Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சேப்பங்கிழங்கு இலை.. அபூர்வ கீரை.. காய்ந்த இலையிலும் சத்து.. ஆயுள் கூட்டும் சேப்பங்கிழங்கு கீரை சாறு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சேப்பங்கிழங்கில் எவ்வளவு சத்துக்கள் உள்ளதோ, அதே அளவுக்கு அந்த கிழங்கின் இலைகளிலும் உள்ளது என்பது ஆச்சரியமான உண்மை.

சேப்பங்கிழங்கில் வைட்டமின் A, E, C, பீட்டா கரோட்டின், போன்ற சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.. ஆன்டிஆக்சிடெண்ட்கள் நிறைந்த சேப்பங்கிழங்கு, கண்களுக்கு மிகவும் நல்லது.. தொடர்ந்து சேப்பங்கிழங்கை சாப்பிட்டு வந்தால், கண்புரை உட்பட கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படாது..

Do you know the Amazing Health Benefits of Taro Leaf and Taro Root Leaves are the Best cure for High Blood Pressure

எலும்புகள்: பெருங்குடல் புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடக்கூடியது இந்த கிழங்கு.. இதிலுள்ள பாஸ்பரஸ், கால்சியம், பற்களுக்கும் எலும்புகளுக்கும் பலத்தை தருகின்றன.. இதிலுள்ள நார்ச்சத்து செரிமான கோளாறுகளை சரி செய்கின்றன.. குடல் புண்கள் இருப்பவர்கள் வாரம் 2 முறையாவது இதை சமைத்து சாப்பிட வேண்டும்.

இவ்வளவு சத்துக்கள் கிழங்கில் இருந்தாலும், சேப்பங்கிழங்கின் இலைகளில் கூடுதல் சத்துக்கள் உள்ளனவாம்.. முக்கியமாக, வைட்டமின் A, E, B, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கின்றன. புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, மாவுச்சத்தும் நிறைந்துள்ளதால், மிகச்சிறந்த சத்து நிறைந்த உணவாக இந்த கீரை திகழ்கிறது.
குடல் புற்று: புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கிறது. அதிலும் குடல் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இந்த இலைகளுக்கு உண்டு.. பாம்புக்கடி, தேள்கடி போன்ற விஷத்தன்மையை முறிக்கும் தன்மை இந்த இலைக்கு உண்டு..

பெண்களுக்கு வரும் மார்பக புற்று நோய் வராமல் தடுக்கவும் இந்த இலை துணைபுரிகிறது.. சரும பாதுகாப்பை தருகின்றன.. முக சுருக்கத்தை தடுத்து நிறுத்துகின்றன.. இந்த இலைகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம்.. எனவே, ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த இலைகள் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்..
சர்க்கரை நோயாளி: சேப்பங்கிழங்கு இலைகளிலிருந்து பெறப்படும் எத்தனாலை கொண்டு, நீரிழிவு நோய் உள்ள எலிகளுக்கு பரிசோதித்து பார்த்துள்ளனர். அப்போது ரத்தத்தின் சர்க்கரை அளவு குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாம். இந்த இலையின் சாறு குடித்து வந்தால், ரத்தத்தில் சர்க்கரை அளவு சரிசமமாக இருக்கும்.

நரம்பு தளர்ச்சி பிரச்சனை உள்ளவர்களும், ஆண்மை குறைபாடு உள்ளவர்களும், இந்த கிழங்கை அடிக்கடி சாப்பிட வேண்டும். காரணம், இலைகளில் வைட்டமின் B6 தயமின், நியசின், ரிபோப்ளவின் இருப்பதால், நரம்பு மண்டலத்துக்கு போதுமான பாதுகாப்பை தர தூண்டுகோலாகிறது.. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நரம்பு மண்டலத்தை வலிமை அடைய செய்யவும் உதவுகின்றன..

சேப்பங்கிழங்கு: நிறைய நார்ச்சத்து நிறைந்த சேப்பங்கிழங்கு ஜூஸை, உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களும் குடிக்கலாம். ரத்தசோக உள்ளவர்கள், இந்த இலையில், பொரியல் செய்து சாப்பிடலாம். அல்லது வெறும் இலைகளை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, வடிகட்டி குடிக்கலாம். அல்லது வேக வைத்த இலையின் தண்ணீரை சமையலில் பயன்படுத்தலாம்.

காரணம் சேப்பங்கிழங்கு இலைகளில் நிறைய இரும்புச்சத்து இருப்பதால் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. மேலும் இதில் வைட்டமின் C இருப்பதால் இரும்புச்சத்தை உறிஞ்சி கொள்வது எளிதாக அமைகிறது. இதனால் அனிமியா அல்லது ரத்த சோகை வராமல் தடுக்கலாம்.

ரத்தக்கடுப்பு: மூல நோய் பிரச்சனை உள்ளவர்கள், இந்த கீரையை புளி சேர்த்து சமைத்து சாப்பிட வேண்டுமாம். இதனால், வெளித்தள்ளிய மூலமும் ரத்தக்கடுப்பும் மெல்ல குறையும். உடலில் வெட்டுக்காயங்கள் என்றாலும், இந்த குளிர்ச்சி நிறைந்த இலைகளின் சாறு பூச வேண்டும்.. அதேபோல, காதுவலி, காதில் சீல் வடிதல் ஏற்பட்டாலும், சேப்பங்கிழங்கு கீரையின் சாற்றில் 2 துளி விட்டால் போதும்.. வலி தீரும்.

100 கிராம் கீரையில் 56 கலோரி வெப்பம் உடலுக்கு கிடைக்கிறதாம்.. அதனால், எப்போதுமே இந்த சேப்பங்கிழங்கு கீரையை தண்டுடன் சேர்த்து சமைத்தால், கூடுதல் சத்துகள் கிடைக்கும்.

காய்ந்த கீரை: இந்த கீரை வாடிப்போனாலும், சத்துக்களை இழப்பதில்லை. 100 கிராம் காய்ந்து போன கீரையில்கூட, 1500 மில்லிகிராம் கால்சியமும், 308 மில்லிகிராம் பாஸ்பரஸும் கிடைக்கின்றன. இந்த இலையை நன்றாக கழுவி, தண்ணீரில் வேகவைத்து, அந்த தண்ணீரில் நெய் கலந்து குடித்தால் வயிற்றுவலி, மலச்சிக்கல் உடனே குணமாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+