மீனில் பெஸ்ட் இதுதான்.. நெத்திலி மீன் மட்டுமல்ல.. இந்த 5 மீனையும் நோட் பண்ணுங்க.. இதய "மீன்" நண்பன்
சென்னை: மீன்கள் என்றாலே உடலுக்கு நன்மைகளை தரக்கூடியது என்றாலும், உடல் எடையை குறைக்கவே சிலவகை மீன்கள் உள்ளன.. அதேபோல, சிறந்த முறையில் இதய செயல்பாட்டை ஊக்குவிக்கவும் சிலவகை மீன்கள் உள்ளன. அதில் ஒருசிலவற்றை பார்ப்போம்.
பொதுவாகவே, வாரத்திற்கு 2 முறை மீன் சாப்பிடுவது இதய நோய் (Cardiovascular Disease (CVD))உள்ளவர்களை அதிக ஆபத்திலிருந்து காக்க உதவும் என்கின்றன மருத்துவ ஆய்வுகள்.. அதுமட்டுமல்ல, ஏற்கனவே இதய நோய், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மீனை சாப்பிடுவதன் மூலம் இதய சிக்கல்களிலிருந்து தப்ப முடியும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

மீன்கள்: இதற்கு காரணம், மீன்களில் உள்ள அதிகப்படியான சத்துக்களும், ஒமேகா 3 என்ற முக்கியமான சத்துக்களும்தான்.. எளிதாக ஜீரணமாகக்கூடிய ஏராளமான சத்துக்கள் மீனில் நிறைந்துள்ளன.. அதிகப்படியான புரோட்டீன் நிறைந்த உணவாகவும் மீன் திகழ்கின்றது.. பி-12 வைட்டமின்கள் அதில் உள்ளது, மீன்களின் தனிச்சிறப்பாகும்... பயறு வகைகளை சாப்பிட முடியாதவர்கள், அல்லது அதற்கு வாய்ப்பில்லாதவர்களுக்கு தேவைப்படும் சத்துக்களை இந்த மீன்கள் மூலம் நாம் நேரடியாகவே பெற்றுவிட முடியும்.
இதயத்தை காத்து, உடல் எடையை குறைப்பதில் நெத்திலி மீன்கள் மிகச்சிறந்த பங்களிப்பை தருகின்றன.. கலோரிகள் குறைவாகவும், புரோட்டீன்கள் அதிகமாகவும் இருக்கும் மீன் என்பதால், உடல் எடையை குறைப்பதற்கு பேருதவி புரிகின்றன.. இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க, நெத்திலி மீனை சமைத்து தரலாம்..
இதயநோய்கள்: இதய நோய்கள் மொத்தத்துக்கும் மருந்தாகிறது இந்த மத்தி மீன்கள்.. சர்க்கரை நோய் உள்ளவர்கள், தைரியமாக சாப்பிடக்கூடியது மத்தி மீன்கள்.. நோய் எதிர்ப்பு திறன் அதிகரித்து ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.. மீன்களில் கால்சியம் அதிகம் உள்ளதால், எலும்புகளின் வளர்ச்சிக்கும் உதவுகிறது..
கர்ப்பிணி பெண்கள் மத்தி மீன்களை சாப்பிட்டு வரும்போது, குழந்தைக்கும் தாய்க்கும் நிறைவான கால்சியம் கிடைக்கும். அதேபோல, மெனோபாஸ் காலங்களில் ஆஸ்டியோபெராசிஸ் என்ற பிரச்சனைக்கு ஆளாகாமல் தடுப்பதும் இந்த மத்தி மீன்தான். தோல் நோய், மூளை, நரம்பு நோய்கள், வயதானவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், ஆஸ்துமா, போன்றவற்றுக்கு மட்டுமல்லாமல், வைட்டமின் D சத்து அதிகம் உள்ளதால், புற்று நோய் வரும் வாய்ப்பையும் குறைக்கின்றன.
புரோட்டீன்: இதயத்தை காக்கக்கூடிய மீன்களில் கானாங்கெளுத்தியும் ஒன்றாகும்.. அயிலை என்றும் சொல்வார்கள்.. புரோட்டீன் அதிகம் உள்ள மீன் என்பதால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது..
கெட்ட கொழுப்புக்கள் குறைவாகவும், நல்ல கொழுப்புக்கள் அதிகமாகவும் உள்ளது அயிரை மீன்கள்... ரத்த நாளங்களின் செயல்பாட்டுக்கு துணைபுரிவது.. ரத்த அழுத்த பிரச்சனை வராமல் தடுக்க செய்கிறது.. உயர் ரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள், அயிரை மீனை அடிக்கடி செய்து சாப்பிட்டு வரலாம்.
சர்க்கரை நோயாளிகள்: சர்க்கரை நோயாளிகள் இந்த மீனை சாப்பிடுவதால், அபாயம் குறைகிறதாம்.. அயிரை மீனிலுள்ள கால்சியம் சத்துக்கள் எலும்புகளையும், பற்களையும் உருவாக்குவதுடன், நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துகிறது..
மொத்தத்தில் மீன்கள் ஆரோக்கியம் தரக்கூடியவை.. சாப்பிடலாம்.. அதுவும் சிறிய வகை மீன்களில் கால்சியம், வைட்டமின் A, D , அயோடின் போன்றவைகள் நிறைந்துள்ளதால், வாரம் 2 முறையாவது, சாப்பிட்டு வரலாம்.. இதனால் நினைவாற்றலும் பெருகுகின்றன.. இதய நலனும் காக்கப்படுகின்றன.. நம் ஆயுளும் நீட்டிக்கப்படுகின்றன.












Click it and Unblock the Notifications