மீனில் பெஸ்ட் இதுதான் தெரியுமா? மீனை வாங்கினால் சங்கராவை விடாதீங்க.. சங்கரா மீனின் ஆச்சரியம் பாருங்க
சென்னை: கடல்வாழ் உயிரினங்கள் உடலுக்கு நன்மை தரக்கூடியவை என்றாலும், ஒருசில மீன்களை தேர்ந்தெடுத்து சாப்பிடுவதினால், ஆரோக்கியம் தழைத்தோங்குகிறது.. அதில் ஒன்றுதான் சங்கரா மீன்.
பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கர்ப்பிணிகள் உணவு விஷயத்தில் மிகுந்த கவனத்தை செலுத்த வேண்டும்.. கர்ப்ப காலத்தில் பெண்கள் எதையெல்லாம் சாப்பிட வேண்டும்? சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்? என்ன சாப்பிட்டடால் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு நல்லது? என்பதையும் மருத்துவர்களிடம் ஆலோசனையாக பெற்றுக் கொள்ள வேண்டும்.

அந்தவகையில் மீன் வகைகளை எடுத்துக் கொண்டால், சுறா, ட்யூனா மீன்கள் அதிக மெர்குரி உள்ள மீன்களாகும்.. இவைகளை அதிக அளவில் சாப்பிட்டால் நரம்பு மண்டலம், வயிற்றில் உள்ள கரு, சிறுநீரகங்கள், நோய் எதிர்ப்பு திறன் ஆகியவை பாதிக்கலாம். அதேசமயம், அரைவேக்காடு மீன்களையும் சாப்பிடக்கூடாது.
நெத்திலி : ஓமேகா 3 சத்துகளோடு, குறைந்த மெர்குரி அளவு கொண்ட மத்தி, நெத்திலி, சங்கரா மீன், வஞ்சரம், மீன்களை மத்தி, நெத்திலி, சங்கரா மீன், வஞ்சரம் போன்றவைகளை சேர்த்துக்கொள்ளலாம்
இதில் சங்கரா மீனை பொறுத்தவரை, மத்தி மீனை போலவே நன்மை தரக்கூடியது.. 100 கிராம் சங்கரா மீனில் வைட்டமின் A, C, கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், துத்தநாகம், சோடியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, புரதம், பாஸ்பரஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், சோடியம், செலினியம் இப்படி பல வகையான சத்துக்கள் அடங்கிஉள்ளன. இதனால், நரம்பு மண்டலம் வலுப்பெறுகிறது. இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
இதய செயல்பாடுகள்: அத்துடன் இதயத்தில் பெரும்பாலும் பிரச்சனைகள் வருவதையும் தடுக்கிறது. ரத்த அழுத்தத்தினையும் குறைக்கிறது. சங்கரா மீனில் செலினியம் உள்ளதால், சரியான அளவில் சமைத்து சாப்பிட்டால், வெள்ளை ரத்த அணுக்களின் உற்பத்தியும் அதிகரிக்கும்.. ரத்த சிவப்பணுக்களை பராமரிக்கவும் உதவுகிறது. கர்ப்பகாலத்தில் ஹீமோகுளோபின் பிரச்சனையையும் சரிசெய்யும்.
இதிலுள்ள வைட்டமின் E, உடலின் தோல் பராமரிப்புக்கும், கண்களை பாதுகாக்கவும் உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் A, உடலில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.. இதிலுள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களை பலப்படுத்தவும், உறுதிப்படுத்தவும் உதவுகிறது.
எடை குறைப்பு: மூளை ஆரோக்கியத்திற்கும், மனச்சோர்வை விரட்டவும், மனநிலை மேம்பாட்டிற்கும், இன்சுலின் எதிர்ப்பை குறைக்கவும் சங்கரா மீன் பெரிதும் உதவுகிறது. சங்கரா மீனில் ஃபோலேட் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள், குழந்தைகளின் நரம்புக்குழாய் குறைபாடுகள் போன்ற பிறப்பு குறைபாடுகளை தடுக்க உதவுகிறதாம்..
அந்தவகையில், பல நன்மைகளை சங்கரா மீன் தரக்கூடியது என்றாலும், மருத்துவர்களின் ஆலோசனையின்பேரில், கர்ப்பிணிகள் இந்த மீன்களை குறிப்பிட்ட அளவில் சாப்பிட்டு வந்தால் நலன் பிறக்கும்.












Click it and Unblock the Notifications