Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மருதாணி இலை.. மணக்க மணக்க மருதாணி மலர்.. ஒரே தைலத்தில் ஓராயிரம் நன்மைகள்.. மயக்கும் மருதாணி பூக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மருதாணி இலைகளை போலவே, மிகவும் பயன்தரத்தக்கது மருதாணி பூக்களாகும்.. இந்த பூக்கள் நமக்கு தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

மருதாணி இலைகள் மட்டுமல்லாமல், மருதாணி செடியின் பட்டை, மலர், மலர்கள் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலன்களை பெற்றிருக்கின்றன. பெரும்பாலும், உள்ளங்கை, கால்களில் மருதாணி வைக்க காரணம் என்ன தெரியுமா?

Do you know the Excellent Benefits of Henna Leaf and Maruthani Leaf Oil is the Best for Hair Growth, Healthy Skin

நரம்புகள்: நம்முடைய நரம்புகளை பலப்படுத்தும் திறன் இந்த மருதாணி இலைகளுக்கு உள்ளது.. குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு நரம்புகள் எளிதில் பலவீனமாகிவிடும். காலில் சரியான ரத்த ஓட்டம் இருக்காது. இதனால் பாதங்களில் ஒருவித எரிச்சலும் உண்டாகும்.. அதேபோல சிலருக்கு கை கால் குடைச்சலும் இருக்கும்.. இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் மருந்தாகிறது மருதாணி.

நம்முடைய மொத்த நரம்புகளின் பிரதிபலிப்பு புள்ளிகளும், உள்ளங்கையில்தான் குவிந்திருக்கின்றன. அதனால்தான், உள்ளங்கையில் மருதாணி வைத்தால், உடம்பின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று ரத்த ஓட்டத்தை சீராக்கும். நகசுத்தி வந்தாலும், சேற்றுப்புண், பாதஎரிச்சல், கால் ஆணி இதற்கெல்லாம்கூட, இந்த இலையுடன் சிறிது மஞ்சளை சேர்த்து அரைத்து கட்டி வந்தால் பலன் கிடைக்கும்.

பித்தம்: பித்தத்தை நீக்கக்கூடிய சக்தி இந்த இலைகளுக்கு உள்ளதுடன், அடிக்கடி மருதாணியை கை, கால் விரல்களில் பூசி வந்தால், மனநோய் ஏற்படுவதும் தடுக்கப்பட்டுவிடும். ஒரு கைப்பிடி அளவு மருதாணி இலையை, நீரில் கொதிக்க வைத்து, இரவு உணவுக்கு பிறகு குடித்து வந்தால், ரத்தம் சுத்திகரிப்பாகும். ரத்தத்திலுள்ள நச்சுக்களும் வெளியேறும். பெண்களுக்கு அதிகமான உதிரப்போக்கு இருந்தாலும் கட்டுப்படும். இளநரையும் தடுக்கப்படும்.

மருதாணி இலைகளை போலவே, மருதாணியின் மலர்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை.. குறிப்பாக, உடல் சூட்டை தணிக்கக்கூடியது இந்த பூக்கள்..

மருதாணி பூக்கள்: ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்த பூக்கள் அதிகமாக இருக்கும்.. இந்த பூக்களை உலரவைத்து மருந்தாக பயன்படுத்தலாம்-. மன அழுத்தத்தை போக்கி, நிம்மதியான தூக்கத்திற்கு அடிகோலுகிறது இந்த பூக்கள். நிம்மதியான தூக்கம் வராமல் போனால், இந்த பூக்களை, ஒரு வெள்ளை துணியில் சுற்றி தலைமாட்டில் வைத்து படுத்து கொண்டால், ஆழ்ந்த தூக்கம் வருமாம். இந்த பூக்களில் தைலம் தயாரிப்பார்கள்,...

ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் சேர்த்து, அதில், மருதாணிப்பூக்களையும் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆற வைத்து எடுத்து கொண்டால் போதும். இந்த தைலம் 1 வருடம் ஆனாலும் கெட்டுப்போகாது. தலைமுடிக்கு இந்த தைலத்தை தடவி வந்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.. தலைமுடியும் நன்றாக வளரும்.

மருதாணி மலர்கள்: வேறு விதமாகவும் தைலம் தயாரிக்கலாம்.. மருதாணி மலர்களை நிழலில் 2 நாட்கள் வரை காயவிட்டு எடுத்து கொள்ள வேண்டும். ஒரு மண்சட்டியில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டுமே 100 கிராம் வீதம் சேர்த்து காய்ச்ச வேண்டும்.. பிறகு, மருதாணி பூக்கள் 100 கிராம் எடுத்து அதையும் சட்டியில் சேர்த்து அடுப்பை நிறுத்திவிட வேண்டும். இந்த மருதாணி பூக்கள், எண்ணெய்களில் நன்றாக ஊற வேண்டும்.

அதனால், மண்சட்டியை வெள்ளை துணியில் மூடி, வெயில்படும் இடத்தில் 3 நாட்கள் வைத்து எடுத்தால் போதும். இப்போது எண்ணெய்யின் நிறம், வேறு கலருக்கு மாறி இருக்கும்.. இதை ஒரு பாட்டிலில் எடுத்து கொண்டு, பயன்படுத்தலாம்.

பலன்கள் என்னென்ன: இந்த தைலத்தை எதற்கெல்லாம் எப்படி பயன்படுத்தலாம் தெரியுமா? உடல் உஷ்ணத்தை இந்த எண்ணெய் போக்கக்கூடியது.. தினமும் குளிக்கும்முன்பு, உடலுக்கு இந்த எண்ணெய்யை தடவி மசாஜ் போல செய்து குளித்து வந்தால், உடலிலுள்ள மொத்த உஷ்ணமும் இறங்கிவிடும்.

அல்லது தொப்புளில் இந்த தைலத்தை வைத்து மசாஜ் செய்தாலும், உடல் சூடு உட்பட வயிற்றுக்கோளாறுகளும் நீங்கிவிடும். வாய்ப்புண்களால் அவதிப்படுபவர்கள் இந்த தைலத்தை உதட்டில் தடவிவந்தால் நிவாரணம் கிடைக்கும்..

சரும நலன்கள்: பாதங்களில் சேற்றுப்புண், பாதவெடிப்பு இருந்தாலும் அதற்கும் இந்த தைலத்தை பயன்படுத்தலாம்.. தலைவலி அதிகமாக இருந்தாலும், இந்த தைலத்தை தேய்த்து நிவாரணம் தேடி கொள்ளலாம். தூக்கம் சரியாக இல்லாமல் போனால், பாதங்களில் இந்த தைலத்தை கொண்டு லேசாக மசாஜ் செய்தாலே போதும். அல்லது புருவங்களின்மீது தைலத்தை தேய்த்து மசாஜ் செய்தாலும், நன்றாக தூக்கம் வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+