மினுமினு மீன்.. சால்மன் மீனை மிஸ் பண்ணாதீங்க.. மீன்களை சாப்பிட்டால் இத்தனை விஷயம் நடக்குதா? வாவ்
சென்னை: மீன்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் நமக்கு கிடைக்கின்றன தெரியுமா? வாரம் 2 முறையாவது மீன் உணவுகளை சாப்பிட சொல்வதற்கு காரணங்கள் என்னென்ன தெரியுமா?
- ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளதால், உடல் எடையை சீராக வைத்து கொள்ள மீன்கள் உதவுகிறது. இந்த கொழுப்பு அமிலங்கள் மூளை மற்றும் கண்கள், இதய ஆரோக்கியத்திற்கும் அடித்தளமாகின்றன
- மீன் சாப்பிடுவதனால் ரத்தக் குழாய் மற்றும் இதயத்தில் ஏற்படக் கூடிய பிரச்சனைகளும் சீராகின்றன. மீன்களில் நிறைவுற்ற கொழுப்புகள் இல்லாததால், கொலஸ்ட்ராலில் இருந்தும், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பயங்கரத்திலிருந்தும் தப்பிக்கலாம்.

- மீனில் வைட்டமின் D சத்து நிறைந்துள்ளதால், எலும்பு மற்றும் பற்களுக்கு வலு கிடைக்கிறது.
- சாச்சுரேட் கொழுப்புகள் மீன்களில் நிறைந்துள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது.
- மூளையின் சிறந்த செயல்பாடுகளுக்கு அதாவது, மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன்கள் திகழ்கின்றன
- கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் மருந்தாகின்றன
- மீன்களை உணவில் அதிகம் சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது.
- நரம்புத்தளர்ச்சியையும், மன அழுத்த நோயையும் தடுக்க வேண்டுமானால் மீன்களை சாப்பிட்டாலே போதும்
- மீன்களை சாப்பிட்டு வருவதால், நீரிழிவு நோய், முடக்கு வாதம் போன்ற நோய்களின் தாக்கமும் மிகக்குறைவாக காணப்படும்
- முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் மீன்களை அடிக்கடி சாப்பிட்டு வரலாம்
- ஒமேகா 3 நிறைந்த சால்மன் மீன்கள் மிகவும் நல்லது. கர்ப்பிணி பெண்கள் அளவோடு சாப்பிடலாம். இதனால் வயிற்றிலுள்ள குழந்தையின் மூளை, கண்கள் மற்றும் செரிமான மண்டலத்தின் சீரான வளர்ச்சிக்கு உதவுகிறது.
- மத்தி, நெத்திலி, சங்கரா மீன், வஞ்சரம், வவ்வால் மீன், கோலா மீன், காரப்பொடி மீன் வகைகளில் ஒமேகா 3 அதிகம் உள்ளன
- வாளமீன், சுறா மீன், கெளுத்தி, மார்லின், BIG EYE TUNA போன்ற மெர்க்குரி நிறைந்த மீன்களை தவிர்க்கலாம்
- நன்மை பல தந்தாலும், தினமும் 50 கிராம் மட்டுமே, தினமும் இரண்டு துண்டுகள் சாப்பிட வேண்டுமாம். அதாவது வாரத்திற்கு 350 கிராம் மீன்கள் மட்டுமே நாம் சாப்பிட வேண்டும்
- முட்கள் அதிகமாக இருக்கும் மீன்கள் + ஆழ்கடலில் பிடிக்கப்படும் பெரிய மீன்களை வாங்கக்கூடாது. ஆழ்கடல் மீன்களில், நிறைய ரசாயன பொருட்கள் நிறைந்து காணப்படும்
- சிறிய ரக மீன்களில் கால்சியம், தாதுக்களும், வைட்டமின் A, D, அயோடின் போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளதால் நினைவாற்றலை அதிகப்படுத்துகின்றன. குறைவான கார்போஹைட்ரேட் உள்ளதால் உடல் எடை குறைபவர்களும் சிறிய வகை மீன் சாப்பிடலாம்
- ரத்தத்தில் கொழுப்பின் அளவை குறைத்து, ரத்த அழுத்தத்தை சமன்செய்வதில் சிறிய வகை மீன்களுக்கு பங்குண்டு
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications