செதில் செதிலா வெடிப்பு.. ஈஸியா பாத வெடிப்புகளை விரட்டும் ஒரே பொருள்.. அழகான பாதம் வேணுமா? இதோ டிப்ஸ்
சென்னை: தற்போது குளிர்காலம் என்பதால், பாத வெடிப்புகள் ஏற்படுவது சகஜம்தான்.. அதுபோலவே, இந்த வெடிப்புகளையும் குணப்படுத்துவது சுலபம்தான் என்கின்றனர் நிபுணர்கள்.
இன்றைய சூழலில், பெரும்பாலான நோய்களுக்கு அடிப்படை காரணமே வெறும் காலில் நடப்பதுதானாம்.. அதாவது, சில தொந்தரவுகளை தவிர்க்க வேண்டும் என்றால் செருப்புகளை வீட்டிற்குள் அணியலாம். ஆனால், வீட்டிற்குள் ஒன்று, வெளியே ஒன்று என தனித்தனி செருப்புகளை பயன்படுத்துவதாக இருந்தால் மட்டுமே இதை செய்ய வேண்டுமாம்.

பித்த வெடிப்பு: பாதத்தில் பித்தவெடிப்பு, கால் ஆணி, தோல் வறட்சி, நகச்சுத்து, சேற்றுப்புண் இப்படி பல பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பு என்றாலும், வெறுங்கால்களில் நடந்தால், குடல் புழுத்தொல்லை மட்டுமல்லாமல் குதிகால் வலியும் ஏற்படலாம்.. அதனாலேயே காலில் செருப்பை அணிய சொல்கிறார்கள்..
சிலர் வீட்டிற்குள் எந்நேரமும் நடந்தே பழக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.. இவர்களுக்கு காலில் வலி, பாத வலி ஏற்படும். அதிலும் டைல்ஸ், மார்ப்ள்ஸ், கிரானைட் போன்ற கற்கள் தரையில் பதிக்கப்பட்டிருந்தால், கால் வலி, பாத வலி ஏற்படலாம்.. இவர்கள் எல்லாம் செருப்பு அணிந்து கொள்வதன் மூலம் இந்த தொந்தரவுகளை தவிர்க்கலாம்.
சிமெண்ட் தரை: மற்றபடி சிமெண்ட் தரையாக இருந்தால் செருப்பு அணிய வேண்டிய அவசியமில்லை. மொசைக், கிரானைட், மார்பில் போன்ற தரைதளத்திற்கு வழுக்கிவிடாத செருப்பு அணிந்துகொண்டு நடப்பது கால்களுக்கு ஆரோக்கியமானது.. இதில் அதிகம் கவனிக்க வேண்டியவர்கள் சர்க்கரை நோயாளிகள்.. இவர்கள் பாத்ரூமிற்கு என்று கட்டாயம் தனியாக செருப்பைப் பயன்படுத்துவது நல்லது.. வாரம் ஒரு முறை சுடுநீரில் டெட்டால் விட்டு காலனியை ஊறவைத்து சுத்தப்படுத்திக்கொண்டால் நன்மை பயக்கும்.
சிலருக்கு பாத வெடிப்பு பிரச்சனை நீங்காமல் இருக்கும்.. எந்நேரமும் உப்புத்தண்ணீரில் கால் நனைவது, தோல் வறட்சி, அதிக உடல் எடை போன்றவைகள்தான், பாத வெடிப்புக்கான முக்கியமான காரணிகளாக உள்ளன. இதற்கு என்ன செய்யலாம்?
பாத வெடிப்பு: வெதுவெதுப்பான தண்ணீரில், தினமும் பாதத்தை கழுவி வந்தாலே வெடிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.. அல்லது தூங்க செல்வதற்கு முன்பு, ஆலிவ் எண்ணையை பாதங்களில் தேய்த்து இரவு முழுவதும் அவற்றை அப்படியே விட்டுவிடலாம்.. பாத்திரம் தேய்க்கும் நாரில், தயிரை தொட்டு வெடிப்புகளில் தேய்த்துவிட வேண்டும். மறுநாள் நீரில் சிறிது கல் உப்பு சேர்த்து, நாரில் தொட்டு தொட்டு தேய்த்து வந்தாலும், பாத வெடிப்பு சீராகும்.
மருதாணி தூளுடன் டீத்தூள், தேங்காய் எண்ணெய் கலந்து பாதங்களில் தேய்த்து வந்தால் பாத வெடிப்பு நீங்குவதற்கு வாய்ப்புள்ளது. அல்லது மருதாணி இலைகளுடன் சிறிது எலுமிச்சம்பழச்சாறு விட்டு விழுதாக அரைத்து, வெடிப்புகளில் பூசி வந்தாலும், பாத வெடிப்பு குணமாகும். பித்த வெடிப்பு ஆரம்ப கட்டம் என்றால், வெறும் தேன் தடவி வரலாம்.. அல்லது ஆலிவ் எண்ணெய்யை தடவலாம்... ஒரு வாரத்திற்கு தினமும் ஒருமுறை இப்படி செய்து வந்தால், பித்த வெடிப்புகள் மறையும்.
கற்றாழை ஜெல்: அல்லது கற்றாழை ஜெல்லை பூசி வரலாம். மசித்த பப்பாளியுடன், சிறிது எலுமிச்சம் பழச்சாறு கலந்து தடவி வந்தாலும் பாத வெடிப்பு நீங்கும். வெங்காயத்தை வதக்கி அரைத்து பாதங்களில் தடவி வந்தாலும் பாத வெடிப்பு மறையும்.
சிலருக்கு சோப்பில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் ஒரு சிலருக்கு வெடிப்பு உண்டாகும். சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை. இதனாலும் பாத வெடிப்புகள் வரும். வேப்பிலையில் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் குணமாகும். நீங்கள் தினமும் சொரசொரப்பான கல்லில் காலை வைத்து தேய்த்தாலும் பாத வெடிப்பு மறையும்.
அதேபோல, எலுமிச்சம் சாறு, பாசி பருப்பு மாவு, வேப்பிலை, கஸ்தூரி மஞ்சள் போன்றவற்றை கலந்து, பாத வெடிப்புகளில் பூசி வரலாம்.. ஆனால், சர்க்கரை நோயாளிகள் மட்டும் லேசான வெடிப்புகள் ஏற்பட்டாலே, உடனடியாக மருத்துவரிடம் பரிசோதித்து கொள்வது நல்லதாகும்.












Click it and Unblock the Notifications