கற்பூர வாழை.. நம்ப முடியாத நன்மை தரும் தேன் வாழைப்பழம்.. கற்பூரவள்ளி வாழைப்பழங்களின் ஆச்சரியங்கள்
சென்னை: வாழைப்பழங்கள் என்றாலே உடலுக்கு நல்லவை என்றாலும் கற்பூரவள்ளியில் உள்ள ஸ்பெஷாலிட்டி என்ன தெரியுமா? குளிர்ச்சி நிறைந்த கற்பூரவள்ளி வாழைப்பழம் தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
பொதுவாக, வாழைப்பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் A, B6, C, நார்ச்சத்துக்கள், மக்னீசியம், போன்றவை அடங்கி உள்ளன. இதில் பொட்டாசியத்தை 11 சதவிகிதம் இருக்கிறது. இது ஒருநாளைக்கு நமக்கு தேவைப்படும் பொட்டாசியம் அளவாகும்.

வாழைப்பழம்: வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்பார்கள்.. ஆனால், ஆரஞ்சு, திராட்சை போன்ற பழங்களோடு சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்காதாம்.. கற்பூரவள்ளி வாழைப்பழத்திலும், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் B6, நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்துமே, உடல் எடையை குறைப்பதில் பேருதவி புரிகின்றன..
அதனாலதான், காலை நேரத்தில் சரிவர டிபன் சாப்பிட முடியாமல் அவசர கதியில் கிளம்பி செல்பவர்கள், இந்த ஒரு பழத்தை மட்டுமாவது சாப்பிட்டாலே போதும், ஆற்றலும், சுறுசுறுப்பும் உருவாகும் என்கிறார்கள்.. மன அழுத்தத்தை போக்கி அன்றைய நாளெல்லாம் களைப்படையாமல் வைத்திருக்ககூடியது கற்பூரவள்ளி வாழை.
தேன் வாழைப்பழம்: கற்பூரவள்ளி வாழைப்பழத்திற்கு தேன் வாழைப்பழம் என்று பெயர்.. சிறிய பழமாக இருந்தாலும் அதிக சத்தும், அதிக ருசியும் கொண்ட பழமாகும்.. மற்ற வாழைப்பழத்தில் இல்லாத ஸ்பெஷல் இதில் என்னவென்றால், இந்த பழத்தின் தோல், கருத்துவிட்ட பிறகும்கூட, சாப்பிடக்கூடியது.. அதே ருசி, அதே சத்துக்களுடன் விதைகள் நிறைந்து காணப்படும்
செரட்டோனின், நார் எபினெஃப்ரின் சத்துக்கள் அடங்கியிருப்பதால், ஜீரணம் எளிதாகி, பசியை தூண்டுகிறது.. மாங்கனீசு, மெக்னீசியம் நிறைய உள்ளால், எலும்புகளுக்கும், பற்களுக்கும் உறுதியை தருகிறது.
சரும பாதுகாப்பு: ரத்தசோகை பிரச்சனையில் இருப்பவர்களுக்கு, மிகசிறந்த டானிக் இந்த கற்பூரவள்ளி வாழைப்பழம்.. தொடர்ந்து இந்த பழம் சாப்பிட்டு வந்தால், ரத்தவிருத்தி அதிகமாகி, ஹீமோகுளோபின் பிரச்சைனையை விரட்டியடித்துவிடும்..
உடல் உஷ்ணத்தினால், கண்களில் நீர் வடிவது, சிறுசிறு கட்டி உருவாகுவது, போன்ற இருந்தாலும், இந்த பழம் சாப்பிட்டாலே போதும், கண்களுக்கு குளிர்ச்சி நிறைந்துவிடும். சருமத்துக்கு பாதுகாப்பை தரக்கூடியது இந்த பழம். எனவே, சொறி, சிரங்குகள், புண்கள், அரிப்பு, தடிமன் போன்ற தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், கற்பூரவள்ளி அதற்கு கை கொடுத்து உதவுகிறது.. புண்களும் விரைவில் ஆற தூண்டுகிறது.
இந்த கற்பூரவள்ளி வாழைப்பழத்தின் தோலைகூட வீணாக்க வேண்டாம்.. அதை குட்டி, குட்டியாக வெட்டி மூன்று நாட்கள் தண்ணீரில் ஊறவைத்து செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தினால், பலன் இரட்டிப்பாகும்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications