ஆரஞ்சு தோல்.. அப்பறம் மாதுளம் பழத்தோல்: பளபள சருமம் முதல் வெயிட்லாஸ் வரை.. திகைக்க செய்யும் செம தூள்
சென்னை: ஆரஞ்சு பழ தோல் எந்த அளவுக்கு சருமத்துக்கு கவசமாக திகழ்கிறதோ அதுபோலவே, மாதுளம்பழ தோலும் சருமத்துக்கு பாதுகாவலனாக திகழ்கிறது.
ஆரஞ்சு பழத்தைவிட, ஆரஞ்சு தோலை, சருமத்துக்கு பயன்படுத்தினால் கூடுதல் பலன் கிடைக்கும்.. தோலிலுள்ள இறந்த செல்களை நீக்கி, சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் திகழ இந்த தோல் உதவி புரிகிறது. பருக்கள், மருக்கள், மங்குகள் இருந்தால், அதையும் இந்த ஆரஞ்சு பழ தோலை கொண்டே போக்கிவிடலாம்.

ஆரஞ்சு பழம்: கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தாலும், சருமத்தில் சுருக்கம் இருந்தாலும், எண்ணெய் பசை இல்லாமலும் இந்த பழத்தோல் காக்கிறது. ஆரஞ்சு பழ தோலை காயவைத்து, பொடி செய்து, உடலுக்கு பூசி குளித்து வந்தால், சருமம் ஆரோக்கியமாகும்.. அல்லது இந்த பொடியில் சிறிது தயிர் சேர்த்து முகத்துக்கும், கழுத்து, கைகளுக்கும் தேய்த்து வந்தால், பொலிவு கிடைக்கும்.
இதுபோலவே, மாதுளை பழத்தோல்களை கொண்டும் சருமத்தை காக்கலாம்.. மாதுளை பழத்தின் ஜூஸை விட அதன் தோலில் அதிக ஆன்டிஆக்ஸிடண்டுகளும், ஊட்டச்சத்து நன்மைகளும் இருக்கிறது என்கின்றன ஆய்வுகள்..
ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ராலை குறைக்க என பல்வேறு உடல்நலக் கோளாறுகளுக்கு இந்த மாதுளை தோல் உதவுகிறது.. அதேசமயம், சருமத்துக்கு எப்படி பாதுகாப்பை தருகிறது தெரியுமா?
பவுடர்: மாதுளம் பழத்தோலை கழுவி சுத்தம் செய்து வெயிலில் நன்றாக காயவைத்து, பவுடர் செய்து வைத்து கொண்டாலே போதும்.. இதில் டீ தயாரித்து குடிக்கலாம்.. அல்லது வெந்நீரில் வெறுமனே கலந்து குடிக்கலாம் அல்லது சூப்களிலும் பயன்படுத்தலாம்.
இதனால், ரத்தத்திலுள்ள கெட்ட கொழுப்புகளும் கரைந்துவிடும்.. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் கட்டுப்பாட்டுடன் இருக்கும். அந்தவகையில், டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இந்த மாதுளை தோல் பேருதவி புரிகிறது.
தொண்டை புண், இருமல் தொந்தரவு இருப்பவர்கள் இந்த தூளில் டீ தயாரித்து குடித்தால் நிவாரணம் கிடைக்கும். அல்லது வெந்நீரில் கலந்து வெதுவெதுப்பாக குடித்தாலே சுவாச கோளாறுகள் நீங்கும்.. மாதுளை பொடியில் நிறைய ஆக்சிஜனேற்றிகள் உள்ளதால், காது கேளாமை பிரச்சனைகளை செய்யக்கூடியவை.
மாதுளை பழம்: புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கும் தன்மை மாதுளைக்கு உண்டு. அதில் 50 சதவீதம் வீரியம் அதன் தோலுக்கும் உண்டு. மாதுளையின் தோலில் பாலிஃபினைல் அதிகம் இருக்கிறது. இது புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது. குறிப்பாக, வயிற்றில் உள்ள அழற்சியை சரிசெய்து குடல் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கிறது.
சருமத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ளவும், பருக்களை அகற்றவும், முகப்பரு, சுருக்கங்களை குறைக்கவும், இந்த மாதுளை பவுடர் பவுடர் உதவுகிறது.. இந்த மாதுளை பொடியில் ஒரு ஸ்பூன் எடுத்து, அதில் தேனையும் குழைத்து முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து கழுவி வந்தால் முகம் பிரகாசம் பெறும்.. முகத்தில் நிறம் மாறுபாட்டுடன் காணப்பட்டால், அவைகளை இந்த பவுடர் சரிசெய்யும்..
கொலாஜின்: அத்துடன் சருமத்தில் கொலாஜனை உற்பத்தியை அதிகரிக்க செய்ய தூண்டுகோலாகிறது. எண்ணெய் பசையான அல்லது வறண்ட சருமம் இருப்பவர்களுக்கும் கைகொடுத்து உதவுவது இந்த மாதுளம் தோல் பவுடர். எல்லாவற்றிற்கும் மேலாக, தோலிலுள்ள நச்சுகளை சுத்தப்படுத்துகிறது. புதிய தோல் செல்கள் எளிதில் உருவாக துணைபுரிகிறது.
மாதுளம் தோல் பவுடர் 2 ஸ்பூன், ஒரு ஸ்பூன் பழுப்பு சர்க்கரை, அவகோடா எண்ணெய் ஒரு ஸ்பூன் (அல்லது வேறு ஏதாவது வாசனை எண்ணெய்) இவைகளை கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து கழுவி வந்தால், மென்மையான சருமமும், ஆரோக்கியமான சருமமும், பொலிவான சருமமும் கிடைக்கும்..!!
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications