Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெண்ணெய் பழம்.. வெயிட் லாஸுக்கு பெஸ்ட் அவகேடோ.. பளபள சருமத்துக்கு வெண்ணை பழத்தின் "சூப்பர் எண்ணெய்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெண்ணெய்ப்பழம் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல, நம்முடைய அழகுக்கும் பெரிதும் பயன்படுகிறது.. இந்த பழத்தை வைத்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதற்கான குட்டி டிப்ஸ்தான் இது.

வெண்ணெய்ப்பழம் என்பதை அவகேடோ என்று சொல்கிறோம்.. இந்த அவகேடோ பழத்தில், மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் C, K1, B6, கார்போஹைட்ரேட்டுகள், புரதம், தாது உப்புக்கள், நல்ல கொழுப்புக்கள், என பல சத்துக்கள் அடங்கியுள்ளன..

மூட்டுவலி: மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு, மிகவும் பயன்படக்கூடியது இந்த பழங்கள். காரணம், சமீபத்தில் ஆர்த்ரிடிஸ் ஆய்வுகளில் அவகேடோ பழத்தில் உள்ள சேர்மங்கள் ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் இதர எலும்பு பிரச்சனைகளை சரிசெய்வதாக தெரிய வந்துள்ளது.. அதனால், ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த பழம், ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்,

Do you know the Excellent Benefits of Avocado and How to make Butter Fruit face mask for dry skin

உடல் எடை குறைய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உகந்த பழம் இது. நார்ச்சத்து அதிகமுள்ள இந்த பழம், கெட்ட கொழுப்பை குறைத்து, செரிமான பிரச்சினைகளை சரிசெய்யக்கூடியது. இதனால் உடற்பருமன் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது.. இதய நோய்கள் வராமலும் பாதுகாக்கப்படும்.. சிறுநீரக பிரச்சனை வராமலும், கண் சம்பந்தமான பிரச்சனை ஏற்படாமலும், புற்றுநோய் அபாயத்தை நெருங்கவிடாமலும் இந்த பழம் தடுத்து நிறுத்துகிறது.

உடல் பருமன்: ஆரோக்கியத்தை போலவே, அழகை பராமரிக்கவும் இந்த பழம் உதவுகிறது. நிறையை ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அவகேடோ பழத்தில் உள்ளதால், சருமம் பொலிவாகிறது. அவகேடோ பழம், முகத்திலுள்ள சுருக்கம், முதிர்ச்சியை தடுக்க பெரிதும் உதவுகிறது.. இளமை தோற்றத்தை உண்டுபண்ணுகிறது.. அதனால்தான், ஃபேஸ் கிரீம் தயாரிப்புகளில் இந்த பழம் மூலப்பொருளாக பயன்படுகிறது..

நன்றாக பழுத்த அவகேடோ பழத்தை, அரைத்து கொள்ள வேண்டும். அதில், ஒரு ஸ்பூன் தேன் மற்றும் பால் சேர்த்து நன்றாக கலந்து, முகம், கழுத்து, கைகளில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் போதும். சருமத்தில் நல்ல மாற்றம் தெரியும்.

வெண்ணெய்ப்பழம்: அதேபோல, இந்த வெண்ணெய் பழத்தை வேகவைத்து, அதனுடன் பப்பாளியை மசித்து, தேன் கலந்து முகத்தில் தடவி, 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால், சருமம் பளிச்சிடும். பருக்கள், கரும்புள்ளிகள் நீங்கிவிடும். அல்லது, வெண்ணெய் பழத்தை வேக வைத்து மசித்து, சிறிது சர்க்கரை, பால் சேர்த்தும் முகத்தில் பயன்படுத்தி வரலாம்..

இந்த பழத்தை கொண்டு, வலுவற்ற தலைமுடிகளையும் வலுவாக்கலாம்.. இந்த பழத்தின் சதையை பகுதியை மட்டும் எடுத்து, சிறிது எலுமிச்சை சாறு, தேன் கலந்து தலைமுடிக்கு தடவி 30 நிமிடம் ஊறவைத்து கழுவிவிட வேண்டும். இதனால், தலைமுடி உறுதியாகவும், அடர்த்தியாகவும் வளரும். அதனால்தான், அவகோடா பழத்தில் ஃபேஸ் வாஷ், ஷாம்புகள், க்ரீம்கள் வரை தயாராகின்றன.. சருமத்தில் உள்ள கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க செய்வதில், இந்த பழத்துக்கு பெரும்பங்கு உண்டு.

Do you know the Excellent Benefits of Avocado and How to make Butter Fruit face mask for dry skin

எதிர்ப்பு விளைவுகள்: இந்த அவகேடா எண்ணெய் என்றே கடைகளில் விற்கிறார்கள். இந்த எண்ணெயில் அழற்சி எதிர்ப்பு விளைவுகள் உண்டு. அவகேடோ எண்ணெய்யில், ஒமேகா 3, வைட்டமின் ஈ, ஏ, டி, பொட்டாசியம், போன்றவை நிறைந்துள்ளன.. இது தோலின் வெளிப்புற அடுக்கில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கு உதவுவதுடன், புதிய தோல் உருவாகவும் துணைபுரிகிறது.

அவகேடோ எண்ணெயை முகத்தில் தடவி வெதுவெதுப்பான நீரில் முகம் கழுவினாலே, சருமம் ஈரப்பதத்துடன் திகழும்.. இதனால், பருக்கள், மங்குகள், ஏற்படாது. தலைமுடிக்கு மட்டுமல்ல, ஆரோக்கியமான நகம் வளர்ச்சிக்கும் இதை பயன்படுத்தலாம். இதனால், நகம் எளிதில் உடையாது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+