ஸ்டாலின் கணக்கு தப்புமா? விஜய்க்கு எதிராகத் திரும்பிய கூட்டணி... காய் நகர்த்துகிறதா பாஜக?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவோடு எங்களுக்கு இன்னும் தோழமை இருக்கிறது, திமுக ஒரு முற்போக்கான கட்சி என்றெல்லாம் முத்தரசன் போன்ற தலைவர்கள் பேசுவது, தற்போதைய கூட்டணியை மிகக் கடுமையாகப் பலவீனப்படுத்திவிடும். இதை தவெக கண்டிப்பான முறையில் அனுமதிக்கக் கூடாது, அனுமதிக்க மாட்டார்கள்." என்று மூத்த பத்திரிகையாளர் மணி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி தந்துள்ள மணி, "இந்தக் கூட்டணியில் நாம் மிகவும் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது காங்கிரஸ் கட்சி என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பதுதான். ஏனெனில் காங்கிரஸ் தலைவர்கள் சமீப நாட்களாகவே என்ன பேசுகிறார்கள் என்றால், ராகுல் காந்தி, சிதம்பரம், அபிஷேக் மனு சிங்வி என எல்லோரும் பேசுவதென்னவென்றால், "திமுக எங்களை விட்டுப் போனது துரதிர்ஷ்டவசமானது, திமுக இன்னும் இந்தியா கூட்டணியில் தொடரலாம்" என்றுதான் பேசுகிறார்கள்.

Stalin vijay tvk DMK BJP - -

இந்தியா கூட்டணியில் திமுக?

காங்கிரஸ் வரலாறு பூராவும் பார்த்தீர்களானால் அது யாருக்கும் எந்தக் காலத்திலும் விசுவாசமாக இருந்ததே கிடையாது. நீங்கள் 5 பேரைத் தூக்கிக் கொண்டு போய் விஜய்க்கு ஆதரவு கொடுத்து, அவர் ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்தது வரைக்கும் ஓகே.

காரணம், இது இல்லாவிட்டால் ஜனாதிபதி ஆட்சி வந்துவிடும், ஜனாதிபதி ஆட்சி என்றால் அது பிஜேபி ஆட்சி; அதைத் தடுப்பதற்காக ஓடோடிப் போய் ஆதரவு கொடுத்தது வரைக்கும் ஓகே.

தவெக திமுக

ஆனால், அதோடு நீங்கள் நின்றீர்களா? ஆதரவு கொடுத்ததோடு இல்லாமல், "நாங்கள் மந்திரி சபையில் இடம் பெறுவோம், உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி வைப்போம், 2029 லோக்சபா தேர்தலில் கூட்டணி வைப்போம்" என்றெல்லாம் அன்றைக்குச் சொல்ல வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன வந்தது? இந்த 5 பேர் வெற்றி பெற்று வந்ததும் திமுக ஆதரவில்தானே ஜெயித்து வந்தார்கள்? அப்படியிருக்க, இவ்வளவு நாளாக இருந்த கூட்டணியை ஒரே நாளில் உடைத்துவிட்டுப் போக வேண்டிய அவசியம் என்ன வந்தது?"

"திமுக நேற்று, SIR சம்பந்தமாக உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இந்தியா கூட்டணியாக அனுப்பி இருக்கக்கூடிய கடிதத்தில் கையெழுத்து போட்டிருக்கிறது. கடந்த வாரம் நடந்த இந்தியா கூட்டணிக் கூட்டத்தைப் புறக்கணித்த திமுக, நேற்றைய கடிதத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறது என்றால், அதற்கு அவர்கள் இன்னும் இந்தியா கூட்டணியில்தான் தொடர்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? ஆனால், மாறாக தவெக அந்த கடிதத்தில் கையெழுத்துப் போடவில்லை.

எஸ்ஐஆர் - கையெழுத்து

இது பலவிதமான சந்தேகங்களை கிளப்புகிறது. இத்தனைக்கும் எஸ்ஐஆரை சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடுத்ததே தவெகதான். அப்படியிருக்க, நியாயப்படி பார்த்தால் தவெகதானே அந்தக் கடிதத்தில் முதலில் கையெழுத்துப் போட்டிருக்க வேண்டும்? ஏன் போடவில்லை? பிஜேபியை எதிர்ப்பதில் விஜய் எந்தவொரு ஆர்வமும் காட்டுவதில்லை.

கேட்டால், அது "நிர்வாக ரீதியிலான விஷயங்கள், மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உள்ள உடன்பாடு" என்கிறார்கள். கொள்கை எதிரி பிஜேபி என்று வாயளவில் சொல்லிவிட்டு, எஸ்ஐஆருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கத் தெரிந்த தவெகவிற்கு, இந்தியா கூட்டணி கடிதத்தைத் தலைமை நீதிபதிக்கு அனுப்பும்போது ஏன் அதில் கையெழுத்துப் போடத் தெரியவில்லை?"


முத்தரசன் பேசுவது அபத்தம்

திமுக ஒரு நல்ல கட்சி, தூய கட்சி, முற்போக்குக் கட்சி என்றெல்லாம் தோழமை கட்சித் தலைவர்கள் சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக, முத்தரசன் பேசுவது அபத்தத்திலும் அபத்தமாக இருக்கிறது. தினமும் திமுகவிற்குச் சான்றிதழ் கொடுப்பதுதான் உங்களுடைய வேலை என்றால், நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியை அப்படியே கலைத்துவிட்டுப் போய் திமுகவிலேயே சேர்ந்துவிடுங்கள்.

உங்கள் கட்சி, விஜய்யை ஆதரிப்பது என்று ஒரு தீர்க்கமான முடிவு எடுத்த பிறகு, இப்படித் தினமும் போய் திமுகவிற்குச் சான்றிதழ் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடாது. நீங்கள் ஒரு தெளிவான ஸ்டாண்ட் எடுக்க வேண்டும், மக்கள் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு அந்த அளவிற்குத் திமுகவின் மேல் காதல் அப்படியே பொங்கி வழிகிறது என்றால், நீங்கள் ஏன் விஜய் கிட்ட வந்தீர்கள்? நேரடியாகத் திமுகவிடமே போய் சேர்ந்திருக்கலாமே? இது ஒரு மிக நெருக்கடியான, இரண்டு கெட்டான் நிலைமை.

ஏனெனில், விஜய்யைப் பொறுத்தவரை, இவர்களைத் தன் பக்கத்தில் வைத்துக் கொண்டு இவர்கள் தினமும் திமுகவிற்குச் சான்றிதழ் கொடுப்பார்கள் என்றால், அது தவெகவிற்கும் விஜய்க்கும் ஒரு அவமானகரமான விஷயம். இதை அவர்கள் அனுமதிக்கக் கூடாது; கூட்டணி கட்சிகளை இது பலவீனப்படுத்திவிடும்."

விஜய் அரசு எப்போது கவிழும்

தவெகவை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதில் திமுக மிக உறுதியாக இருக்கிறது. "விஜய் அரசு எப்பொழுது வேண்டுமானாலும் கவிழ்ந்துவிடும்" என்று தினந்தோறும் ஸ்டாலின் 4 தடவை பேசுகிறார். 6 மாதத்தில் கவிழ்ந்துவிடும், 3 மாதத்தில் கவிழ்ந்துவிடும், விஜய் அரசு எப்பொழுது வேண்டுமானாலும் கவிழும், தேர்தலுக்குத் தயாராகுங்கள்' என்று தினந்தோறும் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கிறார்.

அந்தத் திமுகவோடு எங்களுக்கு இன்னும் தோழமை இருக்கிறது, திமுக ஒரு முற்போக்கான கட்சி என்றெல்லாம் முத்தரசன் போன்ற தலைவர்கள் பேசுவது, தற்போதைய கூட்டணியை மிகக் கடுமையாகப் பலவீனப்படுத்திவிடும். இதை தவெக கண்டிப்பான முறையில் அனுமதிக்கக் கூடாது; அனுமதிக்க மாட்டார்கள்." என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+