முருங்கை மரம்.. குழந்தைக்கு கீரை சூப் தரலாமா? முருங்கையை தின்னால் முன்னூறு நோயும் விலகும்: நிஜம்தான்
சென்னை: முருங்கைக்கீரை பெருத்த நன்மைகளை தரக்கூடியது என்பது தெரிந்த விஷயம்தான் என்றாலும், குழந்தைகளுக்கு இந்த கீரையை தரலாமா?
முருங்கைக்கீரையை பொறுத்தவரை, இயற்கையின் வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.. இந்த மரத்தின் செடி, கீரை, காய், பூ, விதை, குச்சி, வேர், பிசின் என மொத்த பாகங்களுமே மருத்துவ நன்மைகளை வாரி வாரி மனித குலத்துக்கு தரக்கூடியது.

இந்த கீரையை சாப்பிட்டு வரும்போது, உடலின் சர்க்கரையை குறைக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.. மாதவிடாய் நேரத்தில் வரும் வயிற்று வலியை குணப்படுத்துகிறது..
முருங்கைக்கீரை: கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க உதவுகிறது. தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுகிறது.. நரைமுடியும் குறையும். மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்றுப்புண் நீங்கும்.. தோல் வியாதிகள் தீரும்.. உடல் சூட்டை தணிக்கும்.. வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்..
இருதய நோய்கள், ஆா்த்தரிட்டிஸ், கல்லீரல் நோய்கள், தோல் நோய்கள், ஜீரணக் கோளாறு நீங்கும். பற்கள் உறுதியாகும். ஈறுகள் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கும். தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைந்து, அனைத்து விதமான தோல் வியாதிகளும் விரைவில் நீங்கும்.. முருங்கையை தின்னால் முன்னூறு நோய்கள் விலகும் என்று இதற்குதான் சொன்னார்கள். இந்த முருங்கைக்கீரையை குழந்தைகளுக்கு தரலாமா? எந்த வடிவில், எந்த அளவுக்கு, எந்த முறையில் தரலாம் தெரியுமா?
கீரைகள்: வளரும் சிறுவர்களுக்கு முருங்கைக்கீரையை கட்டாயம் தர வேண்டும்.. அதேபோல, குழந்தைகளுக்கும் கீரை அவசியமாகிறது.. நார்ச்சத்து நிறைந்த இந்த கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.. இதனால், குழந்தையின் ஆற்றல் அதிகரிப்பதுடன், பார்வைத்திறயும் மேம்படுத்துகிறது..
ஆனால், 6 மாதங்கள் முடிந்தபிறகே குழந்தைகளுக்கு கீரை சூப், ஒரு ஸ்பூன் மட்டுமே தரலாம்.. காரணம், குழந்தைகளின் குடல், உணவின் செரிமானத்திற்கு 6 மாதத்தில்தான் தயாராக உள்ளது.. 6 மாதத்துக்கு முன்பு மற்ற உணவுகளை தரும்போது, தாய்ப்பால் குடிக்கும் நேரம், மற்றும் தடவைகள் குறைந்து சுரப்பும் குறைந்துவிடும். ஊட்டச்சத்து குறைபாடும் ஏற்படலாம்..
முருங்கை சூப்: அதேசமயம், தாய்ப்பாலுடன இணை உணவு தர ஆரம்பிப்பதை 6 மாதத்திற்கு பிறகு தள்ளிப்போடவும் கூடாது. எனவே, திரவ உணவை பழகியபிறகு சூப் கொடுக்க தொடங்கலாம்..
அதிக காரம் படாமல், அதிக மசாலா சேர்க்காமல், குழந்தைகளுக்கு வீட்டிலேயே கீரை சூப் செய்து தரலாம். முருங்கை இலையை பொடி செய்தும் சூப் வைத்து தரலாம்.. அதாவது, முருங்கை இலைகளை சுத்தம் செய்து உலர்த்தி, வறுத்து எடுத்து, அதற்கு பிறகு தூள் செய்வார்கள்.. செரிமான பிரச்சனை வந்துவிடும் என்பதால், ஒரு ஸ்பூன் மட்டுமே தர வேண்டும்.
முதன்முதலில் சூப் தரும்போது, 3 நாட்களுக்கு குழந்தைக்கு வேறு எந்த உணவையும் அறிமுகப்படுத்தாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் அலர்சி ஏதாவது ஏற்படுகிறதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும்.
முருங்கைக்கீரை: முருங்கை என்றில்லை, ஒவ்வொரு உணவையும் முதலில் பழக்கும்போதும், 3 நாட்கள் இடைவெளி விட்டுவிடவேண்டும். இந்த 3 நாட்களுக்கு வேறு எந்த உணவையும் புதிதாக பழக்கக்கூடாது. ஒருவேளை குழந்தைக்கு ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லையானால், முருங்கையிலை சூப் தொடர்ந்து தரலாம்.
ஒரு வயதான பிறகு வேண்டுமானால், முருங்கை இலையை சேர்த்து, சூப் வைத்து தரலாம்.. ஒரு வயதுக்கு பிறகே செரிமானம் எளிதாக நடக்கும் என்பதால், சூப் அளவையும் அதிகரித்து கொள்ளலாம். ஆனால், மருத்துவர்களின் ஆலோசனையை பெற்றே, 6 மாத குழந்தைகளுக்கு கீரை சூப் தருவது கட்டாயமாகும்.












Click it and Unblock the Notifications