப்படுத்த வேண்டும். "நோ சேஞ், நோ காம்ப்ரமைஸ்" (No change, no compromise) - இந்த வார்த்தையை அழுத்தம் திருத்தமாக இன்றைய கூட்டத்தில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கும், அதே போன்று ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் முதலமைச்சர் சொல்லி இருக்கின்றார். பெண்கள் பாதுகாப்பு என்று வரும்போது "நோ சேஞ் அண்ட் நோ காம்ப்ரமைஸ்". பெண்களுடைய பாதுகாப்புக்கு உரிய ஸ்பெஷல் அரேஞ்மென்ட் காவல்துறையினர் செய்ய வேண்டும்.
"ஸ்டுடென்ட் அண்ட் சில்ட்ரன் சேப்டி" (Student and children safety) என்று குறிப்பிட்ட மாணவர்கள் மற்றும் சிறார்களுடைய பாதுகாப்பிலே முக்கிய கவனம் செலுத்த வேண்டும். "ஒவ்வொரு பள்ளிக்கும் அருகில் உள்ள கடைகளை கவனிக்க வேண்டும்" என்று முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார்.
பள்ளிக்கூடம் அருகில் இருக்கக் கூடிய கடைகள் மூலமாக போதைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றது என்ற குற்றச்சாட்டு எழுந்து வரக்கூடிய நிலையில், அதை முன்னிட்டு முதலமைச்சர் இந்த அறிவுறுத்தலை வழங்கி இருக்கின்றார். பள்ளிக் கூடங்கள் அருகே இருக்கக் கூடிய கடைகளில் அவ்வப்பொழுது சோதனை நடத்த வேண்டும் என்று சொல்லியிருக்கின்றார்.
"எஜுகேஷன் இஸ் எ செலிபரேஷன் (Education is a celebration) - கல்வி என்பது ஒரு கொண்டாட்டம்", அது எப்பொழுதுமே கொண்டாட்டமாக இருக்க வேண்டும். அது எப்போது கொண்டாட்டமாக மாறும்? ஒழுக்கத்தை போதிக்கின்ற, சாதிய வேறுபாடுகளை தாண்டி சாதிக்கிற மாணவர்களை உருவாக்கும் பொழுதுதான் கல்வி என்பது கொண்டாட்டமாக இருக்கும்.
"அதை கண்காணிப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது" என்று முதலமைச்சர் சொல்லியிருக்கிறார். குறிப்பாக இன்றைக்கு தென் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த காவல் உயர் அதிகாரிகளிடம் சில கருத்துக்களை முதலமைச்சர் கேட்டறிந்தார்.
அவர்களும் பள்ளி அளவில் கடந்த ஆட்சி காலங்களில் எல்லாம் நடைபெற்ற சில சம்பவங்களை சுட்டிக்காட்டினார்கள். அதன் தொடர்ச்சியாகத்தான் முதலமைச்சர் இந்த கருத்தை சொல்லியிருந்தார்: "பள்ளிக்கூடம் என்பது, கல்வி என்பது கொண்டாட்ட மையமாக மாற வேண்டும். மாணவர்களுக்கு உள்ளே சாதிய எண்ணம் இல்லாதபடி அவர்களை பண்படுத்தி வளர்க்க வேண்டும் பள்ளிக்கூடங்களிலே" என்று முதலமைச்சர் சொல்லியிருக்கின்றார்.
ரேஷன் கடைகளிலே எடை குறைபாடுகள் இல்லாமல் தரமான உணவு பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் அடிப்படை வசதி, சுகாதார வசதி, மின் இணைப்பு, மின்சார விநியோகம், முதியோருக்கான ஓய்வூதியம், சான்றிதழ்கள் வழங்குவது உள்ளிட்டவற்றில் எல்லாம் விரைவான செயல்பாடுகள் வேண்டும்.
இயற்கை பேரிடர் ஏற்படக்கூடிய காலங்களில் உடனடி நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர், வருவாய் துறையினர் மூலமாக அதை செய்வதற்கான அறிவுறுத்தலை காவல் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு வழங்கி இருக்கிறார்.
"மக்களிடம் செல், மக்களோடு வாழ், மக்களிடமிருந்து கற்றுக் கொள்" என்பதுதான் அண்ணா சொன்னது. அதுதான் நம்முடைய தாரக மந்திரம்" என்று சொன்ன முதலமைச்சர், அதற்கு ஏற்ப அடித்தட்டு மக்களுடைய வாழ்க்கையை உயர்த்தும் வகையில் ஆட்சியர்களுடைய செயல்பாடு இருக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.
மனு கொடுக்க வரும்போது மக்களிடம், இது சாத்தியம் என்றோ சாத்தியம் இல்லை என்றால் சரியான காரணங்களுடன் மக்களிடம் தெளிவுபடுத்தி சொன்னாலே அவர்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள். மனுவை வாங்கி மட்டும் வைத்து கொள்ளக் கூடாது என்று கூறியுள்ளார்.
அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்வதற்கு மாவட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டசபை உறுப்பினர்கள் வரும்பொழுது ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் சொல்லிருக்கிறார். அரசின் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படுகின்றன என்பதை அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு செய்து உணர்த்த வேண்டும் என்றும் முதலமைச்சர் சொல்லியிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல், "மாவட்ட ஆட்சியர்களும் காவல் கண்காணிப்பாளர்களும் அரசு விதிகளுக்கு உட்பட்டு சுதந்திரமாக செயல்படலாம். இந்த ஆட்சியில் தனி நபர்களுடைய தலையீடு எந்த வகையிலும் இருக்காது.












Click it and Unblock the Notifications