பல்லெல்லாம் "ஆட்டம்" காணுதா.. உங்ககிட்ட நெல்லிக்காய் இருக்கா? ஈறுகள் ஸ்டிராங் + பல் பலம்.. செம டிப்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பற்கள் ஆடினால், அந்த பற்களை பிடுங்கியே ஆக வேண்டும் என்றில்லை.. இதற்கு வீட்டிலேயே எளிய முறையில் நாம் தீர்வு காணலாம்.

பற்கள் ஆடுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன.. பற்களை சுற்றி உள்ள எலும்பு பலமின்றி இருப்பது பிரதான காரணமாக பார்க்கப்படுகிறது.. இதனால், பற்களில் ஏற்படும் ஈறு நோய் நாளடைவில் அதனை சுற்றியுள்ள எலும்பிலும் பரவிவிடுவதால், எலும்பு தேய்ந்து பற்களின் பிடிமானமும் குறைந்து, ஆட்டம் காண துவங்கிவிடுகிறது.

Do you know the Excellent Benefits in Indian Gooseberry and an amazing herbal remedy Strengthen Loose Teeth

அதற்காக ஆடும் பற்களை எல்லாம்எடுக்க வேண்டிய அவசியம் கிடையாது.. சரியான காரணம் தெரிந்தாலே, அதை எளிதாக நிவர்த்தி செய்யலாம்.. குறிப்பாக, ஈறுகளுக்கு வலு தந்து, 'சப்ளின்டிங் என்ற முறையில், ஆடும் பற்களை சரிசெய்வது உட்பட பல்வேறு சிகிச்சைகளை டாக்டர்கள் மேற்கொள்வார்கள்.

ஈறுகள் பிரச்சனை: ஆனால், சிலருக்கு ஈறு பிரச்சனை காரணமாக அல்லது எலும்பு இழப்பு காரணமாக, பற்கள் தளர்வடைகின்றன.. மோசமான வாய்வழி சுகாதாரம், பல்லில் காயங்கள் உண்டாவது, எலும்பு முறிவுகள், தித்திப்பு உணவுகள் அதிகம் சேர்ப்பது, பல்சிதைவு இப்படியான காரணங்களுக்காகவும் பற்களில் ஆட்டம் காணலாம்.

இதற்கு நெல்லிக்காய் பொடி கால் கப் எடுத்துக் கொண்டு, இதனுடன் மஞ்சள்- 1 ஸ்பூன், பட்டைப் பொடி - கால் ஸ்பூன், கிராம்புப் பொடி - அரை ஸ்பூன், உப்பு - 1 ஸ்பூன் போன்றவற்றையும் சேர்க்க வேண்டும். பிறகு, ஒரு வாணலில் நல்லெண்ணெய் கால் கப் சேர்த்து, இந்த பொடிகளையும் அதில் கொட்டி கலந்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஆயில் புல்லிங்: இந்த எண்ணெய்யில் தினமும் ஆயில் புல்லிங் செய்யலாம்.. அதேபோல, இந்த எண்ணெய் எல்லா பற்களிலும் படும்படி 20 நிமிடங்கள் வாயிலேயே வைத்திருந்துவிட்டு, பிறகு உமிழ வேசண்டும். இதனால், ஈறுகள் பலப்படும். பற்களும் கெட்டிப்படும்.

படிகார உப்பு - 6 ஸ்பூன், மிளகு -1ஸ்பூன், சாம்பிராணி - 1 ஸ்பூன், இந்துப்பு - 1 ஸ்பூன், ஓமம் - அரை ஸ்பூன், கிராம்பு - 2.5 ஸ்பூன், வேப்பம்பட்டை - 10 இவைகளை எல்லாம் ஒன்றாக சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் இந்த பொடியில் பல் துலக்கினாலும் பற்களுக்கு நல்லது. அல்லது கடுகு எண்ணெயில் உப்பு கலந்து வாயை கழுவி வந்தாலும் ஆடும் பற்கள் உறுதிப்படும்..

வழிமுறைகள்: பற்களை எப்போதுமே சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.. சாப்பிட்ட பிறகு, பற்களில் இருக்கும் எச்சங்களை வெளியேற்ற மவுத் வாஷ் பயன்படுத்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனையை பெற்று, வைட்டமின் D, கால்சியம் சப்ளிமெண்ட்களை எடுத்து கொள்ளலாம்.

பூண்டு மிளகு: அதேபோல உணவில் நிறைய பூண்டு, மிளகு, மற்றும் மஞ்சளை சேர்த்து கொள்ள வேண்டும். இவைகள் ஆடும் பற்களுக்கு சிறந்த மருந்தாகும். ஆண்டிமைக்ரோபியல் பண்பு கொண்டவை என்பது. அதனால், பூண்டு தட்டி அந்த இடத்தில் வைத்தாலே நுண்ணுயிரிகள் நீங்குவதுடன், பற்களும் பலப்படும். மிளகு, மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட், பலவீனமான பற்களை தடுத்து நிறுத்தும்.. வலியையும் கட்டுப்படுத்தும்.

Do you know the Excellent Benefits in Indian Gooseberry and an amazing herbal remedy Strengthen Loose Teeth

அல்லது, மஞ்சள் தூள், மிளகுதூள் இரண்டையும் சேர்த்து ஈறுகளில் வைத்து மென்மையாக மசாஜ் செய்யலாம்.. இதனால் பற்களும், ஈறுகளும் வலுவடையும். தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இவைகளை வைத்து, ஆயில் புல்லிங் செய்யலாம்.. அல்லது நெல்லிக்காய் இடித்து, தண்ணீரில் கலந்து வாய் கொப்பளிக்கலாம். அல்லது நெல்லிக்காயை தினமும் மென்று சாப்பிட்டு வந்தாலே பற்கள் உறுதிப்பெறும்.

(இது பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. உங்கள் பிரச்சனைக்கு மருத்துவரை அணுகுவதே சிறந்தது. இந்த தகவலுக்கு "One India Tamil News" பொறுப்பேற்காது)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+