கத்தை கத்தையா முடி வருதா? கருகரு தலைமுடிக்கு மோர் போதுமே.. அப்றம் இளநீர் இருக்கா? ப்ளீஸ் ட்ரை:.மாஸ்
சென்னை: தலைமுடி உதிர எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், வீட்டிலேயே தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு காணலாம். இதற்கு எளிய முறையில் சில டிப்ஸ்களை பார்க்கலாம்.
செம்பருத்தி பூக்களையும், செம்பருத்தி இலைகளையும் கழுவி அதை ஈரமில்லாமல் அரைக்க வேண்டும்.. ஒரு பாத்திரத்தில், தேங்காய் எண்ணெய் ஊற்றி லேசாக சூடானதும், அதில், இந்த செம்பருத்தி விழுதை கொட்டிவிட வேண்டும்..

இயற்கை கண்டிஷனர்: அதில், சிறிது வெந்தயத்தை பொடி செய்து போட்டு, கருகாமல் கொதிக்கவிட வேண்டும். இந்த எண்ணெய்யை வடிகட்டி தலைக்கு தடவி வந்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.. தலைமுடியும் கருகருவென வளரும்.
தலைமுடிக்கு சில இயற்கை கண்டிஷனர்கள் உள்ளன.. அந்தவகையில், வெண்டைக்காய் மிகச்சிறந்த "இயற்கை கண்டிஷனராக" செயல்படுகிறது.. வெண்டைக்காயை கொதிக்க வைத்த தண்ணீரில் சேர்த்து, சிறிது எலுமிச்சம் சாறு பிழிந்து, அந்த தண்ணீரில் தலைமுடியை அலசினால், தலைமுடி பளபளப்பு கிடைக்கும்..
தலைமுடி உதிர்தல் : ஷாம்புவை பயன்படுத்தாதவர்கள், சாதம் வடித்த கஞ்சியில் சீகைக்காய் தூளை கரைத்து தலைக்கு பயன்படுத்துவார்கள்.. அதேபோல, தலைமுடியை சாதம் வடித்த தண்ணீரில் அலசினால் தலைமுடி உறுதியாகும்..
அல்லது மோரில் தலைமுடி அலசலாம்.. காரணம், நீர் மோரில் லாக்டிக் அமிலம், கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின் D, A, B12, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், சோடியம், மக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.. இந்த மோரை உச்சந்தலையில் தேய்த்து, மசாச் செய்து 20 நிமிடம் ஊறவைத்து குளித்தால் போதும்.. இறந்த செல்களை நீக்கி, தலைமுடி வளர்ச்சிக்கு மோர் தூண்டுகோலாகும்.
உறுதித்தன்மை: தலைமுடியின் உறுதித்தன்மைக்கு நெய்யையும் பயன்படுத்தலாம்.. காரணம், இதிலுள்ள கொழுப்பு அமிலங்கள் முடியை சுற்றிலும், பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, கேச சேதத்தை தடுக்கிறது. மயிர்க்கால்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனை பெறுவதையும் நெய் உறுதி செய்கிறது... மெல்லிய தலைமுடியை வலுவாக்குகிறது.
ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் நெய், 1 ஸ்பூன் தேன், 10 முதல் 15 வேப்பிலை கலந்து இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட வேண்டும். காலையில் இதை லேசாக 2 நிமிடம் சூடுபடுத்தி, அதிலிருக்கும் வேப்பிலையை வெளியே எடுத்துவிட வேண்டும். அந்த நெய்யை மட்டும், இளஞ்சூட்டிலேயே தலை முழுவதும் பூசி, 30 நிமிடம் கழித்து குளித்து வந்தால், பொடுகு பிரச்சினையும், இளநரையும் வராமலும் தடுக்கப்படும். அல்லது 2 டீஸ்பூன் நெய்யுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, லேசாக சூடுபடுத்தி தலைக்கு தடவலாம்.
ஊட்டச்சத்துக்கள்: வைட்டமின் E, B12, புரோட்டீன் உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் வெண்ணெய்யில் உள்ளதால், இதையும் தலைக்கு தடவி வரலாம். கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் போன்றவை தலைமுடி பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வெங்காய சாற்றில் நிறைய ஆன்டி - ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், தலைமுடி உதிர்வை தடுத்து நிறுத்துகின்றன.. அதேபோல அதிகமாக சல்பர் உள்ளதால், முடியின் வேர்களுக்கும், நரைமுடி பிரச்சனைக்கும் இது நல்லது. வெங்காயத்தை வெட்டி, ஒரு துணியில் கட்டி, சாறு பிழிந்து எடுத்து, தலைமுடியின் வேர்க்கால்களுக்கு தடவலாம்.
முழு முட்டை: உருளைக்கிழங்கு வேகவைத்த தண்ணீரை கீழே ஊற்றாமல், அதிலேயே தலையை அலசலாம். புரோட்டீன் + ஸ்டார்ச் நிறைந்த அந்த தண்ணீரை பயன்படுத்தினால் முடி கொட்டாது. புரதச்சத்து, கொழுப்பு சத்து நிறைந்த ஒரு முழு முட்டையையும் தலைமுடிக்கு பயன்படுத்தலாம்.. சில துளிகள் தேங்காய் எண்ணெய்யை முட்டையுடன் கலந்து தலைக்கு தேய்த்தால், முட்டை வாடை ஏற்படாது. அல்லது இளநீரையும் பயன்படுத்தலாம்..!!
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications