ஜஸ்ட் கறிவேப்பிலை.. இந்த ஒரே பொடி போதும்.. நீரிழிவு நோயாளிகளின் எவர்கிரீன் "கிப்ட்" கறிவேப்பிலை இலை
சென்னை: கறிவேப்பிலை உடலுக்கு நல்லதுதான் என்றாலும், சர்க்கரை நோயாளிகள் இந்த கறிவேப்பிலையை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா? அதனால் ஏற்படும் தாக்கங்கள் என்னென்ன தெரியுமா?
கறிவேப்பிலை ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதனாலேயே, சர்க்கரை நோயாளிகளின் வரப்பிரசாதம் இந்த கறிவேப்பிலை என்று சொல்லலாம்.

காரணம், இந்த கறிவேப்பிலைகள், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.. ஜீரண சக்தியை அதிகப்படுத்துகிறது.. இருதய நோய் உள்ளவர்கள்கூட, இந்த கறிவேப்பிலையை அதிகமாக உணவில் பயன்படுத்த வேண்டும் என்று டாக்டர்களே சொல்கிறார்கள்.. கறிவேப்பிலையில் இருக்கும் இரும்புச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. கொலஸ்ட்ரால் அளவையும் இந்த இலை குறைக்கிறது..
வடிவங்கள்: இந்த கறிவேப்பிலைகளை, எந்த வடிவில் உணவாக எடுத்து கொண்டாலும் அது நன்மையே தரக்கூடியது.. காய்ந்து போன கறிவேப்பிலையாக இருந்தாலும் சரி, அல்லது பச்சை கறிவேப்பிலையாக இருந்தாலும், ஒருபோதும் இதன் தன்மைகளும், சத்துக்களும் மாறுவதில்லை.. ஆனால், ரத்த சர்க்கரை குறைவு பண்புகள் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் கறிவேப்பிலையை மென்று சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் ஃபார்மாசூட்டிகல் சயின்ஸில் சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொண்டிருந்தது. அதில், கறிவேப்பிலையில் ரத்த சர்க்கரைக் குறைப்பு எதிர்ப்பு பண்புகள் இருப்பதாகவும, ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதாகவும் தெரிவித்திருந்தது.
அந்த அளவுக்கு கறிவேப்பிலையிலுள்ள நார்ச்சத்தானது சர்க்கரையின் அளவு மிகவும் சீராக வைத்திருக்கிறது. நார்ச்சத்து அதிகம் கிடைக்கும்போதும், சர்க்கரையின் அளவை எப்பொழுதுமே சீராக இருக்கும்படி பார்த்துக் கொள்கிறது..
பாஸ்பரஸ்: கால்சியம், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின்கள் போன்ற கறிவேப்பிலையில் இருப்பால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.. நீரிழிவு நோயாளிகள் எப்படி பயன்படுத்தலாம்?
தினமும் 10 கறிவேப்பிலைகளை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடலாம்.. அல்லது பொடி செய்து சாப்பிடலாம். கறிவேப்பிலைகளை கழுவி வெயிலில் காய வைத்து, பொடி செய்து கொள்ள வேண்டும். இந்த பொடியை 3-4 கிராம் அளவு காலை நேரத்தில் எடுத்துகொள்ளலாம். இதனால், கணையத்தில் இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்க செய்கிறது.
தவிர்க்கக்கூடாது : 30 நாட்கள் தொடர்ந்து இந்த பொடியை சாப்பிட்டு வந்தாலே நீரிழிவு குறையும் என்கின்ற ஆராய்ச்சிகள். முக்கியமாக, கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் (HbA1c) அளவு குறைகிறாம்.. யூரியா அளவும் குறைகிறதாம்.. யூரிக் அமிலமும் குறைகிறதாம்.. கிரியேட்டினின் அளவும் குறைகிறதாம்.. அதனால்தான், நீரிழிவு நோயாளிகள் தவிர்க்கவே கூடாத மிக முக்கிய உணவுப்பொருள் கறிவேப்பிலையாக உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications