கத்தை கத்தையா கொட்டுதா தலைமுடி.. தலைமுடி வேகமாக வளரணுமா? இளநரை, பொடுகு இருக்கா? இதை ட்ரை பண்ணுங்க
சென்னை: தலைமுடி கொத்து கொத்தாக கொட்டுகிறதா? அப்ப நெய் போதும் அல்லது வெண்ணைய்யே போதும்.. ஆரோக்கியமான தலைமுடி விரைவில் கிடைத்துவிடும். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க.நெய்யில் வைட்டமின் A,D,K2 E, ஆண்டி ஆக்ஸிடண்டுகள் போன்றவை நிறைந்துள்ளன.. எனவே, தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன.. அதனால், முடி பாதிப்புகளை தடுப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது.
மசாஜ்: நெய்யை லேசாக சூடு படுத்தி, வெதுவெதுப்பான சூடு பதத்திலேயே தொட்டு தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து தலைக்கு குளித்து வந்தால், முடிசேதங்கள் கட்டுப்படும்.

இதற்கு காரணம், நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடியை சுற்றிலும், பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி, கேச சேதத்தை தடுக்கிறது. மேலும், மயிர்க்கால்களுக்கு போதுமான ஊட்டச்சத்துக்களையும், ஆக்ஸிஜனை பெறுவதையும் நெய் உறுதி செய்கிறது... முடி மெலிதல் பிரச்சினைகளை எதிர்த்து போராடி, தலைமுடியின் இயற்கையான பொலிவையும், மென்மையையும் மீட்க உதவுகிறது.
இளநரை: ஒரு கிண்ணத்தில் 3 ஸ்பூன் நெய், 1 ஸ்பூன் தேன், 10 முதல் 15 வேப்பிலை கலந்து இரவு முழுவதும் அப்படியே வைத்துவிட வேண்டும். காலையில் இதை லேசாக 2 நிமிடம் சூடுபடுத்தி, அதிலிருக்கும் வேப்பிலையை வெளியே எடுத்துவிட வேண்டும். அந்த நெய்யை மட்டும், இளஞ்சூட்டிலேயே தலை முழுவதும் பூசி, 30 நிமிடம் கழித்து குளித்து வரலாம். இதனால், பொடுகு பிரச்சினை தீர்வதுடன், உடல் சூடு குறையும்.. இளநரையும் வராமல் தடுக்கப்படும்.
அல்லது 2 டீஸ்பூன் நெய்யுடன், 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து, லேசாக சூடுபடுத்தி தலைக்கு தடவலாம். கிட்டத்தட்ட நெய்யை போலவே, தலைமுடி ஆரோக்கியத்துக்கு வெண்ணெய் உதவுகிறது. வைட்டமின் E, B12, புரோட்டீன் உட்பட ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் இந்த வெண்ணெய்யில் உள்ளன..
வெண்ணெய்: வெண்ணெயில் உள்ள இந்த புரோட்டீன் தலைமுடியை பலப்படுத்தி, கேசம் உடைந்து போவதை தடுத்துநிறுத்துகிறது. கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் என தலைமுடி வளர்ச்சிக்கு தேவையான அத்தனையும் அடங்கியுள்ளதால்தான், வெண்ணெய் தலைமுடிக்கு சிறந்த தேர்வாக உள்ளது.. இதிலுள்ள ஈரப்பதம் தலைமுடிக்கு தேவையான ஒன்றாக உள்ளது.. இதனால், ரத்த ஓட்டமும் தூண்டப்படுகிறது.. தலைமுடி உதிர்வும் கட்டுப்படுத்தப்படுகிறது.
வெண்ணெய்யை சிறிது எடுத்து, தலைமுடிக்கு மென்மையாக மசாஜ் செய்துவிட்டு, 30 நிமிடங்கள் கழித்து, குளித்தாலே போதும். ஆனால், சுத்தமான வெண்ணையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.. அதேபோல அதிக வெண்ணையை பயன்படுத்த கூடாது.. மசாஜ் செய்து வெண்ணைய் தலையுடனே நீண்ட நேரம் இருந்தால், தலைமுடியில் அழுக்கு சேர்ந்துவிடும், தலைமுடிக்கும் பாதிப்பு வந்துவிடும்.












Click it and Unblock the Notifications